நமதூர் அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் இன்றுகாலை 10.30 மணியளவில் நவினப்படுத்தப்பட்ட கலையரங்கில் முதல் நிகழ்ச்சியாக மீலாத் விழா நடைபெற்றது.
இந்த மீலாது விழாவிற்கு MKN ட்ரஸ்டின் தற்காலிக நிர்வாகி நீதியரசர் K. சம்பத் அவர்கள் தலைமை தாங்கினார்.விழாவின் முன்னதாக பேரா.M.A.முகம்மது இத்ரீஸ் (அரபித் துறை தலைவர்) அவர்களால் கிராத் ஓதப்பட்டு நிகழ்ச்சி ஆரம்பம் செய்யப்பட்டது.இதன் பின்பு கல்லூரி முதல்வர் முனைவர் A. ஜலால் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.
இந்த விழாவிற்கு சிறப்பு பேச்சாளராக மவ்லவி ஹாபிழ் ஹாஜி M.செய்யது அஹமது (தலைவர்,தஞ்சை மாவட்ட ஜமாத்துல் உலமா,அவர்கள் அழைக்கப்பட்டார்கள்.
இந்த விழாவில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பேச்சுப் போட்டியில் வள்ளல் பெருமானார் என்ற தலைப்பில் பேசி முதல் பரிசைB.நயிமுன்னிஷா.,இரண்டாம் ஆண்டு M.Sc., கணிதப் பிரிவு மாணவியும்,
இரண்டாம் பரிசை A.சுமையா முதலாம் ஆண்டு B.Sc., கணிதப் பிரிவு மாணவியும், '
மூன்றாவது பரிசினை A.ஜுவைரியா, முதலாம் ஆண்டு B.Sc., கணிதப் பிரிவு மாணவியும் தட்டி சென்றனர்.
சிறப்பு பரிசு மதிவாணன் இரண்டாம் ஆண்டு B.Sc கணிபொறி பிரிவு மாணவருக்கு வழங்கப்பட்டது.
கட்டுரை போட்டியில் பெருமானார் அளித்த பெண்ணுரிமைகள் என்ற தலைப்பில் வெற்றி பெற்றவர்கள்.,
- M .மீனாட்சி.,இரண்டாம் ஆண்டு ஆங்கிலப் பிரிவு மாணவி,
- K . நிரோஜா, முதலாம் ஆண்டு மாணவி,
- P .ரஞ்சிதா., முதலாம் ஆண்டு மாணவி
இந்த விழாவில் இணைப்புரை பேரா.கா.அஹமது கபீர் (தமிழ் துறை)
முனைவர்.அ.கலீல் ரஹ்மான் (தமிழ் துறை தலைவர்) நன்றியுரை நிகழ்த்தினார்.
thanks adirai express
No comments:
Post a Comment