July 31, 2015

அப்பாவி முஸ்லிம் யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதற்கு பான் கி மூன் அதிருப்தி

மும்பை குண்டு வெடிப்பு தீவிரவாதி யாகூப் மேமன் நேற்று தூக்கிலிடப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரிய யாகூப் மேமன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. யாகூப் மேமனின் இறுதி கருணை மனுவையும் ஜனாதிபதி நிராகரித்ததால், அவருக்கு நேற்று அதிகாலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அதற்கு பின்னர், ஐ.நா. சபை பொதுச் செயலாளரின் செய்தி தொடர்பாளரான ஸ்டெபேன் டுஜாரிக்கிடம் இது தொடர்பாக இந்தியாவின் பிரபல செய்தி நிறுவனம் கருத்து கேட்டது. இதற்கு பதில் அளித்த அவர், நடந்ததை நாங்கள் அறிவோம். ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் பான் கி மூன், மரண தண்டனைக்கு எதிரானவர். இந்த விவகாரத்திலும் அவரது நிலைப்பாடு இதுதான் என்று குறிப்பிட்டார்.
மரண தண்டனை விதிப்பது கொடூரமான, மனிதத்தன்மையற்ற செயல். இதை உலகின் அனைத்து நாடுகளும் ஒழிக்க வேண்டும். 21-ம் நூற்றாண்டில் இதைப்போன்ற தண்டனைகளுக்கு இடமில்லை என பல்வேறு தருணங்களில் பான் கி மூன் குறிப்பிட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

1 comment: