June 17, 2012
பிரணாப் முகர்ஜியின் வெற்றி வாய்ப்பை தடுக்கும் ஒரே நபர் அப்துல் கலாம்தான் !
ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய கட்சி பலத்தின் அடிப்படையில் பிரணாப் முகர்ஜிக்கு வெற்றிவாய்ப்பு இருந்தாலும், அப்துல் கலாம் நிறுத்தப்பட்டால் அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட ஓட்டபோட வாய்ப்புள்ளது.
அப்துல் கலாமுக்கு அனைத்து கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் மத்தியிலும் மரியாதை உள்ளது. அவர் எந்த சர்ச்சையிலும் சிக்காதவர் என்பதால் அவரை பலரும் ஆதரிக்க தயாராக உள்ளனர். எனவே கட்சி கட்டுப்பாட்டையும் மீறி அவருக்கு ஆதரவாக ஓட்டு போட்டால் பிரணாப் முகர்ஜிக்கு பாதிப்பு ஏற்படலாம்.
வெள்ளை மாளிகையில் ஒபாமாவை அதிர வைத்த இணையதள நிருபர் !
வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, அதிபர் ஒபாமா அறிக்கை படித்துக் கொண்டிருந்த போது நிருபர் ஒருவர் குறுக்கிட்டு கேள்வி மேல் கேள்விகள் கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் உள்ள ரோஸ் கார்டனில் நேற்று பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பல
முன்னணி பத்திரிகைகளை சேர்ந்த நிருபர்கள், கேமராமேன்கள் குவிந்திருந்தனர். இந்த நிகழ்ச்சி டிவியில் நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு வந்த அதிபர் ஒபாமா, அமெரிக்காவில் தங்கியுள்ள வெளிநாட்டு இளை ஞர்கள் தொடர்பான அறிக்கை ஒன்றை வாசித்தார். புகழ்பெற்ற சிந்தனையாளர் ரஜா கராடி மரணம் – இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒரே காரணத்தால் மறக்கப்பட்ட தத்துவஞானி !
பாரீஸ்:மிகப்பெரும் சிந்தனையாளரும், தத்துவ ஞானியுமான, எழுத்தாளருமான ரோஜர் கராடி தனது 98ம் வயதில் மரணம் அடைந்தார். 1982-ம் வருடம் இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.ஊடகங்களின் நேசத்திற்குரியவர்:பல ஆண்டுகளாக ஃபிரான்ஸ் நாட்டு ஊடகங்களின் நேசத்திற்குரியவராக கராடி திகழ்ந்தார். அவரது எழுத்துக்களும், சிந்தனைகளும், மற்றும் அரசியல் அவரது
புதுக்கோட்டை இடைத்தேர்தல் முடிவு: ஓர் ஆண்டு சாதனை – ஜெ!, அ.தி.மு.கவுக்கு பாடம் – விஜயகாந்த் !
சென்னை:புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் வெற்றிப் பெற்றது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெ.ஜெயலலிதா, அதிமுக ஆட்சியின் ஓராண்டு சாதனைகளை, வளர்ச்சித் திட்டங்களை மனதில் நிலை நிறுத்தி கட்சியின் வேட்பாளர் கார்த்திக்
தொண்டைமானை மகத்தான வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.எகிப்தில் பாராளுமன்றம் கலைப்பு! – மீண்டும் புரட்சியை நோக்கி எகிப்து?
கெய்ரோ:முற்றிலும் எதிர்பாராத விதமாக இஃவானுல் முஸ்லிமீன் பெரும்பான்மை இடங்களை பெற்றுள்ள பாராளுமன்றத்தை கலைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாராளுமன்றத்தில் மூன்றில் 2 பகுதி இடங்களுக்கு மட்டுமே அரசியல் கட்சிகள் போட்டியிட இயலும் என்ற சட்டம் மீறப்பட்டதாக கூறி மூன்றில் ஒரு பகுதி பாராளுமன்ற உறுப்பினர்களின் தகுதியை உச்சநீதிமன்ற ரத்துச் செய்வதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து
அலாஸ்காவில் உள்ள பனிக் குகைகள்: காணமுடியாத புகைப்படம் !
அலாஸ்காவில் உள்ள பனிமலைகள் உலகப்புகழ்பெற்றவை. பல மில்லியன் ஆண்டுகளாக அவை உறை நிலையில் காணப்படுகிறது. புவிமட்டத்துக்கு அடியில் காணப்படும் வித்தியாசமான பனிக் குகைகளை ஒரு நபர் படம்பிடித்துள்ளார். கிரிஸ்டல் போன்ற வடிவமைப்பில் அமைந்துள்ள இந்தப் பனிக் குகைகள், சூரிய ஒளிபட்டதும் வித்தியாசமான நிறங்களில் ஒளிரும் தன்மை
கொண்டவை. இந்த அரிய புகைப்படங்களை அதிர்வின் வாசகர்களுக்காக இணைத்துள்ளோம். ஐரோப்பிய நாடுகளின் நிதி நெருக்கடி காரணத்தால் நோபெல் பரிசுத் தொகை குறைப்பு !
ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் நிதி நெருக்கடி காரணமாக, நோபல் பரிசின் ரொக்கத் தொகை, 20 சதவீதம் வரை குறைக்கப்பட உள்ளது.
ஐ.நா எச்சரிக்கையை மீறி வடகொரியாவுக்கு ஏவுகணை வாகனத்தை ஏற்றுமதி செய்த சீனா !
ஐக்கிய நாடுகள் சபையின் தடை இருந்தபோதிலும் அதையும் மீறி வட கொரியாவுக்கு ஏவுகணை செலுத்து வாகனத்தை சீனா ஏற்றுமதி செய்துள்ளது. இந்த விஷயம் அமெரிக்காவுக்குத் தெரிந்த போதிலும், அனாவசியமாக சீனாவை எரிச்சலூட்ட விரும்பாததால் இத்தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று ஜப்பானிய நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.ஜப்பானிய அரசு அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதிலிருந்தே வட கொரியாவுக்கு சீனா
துபாயில் சுனாமி வந்தால் மிதக்கும் வகையில் கட்டப்படும் ரூ.660 கோடி மதிப்புள்ள ஓட்டல் !
சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக துபாயில் கடலுக்கு கீழே 30 அடி ஆழத்தில் பிரமாண்ட ‘டிஸ்க்’ ஓட்டலை துபாய் அரசு ரூ.660 கோடியில் அமைக்க உள்ளது. சுனாமி போன்ற ஆபத்துகள் வந்தால், கடலுக்கு கீழ் இருக்கும் ஓட்டல் டிஸ்க் போல சுழன்று, கடல் மட்டத்துக்கு மேல் வந்துவிடும். துபாய் அரசுக்கு சொந்தமான முதலீட்டு நிறுவனம் ‘துபாய் வேர்ல்டு’. உலகிலேயே உயரமான ‘புர்ஜ் கலிபா’ கோபுரத்தை கட்டியது, பனை மரம் போன்ற ‘பாம் ஐலேண்ட்’ தீவை உருவாக்கியது, உலக மேப் போலவே கடலில் செயற்கை தீவுகளை உருவாக்கி வருவது ஆகியவை இது செயல்படுத்திய பிரமாண்ட திட்டங்கள். கடலுக்கு அடியில் பிரமாண்ட ஓட்டல் அமைக்கவும் 2 ஆண்டுகளுக்கு முன்பு
June 12, 2012
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஏற்படுத்திய புரட்சி
உலக வரலாறு பல்வேறுபட்டபுரட்சியாளர்களைக் கண்டுள்ளது. ஆனாலும், அவர்களின் புரட்சிகள் ஒரு நூற்றாண்டு நீங்குவதற்குள்ளேயே புஸ்வானமாகி, அல்லது நடைமுறைச் சாத்தியமற்றது என்பது புலனாகிப் போனதைக் காணலாம். ஆயினும், அநாதையாக பிறந்து, ஆடுமேய்த்து வளர்ந்து, எழுத வாசிக்கத் தெரியாது வாழ்ந்த அண்ணல் நபி(ச) அவர்கள் ஏற்படுத்திய வாழ்வின் சகல துறை சார்ந்த புரட்சி14 நூற்றாண்டுகள் தாண்டியும் நிலைத்து நிற்பதைக் காணலாம்.
அதிரை மக்தூம் பள்ளி நிர்வாக கமிட்டியின் அன்பான வேண்டுகோள்
அதிரை மக்தூம் பள்ளி நிர்வாக கமிட்டியின் அன்பான வேண்டுகோள்
தெளிவாக படிக்க கீழே சொடுக்கவும்
தெளிவாக படிக்க கீழே சொடுக்கவும்
ஆப்கனில் நிலநடுக்கம் - கிராமமே மண்ணோடு புதைந்ததால் 100க்கும் மேற்பட்டோர் கதி என்ன? (படங்கள் இணைப்பு)
காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் ஒரு கிராமமே புதையுண்டு நூற்றுக்கும் மேற்பட்டோர்உயிரிழந்திருப்பதாகஅஞ்சப்படுகிறது.ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதியை மையமாக கொண்டு நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 5.7 அலகுகளாப் பதிவானது.இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் பக்லான் மாகாணத்தில் புர்கா மாவட்டத்தில் உள்ள சாயி ஹசாரா என்ற மலை கிராமம்
கிரீஸ்,துருக்கி நாடுகளில் பயங்கர பூகம்பம்.பீதியில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்
கிரீஸ் மற்றும் துருக்கியில் நேற்று பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. எனினும் உயிர்ச் சேதம் எதுவும் இல்லை. இதுகுறித்து கிரீஸ் தலைநகர் ஏதென்சில் உள்ள ஜியோடைனமிக் மையம் கூறுகையில், கிரீஸ் நாட்டின் ரோத்ஸ் தீவுக்கும் துருக்கியின் மேற்கு பகுதிக்கும் இடையில் ஏஜியன் கடலில் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.8 புள்ளிகள் பதிவானது. எனினும் உயிர்ச் சேதம்
பொருட் சேதம் பற்றி உடனடி தகவல்கள் இல்லை என்று கூறியுள்ளது.இறந்து 88 ஆண்டுகளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்படும் லெனின் !
மாஸ்கோ: சோவியத் யூனியனை நிர்மானித்தவரான மாபெரும் கம்யூனிச தலைவர் லெனினின் உடல் அவர் இறந்து 88 ஆண்டுகளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்படவுள்ளது.பதப்படுத்தப்பட்ட நிலையில் கடந்த 88 ஆண்டுகளாக வைக்கப்பட்டுள்ளது லெனினின் உடல். மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் அமைந்துள்ள நினைவிடத்தில் லெனின் உடல் இத்தனை காலமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில்
பாகிஸ்தானில் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நிறுத்த முடியாது – அமெரிக்க செனட்டரின் திமிர் பேச்சு !
வாஷிங்டன்:பாகிஸ்தானில் போராளிகள் மீதான ஆளில்லா விமானத்தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்க செனட்டர் லிண்ட்ஸீ க்ரஹாம் தெரிவித்துள்ளார். ஆனால், பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவிற்கும் இடையேயான உறவு மோசமடையாமல் தொடரும் என்று அவர் கூறியுள்ளார்.லிண்ட்ஸீ க்ரஹாம் கூறியது: ஆளில்லா விமானத் தாக்குதல்கள் தொடரும்(ட்ரோன்). பாக்.அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத பழங்குடியினர்
தமிழகத்தில் பயங்கர வெடிப்பொருட்கள் பறிமுதல்! பரபரப்பை ஏற்படுத்தாத ஊடகங்கள் !
சென்னை:தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் பெருமளவிலான வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட பிறகும் அதனை ஒரு சாதாரண செய்தியாகவே ஊடகங்கள் வெளியிட்டன.அண்மையில் பா.ஜ.க மதுரை மாநாட்டிற்கு முன்பாக சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த வீரியம் குறைந்த எவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத குண்டுவெடிப்பு தொடர்பாக முஸ்லிம்கள் மீது பழியைப் போட்டு தொந்தரவுச்
சதாம் உசேன் செயலாளர் நேற்று தூக்கில் போடப்பட்டார் !
ஈராக்கில் ராணுவ ஆட்சி நடத்தி வந்த சதாம் உசேன், அமெரிக்காவுக்கு எதிரான போரில் கொல்லப்பட்டார். ரகசிய அறையில் பதுங்கி இருந்த சதாம் உசேன், 2003-ம் ஆண்டில் பிடிபட்டார்.புதிய ஆட்சியின் கீழ் அமைக்கப்பட்ட கோர்ட்டில் சதாம் உசேன் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சதாமின் வலதுகரமாகவும், நம்பிக்கைக்குரியவருமாக இருந்தவர் அவரது செயலாளர் அபேத் ஹமித் ஹமவுட்.
ஒரு நாள் பூமி வெடிச்சுச் சிதறப் போகுது பாருங்க...! இஸ்லாம் எப்போதோ சொன்னதை இப்போது கண்டு பிடித்திருக்கும் கலிபோர்னிய விஞ்ஞானிகள்
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி பரப்பானது நேற்று இருந்தது போல் இன்றில்லை. இன்று இருப்பது போல் நாளை இல்லை என்ற நிலையில் புதுப்புது மாற்றங்களால் நிறைந்து கொண்டே போகிறது.. இந்த மாற்றங்கள் ரசிப்புக்குரியதோ வியப்புக்குரியதோ அல்ல... இந்த பூமிப் பந்தானது பெரும் பிரளயத்தை நோக்கிச் சென்று கொண்டே இருக்கிறது என்பதன் வெளிப்பாடுதான் இது என்கிறது அறிவியல் உலகம்
மோடியின் வற்புறுத்தலே விலகலுக்குக் காரணம் : ஜோஷி !
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் வற்புறுத்தல் காரணமாகவே பாஜகவின் பொறுப்பில் இருந்து விலகியதாக சஞ்சய் ஜோஷி கூறியுள்ளார்.
கடந்த சில நாள்களாகவே பாரதீய ஜனதா கட்சியில் நடைபெற்று வரும் உள்கட்சிப் பூசல் கடந்தவாரம் மும்பையில் நடைபெற்ற அக்கட்சியில் செயற்குழு கூட்டத்திற்குப் பின் வெளிவரத் தொடங்கியது.மும்பை செயற்குழு கூட்டத்தில் நரேந்திர மோடி கலந்துகொள்ள மாட்டார் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் அவர் கலந்து கொள்ளவே
'பெரியார் படத்தை இனி நாம் பயன்படுத்தக் கூடாது’ சீமான் கட்சியின் புதுமுடிவுக்கு காரணம் என்ன?
தமிழர்களுக்காகப் போராடுவதாகச் சொல்பவர்கள் சமீப காலமாக, பெரியாரைப் புறக்கணிப்பதும் எதிரியாகச் சித்திரிப்பதும் தொடர் கிறது. இந்தப்பட்டியலில் புதுவரவு, சீமான் நடத்தும் 'நாம்தமிழர் கட்சி’. கோவையில் கடந்த 18-ம் தேதி அந்தக் கட்சி வெளியிட்ட கொள்கை ஆவணத்தின் சில பகுதிகள் பெரியாருக்கு எதிரானவை. 'பெரியார் படத்தை இனி நாம் பயன்படுத்தக் கூடாது’ என்ற அளவுக்கு தீவிரம்.
காலர் டியூன் கொடுத்து கட்டணம் வசூலிக்கும் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு, டிராய் எச்சரிக்கை !
வாடிக்கையாளரிடம் கேட்காமலேயே காலர் ட்யூன் போன்ற மதிப்பு கூட்டு சேவைகளை (விஏஎஸ்) அளித்து கட்டணம் வசூலிக்க கூடாது என்று செல்போன் நிறுவனங்களுக்கு தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து இந்திய செல்போன் நிறுவனங்கள் சங்கத்துக்கு டிராய் கடிதம் அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:ரிங் டோன், காலர் ட்யூன் உட்பட எந்த மதிப்பு கூட்டு சேவையை யும் வாடிக்கையாளரின் அனுமதி பெறாமல் அமல்படுத்தி கட்டணம் வசூலிக்க கூடாது
என்று கடந்த ஆண்டு ஜூலை 4ம் தேதி செல்போன் நிறுவனங்களுக்கு விதிமுறை வகுக்கப்பட்டது. வாடிக்கையாளரிடம் எஸ்எம்எஸ், இமெயில், பேக்ஸ் அல்லது எழுத்துமூலம் அனுமதி பெற்ற பிறகே கட்டண சேவையை அளிக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டது.'ஜிஹாத்' - அமீர் இயக்கும் அடுத்த படம் !
கோலிவுட் எனப்படும் தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குநர்களுள் ஒருவரான அமீர் அடுத்ததாக 'ஜிஹாத்' என்னும் படத்தை இயக்கி நடிக்க விருக்கிறாராம். இப்படம் குறித்து கூறும் அமீர், நிச்சயம் இது தமிழ்த்திரை வரலாற்றில் புதிய வரலாற்றை படைக்கும் என்கிறார்.அமீர் இயக்கும் அடுத்தப் படமாக 'ஜிஹாத்' அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜிஹாத் என்பது முஸ்லிம்களின் புனிதப் போருக்குச் சொல்லப்படும் சொல்.
மார்க்க விளக்க பொதுக்கூட்டம்
இன்ஷா அல்லாஹ் 12/06/2012 அன்று இந்நிகழ்ச்சி http://mallipattinamnews.blogspot.com/ ல்
நேரலை செய்யப்படும்
June 4, 2012
இந்தியாவிற்கு செல்வோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சீன வெளியுறவு அமைச்சகம் !
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் போரட்டங்கள் வெடிப்பதால், சீனாவிலிருந்து இந்தியாவிற்கு செல்வோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அந்நாட்டு மக்களுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் வர்த்தகர்கள் சிலர் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட விவகாரத்தில், சீனா செல்ல இந்தியர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்கு பழிக்குப்பழி நடவடிக்கையாக இதுகருதப்படுகிறது.
நகீ அஹ்மத்:இன்ஃபார்மரா? இந்திய முஜாஹீதீனா?
மும்பை:2011 ஜூலை மாதம் 27 பேரின் மரணத்திற்கு காரணமான குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நகீ அஹ்மத் இந்தியன் முஜாஹிதீன் தலைவர் யாஸின் பட்கலுடன் ஃபேஸ்புக் மூலம் 2008 ஆம் ஆண்டு முதல் தொடர்புகொண்டுள்ளதாக மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படை ஏ.டி.எஸ் புதுக்கதையை தயாரித்துள்ளது.
தேமுதிகவின் 29 எம்.எல்.ஏக்களும் அதிமுக போட்ட பிச்சை : சரத்குமார்
அதிமுக போட்ட பிச்சையில் தான் தேமுதிகவுக்கு 29 எம்.எல்.ஏ.க்கள் கிடைத்தனர் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. பேசிய பேச்சு தேமுதிக வட்டாரத்தை கொதிப்படைய வைத்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)