சாண்டிகோ,
வடக்கு சிலி பகுதியில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.2 ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தினால் அங்கு கட்டிடங்கள் குலுங்கியுள்ளன. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளுக்கு வந்துள்ளனர்.
நிலநடுக்கத்தினால் பெரு மற்றும் பொலுவியா பகுதிகளிலும் கட்டிடங்கள் குலுங்கியுள்ளன. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து சிலியின் வடக்கு கடற்கரை பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் இடிந்து சேதம் அடைந்துள்ளன. பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆகியுள்ளது. ராணுவம் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. நிலநடுக்கத்திற்கு 5 பேர் பலியாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். விமான நிலையங்கள், சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மின்சார சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர்.
வடக்கு கடற்கரை பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. கடற்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அங்கு சுனாமி அலைகள் எழுந்துள்ளதாகவும் அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment