April 22, 2013

காவல் நிலையத்தில் கணபதி ஹோமம்..!…?


காவல் நிலையத்தில் கணபதி ஹோமம்..!…?
முத்துப்பேட்டை காவல் நிலையம் உட்பட்ட பகுதியில் சமீப காலமாக கொலை, கொள்ளை சம்பவ வழக்குகள் அதிகமாகி காவல் நிலையம் எந்த நேரமும் ரேஷன் கடை போல் மக்கள் குவிந்து காணப்படுகிறது. இதனால் காவலாளர்கள் எந்த நேரமும் டென்ஷனாக காணப்படுகிறார்கள்.
36 காவலாளர்கள் பணியாற்றக்கூடிய இந்த காவல் நிலையத்தில் ஏழு காவலாளர்கள் மட்டுமே
பணியாற்றுவதாக தெரிகிறது. இதனால் ஆள் பற்றாக்குறையால் பல்வேறு வழக்குகள் தேங்கம் அடைந்து உள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பெண் எரித்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. நான்கு குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு மாயமான பெண் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. சமீபத்தில் ஒரு வங்கி வாசலில் ஒரு ஆசிரியரிடம் 77 ஆயிரம் கொள்ளை அடித்த குற்றவாளி யார் என்று தெரியவில்லைஇ இது போன்ற சம்பங்களால் முத்துப்பேட்டை காவலாளர்களுக்கு பெரும் மனஊளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், இங்கு பணியாற்றும் பல காவலாளர்கள் டிரான்பர் வேண்டி உயர் அதிகாரிகளிடம் விண்ணப்பத்தும் பதில் கிடைக்கவில்லை. இதனால் பணியாற்றவே விரும்பம் இல்லாமல் இருந்து வருவதால் மன நிம்மதிக்காக கணபதி ஹோமம் நடத்த முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 19.4.13 காலை நாச்சிக்குளம் சட்டநாதசுவாமி குருக்களால் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் தலைமையில், சப்இன்ஸ்பெக்டர்கள் உமா சங்கரி, இளங்கோவன் மற்றும் காவலாளர்கள் முன்னிலையில் கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. பின்னர், சட்ட நாத சுவாமி புனித தீர்த்ததை காவல் நிலையம் முழுவதும் தெளித்தோடு காவல் நிலைய வளாகம் மற்றும் வாசல் பகுதியில் மந்திரம் ஓதி புனித நீரை தெளித்தார். இதனை அப்பகுதி பொது மக்கள், வியாபாரிகள், பயணிகள் கூடி நின்று வேடிக்கை பார்த்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காவல் நிலையத்திற்கு வரும் புகார்களை கவனத்துடன் பொறுப்புடன் எடுத்து விசாரித்தால் புகார்களும் குறையும் டென்சனும் இருக்காது. அதனை விட்டு விட்டு மதம் சார்ந்த ஒரு நிகழ்வினை ஏற்படுத்தி இருப்பது கண்டிக்கிறோம் என்று பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் கூறி உள்ளனர்.
படம் செய்தி : முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் கணபதி ஹோமம் நடத்தி விட்டு சட்டநாத சுவாமி குருக்கள் தனது டூ வீலரை எடுத்து செல்லும் காட்சிகள்.

No comments:

Post a Comment