July 30, 2012

இன்டர்நெட் அடிக்ஷன் சிண்ட்ரோம் - FACEBOOK



எச்சரிக்கை !

வழமையான வலைமேய்ச்சலில் நல்லதையே தேடும் நன்னோக்கில் கிடைத்த அதிர்ச்சி தகவல்தான் இது. ஒவ்வொருவரும் அவசியம் இதன் விபரீத வீரியம் அறிந்து விழித்துக் கொள்ள வேண்டும். வேலி போட்டிருக்கிறோம் வேட்டியை இறுக்கி கட்டியிருக்கிறோம் என்று தூங்கிவிடாதீர்கள் ! அவைகள் என்றும் அறுபடலாம் அவிழ்க்கப்படலாம்.

ரமளானும் அதன் சிறப்புகளும் - S. ALAUDEEN

அல்லாஹ்வின் திருப்பெயரால். . . 


அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இறைவனின் சாந்தியும்சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)  ஒவ்வொரு வருடமும் நம்மை வந்து அடையும் புனித மாதத்தை வரவேற்பதில் மிக அதிக அளவில் நாம்  மகிழ்ச்சி  அடைகிறோம். இன்னும் சில தினங்களில் நம்மை வந்து அடைய இருக்கும் ரமளானைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

மோடி மனிதநேயத்தின் எதிரி -சமாஜ்வாதிக் கட்சியின் ஆஸம்கான் பேட்டி !


Azam Khanலக்னோ:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடியை “நை துனியா” என்ற உருது பத்திரிகையின் ஆசிரியரான ஷாஹித் சித்தீகி பேட்டியெடுத்து வெளியிட்டிருந்தார். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. முஸ்லிம்களின் வாக்குவங்கியை பெற்று ஆட்சிக்கு வந்துள்ள சமாஜ்வாதிக் கட்சியை சார்ந்த ஒருவர் மோடி போன்ற கொலைக்கார பாவியை பேட்டியெடுத்து முஸ்லிம்களின் மத்தியில் எதிர்ப்பை கிளப்பியது. இதனால் அஞ்சிய சமாஜ்வாதிக்கட்சி, ஷாஹித் சித்தீகி தங்களது கட்சியைச்
சார்ந்தவர் அல்லர் என அறிக்கை

பிரேசிலில் மிக வேகமாக வளரும் இஸ்லாம் !


Muslim performing prayer in Brazilரியோடி-ஜெனீரா:பிரேசிலில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரேசிலின் ரியோடி ஜெனீரா நகரத்தில் இஸ்லாத்தின் வளர்ச்சி அதிகமாக உள்ளது. பல்வேறு கலாச்சாரங்களை கொண்ட பிரேசில் சமூகம் இஸ்லாத்தின் பால் கவரப்படுவதற்கோ, இஸ்லாத்தின்

July 27, 2012

அஸ்ஸாம் கலவரம்:40 பேர் மரணம் – 2 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர் !


ethnic riots in Assam state killed at least 40கொக்ராஜர்/புதுடெல்லி:அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்துவரும் வகுப்புக் கலவரத்தில் மேலும் எட்டுபேர் பலியாகியுள்ளனர். இத்துடன் மரண எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. கலவரத்தில் 2 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர்.நான்கு மாவட்டங்களில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது. வன்முறையாளர்களை கண்டால்
சுட உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா ?



 இந்தியாவின் 13-வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி நேற்று பதவியேற்றார். உடனடியாக நேற்று அவர் ஜனாதிபதி மாளிகையில் குடியேறினார். 340 அறைகள், 200-க்கும் மேற்பட்ட வேலைக்காரர்கள் கொண்ட மாளிகையில் அடுத்த 5 ஆண்டுக்கு அவர் குடியிருப்பார். இந்த நிலையில் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி மற்றும் அவரது மனைவி சுவ்ரா முகர்ஜியின் சொத்து மதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  அதில் பிரணாப் முகர்ஜிக்கு ரூ. 1.26 கோடி, சுவ்ரா முகர்ஜிக்கு ரூ. 1.78 கோடி சொத்துக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் இருவரின் மொத்த சொத்து மதிப்பே ரூ. 3 கோடியே 4 லட்சம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

மாணவியை பலி வாங்கிய பள்ளிப் பேருந்து: தகுதிச் சான்று வழங்கிய ஆர்.டி.ஓ. சஸ்பெண்ட் !

மாணவியை பலி வாங்கிய பள்ளிப் பேருந்து: தகுதிச் சான்று வழங்கிய ஆர்.டி.ஓ. சஸ்பெண்ட்சென்னை தாம்பரம் அருகே முடிச்சூரில் பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக தவறி விழுந்த குழந்தை சுருதி அதே பஸ்சில் அடிபட்டு இறந்தார். இதையடுத்து அந்த பேருந்தை பொதுமக்கள் அடித்து நொறுக்கி தீ வைத்து எரித்தனர். இந்த விபத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் போராட்டமும் நடத்தினர்.

July 21, 2012

ரமலான் ஏற்பாடு

முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் மாதம் இன்று துவங்கியது !


முஸ்லிம்களின் புனித மாதமான ரம்சான் மாதம் இன்று துவங்குகிறதுஇஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான்  மாதம் ஞாயிற்றுக்கிழமை (நாளை) துவங்கும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ரமலான்  மாதம் இன்று துவங்குவதாக பதேபுர் மசூதியின் இமாம் மவுலான முப்தி முகரம் முகமது நேற்று நள்ளிரவு அறிவித்தார்.இதுபற்றி பேசிய முகரம், 'வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால், பிறையைக் காண இயலவில்லை. எனவேதான் ஞாயிற்றுக்கிழமை ரமலான் துவங்கும் 

முஸ்லிம் இளைஞரை பொய்வழக்கில் சிக்கவைத்த போலீஸ்: மக்கள் கொந்தளிப்பு !


புதுடெல்லி:பாகிஸ்தான் உளவாளி என்ற பெயரால் முஸ்லிம் இளைஞர் ஒருவரை பொய்வழக்கில் கைது செய்ததை எதிர்த்து மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.உத்தரபிரதேசத்தைச் சார்ந்த டெல்லி ஷாஹின்பாகில் சொத்துக்கள் விற்பனையில் ஈடுபட்டுவரும் சுபைர் கான் என்ற இளைஞரை போலீஸ் பாகிஸ்தான் உளவாளி என்ற பெயரால்

அப்துல்கலாமின் பேஸ்புக் பக்கத்தில் 10 லட்சம் பேர் இணைந்தனர் !


அப்துல்கலாமின் பேஸ்புக் பக்கத்தில் 10 லட்சம் பேர் இணைந்தனர்2020-ல் இந்தியா வல்லரசு ஆவது இளைஞர்களின் கையில்தான் உள்ளது. எனவே இந்த இலக்கை அடைய இளைஞர்கள் கனவு காண்பதுடன், முழு ஈடுபாட்டுடன் உழைக்க வேண்டும்’ என்று அணு விஞ்ஞானியும் முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல்கலாம் அறிவுறுத்தி வருகிறார்.