January 1, 2022

மல்லிப்பட்டிணத்தில் நவீன மீன் விற்பனை நிலையம்..!

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் கஜா புயல் மறுசீரமைப்பு மற்றும் புணரமைப்பு திட்டத்தின் கீழ் நவீன மீன் விற்பனை நிலையத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

பல்வேறு மீன் வகைகள், இறால், நண்டு மற்றும் கணவாய் ஆகியவை குறைந்த விலையில் இங்கு கிடைக்கும்.திறப்பு விழாவையொட்டி ஜமாஅத்ததார்கள்,மீனவ சங்க பிரதிநிதிகள்,ஊர் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

July 31, 2015

அப்பாவி முஸ்லிம் யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதற்கு பான் கி மூன் அதிருப்தி

மும்பை குண்டு வெடிப்பு தீவிரவாதி யாகூப் மேமன் நேற்று தூக்கிலிடப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரிய யாகூப் மேமன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. யாகூப் மேமனின் இறுதி கருணை மனுவையும் ஜனாதிபதி நிராகரித்ததால், அவருக்கு நேற்று அதிகாலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அதற்கு பின்னர், ஐ.நா. சபை பொதுச் செயலாளரின் செய்தி தொடர்பாளரான ஸ்டெபேன் டுஜாரிக்கிடம் இது தொடர்பாக இந்தியாவின் பிரபல செய்தி நிறுவனம் கருத்து கேட்டது. இதற்கு பதில் அளித்த அவர், நடந்ததை நாங்கள் அறிவோம். ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் பான் கி மூன், மரண தண்டனைக்கு எதிரானவர். இந்த விவகாரத்திலும் அவரது நிலைப்பாடு இதுதான் என்று குறிப்பிட்டார்.
மரண தண்டனை விதிப்பது கொடூரமான, மனிதத்தன்மையற்ற செயல். இதை உலகின் அனைத்து நாடுகளும் ஒழிக்க வேண்டும். 21-ம் நூற்றாண்டில் இதைப்போன்ற தண்டனைகளுக்கு இடமில்லை என பல்வேறு தருணங்களில் பான் கி மூன் குறிப்பிட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

செல்போன் கோபுரம் மீதேறி போராடிய மது ஒழிப்புப் போராளி சசிபெருமாள் உயிரிழப்பு...

மதுவிலக்கு போராளி காந்தியவாதி சசிபெருமாள், டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான தனது போராட்டத்தின்போது உயிரிழந்தார். அவருக்கு வயது 60.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே உண்ணாமலை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி உண்ணாமலை பேரூராட்சித் தலைவர் ஜெயசீலன் தீக்குளிப்பு போராட்டத்தை அறிவித்திருந்தார். இப்போராட்டத்தில் மதுவிலக்கு போராளி சசிபெருமாளும் கலந்து கொள்வார் எனக் கூறியிருந்தார்

July 28, 2015

AIRCel நிறுவனம் 3G சேவையை தொடங்கியது...


மல்லிப்பட்டினத்தில் பெரும்பாலான மக்கள் இன்டர்நெட் வசதி மூலமாக தங்களது வேலை , படிப்பு ,  மற்றும் சமூக வலைத்தளங்களை உபயோகித்து வருகின்றனர்....

April 5, 2014

மார்க்க அறிஞர் கைதை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!


நாடறிந்த மார்க்க அறிஞரும் ஹைதராபாத் ஜாமிஆ அஷ்ரஃபுல் உலூம் அரபிக் கல்லூரி முதல்வருமான மவுலானா அப்துல் கவி அவர்களை பொய் வழக்கில் கைது செய்ததைக் கண்டித்து, சென்னையில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் கட்சிகள் சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.