April 22, 2013

குஜராத் கலவரக்காரர்கள் தண்டிக்கப்பட வில்லை விசாரணை அமைப்புகள் மோடிக்கு ஆதரவாக செயல்படுகின்றன அமெரிக்க அரசின் அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்:




                                  modi
     குஜராத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற முஸ்லீம்களுக்கு எதிரான இனப்படுகொலையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பெண்கள் கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர். உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த இனப்படுகொலை குறித்து அமெரிக்காவின் நாடாளுமன்றத்தின் உத்தரவுப்படி அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது. 60 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் கலவரத்திற்கு முக்கிய காரணமாக நரேந்திர மோடி தண்டிக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

காவல் நிலையத்தில் கணபதி ஹோமம்..!…?


காவல் நிலையத்தில் கணபதி ஹோமம்..!…?
முத்துப்பேட்டை காவல் நிலையம் உட்பட்ட பகுதியில் சமீப காலமாக கொலை, கொள்ளை சம்பவ வழக்குகள் அதிகமாகி காவல் நிலையம் எந்த நேரமும் ரேஷன் கடை போல் மக்கள் குவிந்து காணப்படுகிறது. இதனால் காவலாளர்கள் எந்த நேரமும் டென்ஷனாக காணப்படுகிறார்கள்.
36 காவலாளர்கள் பணியாற்றக்கூடிய இந்த காவல் நிலையத்தில் ஏழு காவலாளர்கள் மட்டுமே

April 19, 2013

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் மீலாது விழா! அனைத்து பரிசுகளையும் தட்டிச்சென்ற மாணவிகள்.


  


நமதூர் அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் இன்றுகாலை 10.30  மணியளவில் நவினப்படுத்தப்பட்ட கலையரங்கில் முதல் நிகழ்ச்சியாக மீலாத் விழா நடைபெற்றது. 

இந்த மீலாது விழாவிற்கு MKN ட்ரஸ்டின் தற்காலிக நிர்வாகி நீதியரசர் K. சம்பத் அவர்கள் தலைமை தாங்கினார்.விழாவின் முன்னதாக பேரா.M.A.முகம்மது இத்ரீஸ் (அரபித் துறை தலைவர்) அவர்களால் கிராத் ஓதப்பட்டு நிகழ்ச்சி ஆரம்பம் செய்யப்பட்டது.இதன் பின்பு கல்லூரி முதல்வர் முனைவர் A. ஜலால் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.

April 16, 2013

மருதநாயகம் சரித்திர வரலாறு



வரலாற்றின் பக்கங்களில் புழுதி படிவதும், காலம் அதனை துடைத்து மானுடத்தின் பார்வைக்கு கொண்டு வருவதும் எப்போதும் நிகழக் கூடியதாகவே இருக்கிறது.வரலாற்றுப் பக்கங்களிலிருந்து கிட்டத்தட்ட மறைந்து விட்ட ஒரு வீர காவியம் கான் சாஹிபுடையது.
ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து தனது தனித்திறமையினால் மதுரையின் மன்னராக ஆனவர் வீரர் கான் சாஹிப். ஆங்கில அரசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய இவர் சில துரோகிகளின் சூழ்ச்சியினால் சிறைப்பிடிக்கப் பட்டு ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டார்.

ஒரு தீமை சட்டபூர்வமாக அரங்கேறுகிறது!



மது: தீமைகளின் உறைவிடம்.  இது நோய், வறுமை, ஒழுக்கக் கேடு, குற்றச் செயல், வன்முறை, கொலை, கொள்ளை, குடும்ப சீரழிவு என்று பல கேடுகளை உண்டாக்குகிறது.   

இது உண்டாக்கும் நோய்கள்: உணவு குழாயை அரிக்கிறது, ஜீரண உறுப்புகளின் ஆற்றலை குறைக்கின்றது, வயிற்றில் புண்ணை  ஏற்படுத்தி, இதுவே பிற்காலத்தில் புற்று நோய் உண்டாக காரணமாக மாறுகிறது.

மேலும், கலீரல் பாதிப்பை உண்டாக்கி, மூளையை செயலிழக்க செய்கிறது, இதயத்தை வலுவிழக்க செய்கிறது, ரத்த குழாய்களை சேதமடைய வைக்கிறது, மறதியை உண்டாகிறது.  இப்படி படிப்படியாக மனிதனை கொல்லும் பல்வேறு நோய்களை உண்டாக்குகிறது.

April 14, 2013

பல முறை எச்சரித்தும் பெண் கலெக்டர்களை வர்ணித்த உ.பி. அமைச்சர் அதிரடி நீக்கம் !



  • லக்னோ, - பெண் கலெக்டர்களின் அழகை வர்ணித்த உத்தர பிரதேச அமைச்சர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநில அரசில் காதி துறை அமைச்சராக இருந்தவர் ராஜா ராம் பாண்டே. பிரதாப்கர் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 

April 10, 2013

ஸுபுஹ் தொழுகையும் நாமும் ???



ஸுபுஹ் தொழுகையும் நாமும் ???

அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில் பல மாற்றங்களை அல்லாஹ் அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது.

வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள்; மாறாகஅதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப் பெயர் சூட்டுகின்றது.

ரமளான் அல்லாத நாட்களில் ஸுபுஹ் தொழுகையின் போது பள்ளிவாசலின் நிலையைப் பாருங்கள். பரிதாபமாக இருக்கும். சில பள்ளிவாசல்களில் ஒரு வரிசைகூட முழுமையாக இருக்காது. இதற்காகவா இவ்வளவு பொருள் செலவில் பரந்து விரிந்த பள்ளிவாசல்களைக் கட்டினோம்..?

ஒரு நடிகை உண்மையான நாயகியாக: Firaaq (2009) – திரைப்பார்வை




முதலில் ஒரு வண்டி நிற்கிறது வண்டியில் இருந்து உடல்கள் கொட்டப்படுகிறது. இருவர் அந்த உடல்களுக்கு இறுதி மரியாதை செலுத்தும் விதமாக அடக்கம் செய்து கொண்டிருக்கும் போதே இன்னொரு வண்டியிலும் பிணக்குவியல் வந்து கொட்டிவிட்டு போகிறது.
எல்லாமே இஸ்லாமியர்களின் உடல். அந்த குவியலில் ஓர் இந்து பெண்ணின் உடலை பார்த்தவுடன் அடக்கம் செய்து கொண்டிருந்த ஒருவனுக்கு கோபம் வந்து இறந்த உடலென்றும் பார்க்காமல் கடப்பாரையால் வெட்ட போகின்றான். இப்படி தொடங்குகிறது முதல் காட்சி. நடித்தவர்கள் நம்ம ஊர் நாசரும் இன்னொரு இந்தி நடிகரும்.

உண்மைக்கு கிடைத்த இன்னொரு வெற்றி...!





ஜெய்ப்பூரிலுள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் பொறியாளர் ரஷீத் ஹுசைன் என்பவர் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

2008 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் நாள் ஜெய்ப்பூரில் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. வழக்கம் போல் காவல்துறையினர் அப்பாவிகளைத் துன்புறுத்தத் தொடங்கினர்.

குண்டுவெடிப்புச் சம்பவத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாத பொறியாளர் ரஷீத் ஹுசைனையும் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று பத்து நாள்கள் காவலில் வைத்திருந்தனர்.

பிறகு அவர் மீது எந்த தவறும் இல்லை என்றுகூறி அவரை விடுதலை செய்து அனுப்பி விட்டனர்.

இந்திய இராணுவத்தின் இரட்டை நிலை!


இந்திய இராணுவத்தின் இரட்டை நிலை!

இஜாஸ் அஹ்மத் மிர்ஸா
2012 ஆகஸ்ட் 29 அன்று பெங்களூரிலிருந்து காவல்துறையினர் பிடித்துச் சென்ற முஸ்லிம் இளைஞர்கள் 12 பேரில் ஒருவர்தாம் இஜாஸ் அஹ்மத் மிர்ஸா. பத்திரிகையாளர்கள், விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர்கள் உள்பட முக்கியப் பிரமுகர்கள் சிலரைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிக் கொண்ருந்தனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பயங்கரவாதத் தடைச் சட்டப் பிரிவுகளின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.