சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான பணியாளர் தேர்வு குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன..
கணினி மூலம் நடைபெறும் ஆன்லைன் தேர்வு மார்ச் 31ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்வுக்கான நுழைவுச் சீட்டை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் www.chennaimetrorail.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நுழைவுச்சீட்டு, மார்ச் 15-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையில் இணைய தளத்தில் கிடைக்கும். இந்த தேர்வு குறித்த கூடுதல் விவரங்களை அறிய 044 - 2843 0020 என்ற எண்ணுக்கு அழைத்து 145 என்ற விரிவாக்க எண்ணை தொடர்பு கொள்ளவும்.
மேலும் 94458 68291 அல்லது 98848 55620 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு அறியலாம். அல்லது recruit.cmrl@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.
அல்லது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ஹரினி டவர்ஸ், எண் 7, கான்ரன் ஸ்மித் சாலை, கோபாலபுரம், சென்னை - 600 086 என்ற முகவரியை நேரில் அணுகவும்.
Thanks, adiraiexpress`
No comments:
Post a Comment