March 14, 2013

புதிய போப்: தீர்மானம் ஏற்படவில்லை - கான்க்ளேவ் இன்றும் தொடரும்!



வாடிகன்: சர்வதேச கத்தோலிக்க சபையின் ஆன்மீக தலைவரான போப் ஆண்டவரை தேர்வுச் செய்யும் நடைமுறையான கான்க்ளேவின்(இரகசியக் கூட்டம்) முதல் நாள் வாக்கெடுப்பில் போப் ஆண்டவரை தேர்வுச் செய்யமுடியவில்லை. சிஸ்டெய்ன் சாப்பலின் புகைபோக்கியில் இருந்து வெளியாகும் கறுப்பு புகைதான் முதல் முடிவாக வெளிவந்தது. இதன் பொருள் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதாகும். வாக்கெடுப்பு இன்றும் தொடருகிறது. மதியத்திற்கு முன்பு இரண்டு முறையும், மதியத்திற்கு பிறகு இரண்டு முறையும் வாக்கெடுப்பு நடக்கும். கர்தினால்களைப் பொறுத்தவரை 60 கர்தினால்கள் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள். அதிலும் 21 பேர்கள் இத்தாலியைச் சேர்ந்தவர்கள். தென் அமெரிக்காவில் 19 கர்தினால்களும், வட அமெரிக்காவில் 14 கர்தினல்களும், ஆப்பிரிக்காவில் 11 கர்தினால்களும், ஆசியாவில் 10 கர்தினால்களும், ஆஸ்திரேலியாவில் 1 கர்தினாலும் இந்த தேர்வில் பங்கேற்றுள்ளார்கள்.


கடந்த 600 ஆண்டுகளாக கர்தினால்களாக இருப்பவர்களே போப்பாண்டவர்களாக தேர்வுச் செய்யப்படுகின்றார்கள். கர்டினால்கள் அனைவரும் வாடிகன் புனித பீட்டர் தேவாலயத்தில் உள்ள சிஸ்டேன் சாப்பல் என்ற அறையில் கூடி, தேர்தல் நடைமுறையத் தொடங்குகிறார்கள். இந்த நடைமுறையின்போது, செல்போன் உள்ளிட்ட எந்த தொலைத் தொடர்பு சாதனத்தையும்
அந்த அறைக்குள் கொண்டு செல்ல முடியாது. அந்த அளவுக்கு தேர்தல் நடைமுறைகள் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும். ஒரு வாக்குச் சீட்டில் யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை கார்டினல்கள் எழுத வேண்டும். அந்த வகையில், 3-ல் இரு பங்கு வாக்கைப் பெறும் கார்டினலே போப் ஆண்டவராக அறிவிக்கப்படுவார். யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை எனில் அந்த வாக்குச் சீட்டுகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, ஒரு வேதிப்பொருளுடன் சேர்த்து எரிக்கப்படும். அப்போது, அந்த அறையின் மேலுள்ள புகைப் போக்கியின் வழியாக கரும்புகை வெளியேறும். மீண்டும் வாக்கெடுப்பு நடக்கும். யாராவது ஒருவருக்கு 3-ல் இரு பங்கு வாக்குக் கிடைக்கவில்லை எனில் மீண்டும் வாக்கெடுப்பு நடக்கும். 30 முறை தொடர்ந்து யாருக்கும் தேவையான வாக்குகள் கிடைக்காவிட்டால், 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகள் கிடைத்தால் வெற்றி என்ற அடிப்படையில், வாக்கெடுப்பு தொடரும். போப்பாண்டவர் தேர்வு செய்யப்பட்டால், வாக்குச் சீட்டுகள் மட்டும் எரிக்கப்பட்டு, புகைப் போக்கி வழியாக வெண்புகை வெளியேற்றப்படும்.இதைத் தொடர்ந்து போப்பாண்டவராகத் தேர்வு செய்யப்பட்டவர் உலகத்துக்கு அறிமுகம் செய்து வைக்கப்படுவார்.

No comments:

Post a Comment