June 17, 2012

ஐரோப்பிய நாடுகளின் நிதி நெருக்கடி காரணத்தால் நோபெல் பரிசுத் தொகை குறைப்பு !



Nobel Prize amounts to be reduced by 20 per cent
 ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் நிதி நெருக்கடி காரணமாக, நோபல் பரிசின் ரொக்கத் தொகை, 20 சதவீதம் வரை குறைக்கப்பட உள்ளது.
"டைனமைட்' என்ற வெடிமருந்தைக் கண்டுபிடித்த ஆல்பிரெட் நோபல் என்ற, ஸ்வீடன் நாட்டு அறிஞர், தன்னுடைய கண்டு பிடிப்பு அழிவு வேலைக்கு பயன்படுவதை கண்டு மனம் வருந்தினார். இதையடுத்து தனது 150 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, அமைதி பணியில் ஈடுபடுபவர்களுக்கு விருதாக அளிக்கும் படி கூறி, உயில் எழுதி வைத்து விட்டார். கடந்த, 1901ம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவம், இயற்பியல், ரசாயனம், பொருளாதாரம் போன்ற துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கும், அமைதி பணியில் ஈடுபடுபவர்களுக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு துறைக்கும், 6.4 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது. 

தற்போது ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத அளவுக்கு, நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், ஆட்குறைப்பு, ஊதியம் மற்றும் ஓய்வூதிய குறைப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிரீஸ் போன்ற நாடுகளில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் அரசு திணறி வருகிறது. தற்போதுள்ள சூழலில் நோபல் பரிசுக்கான, 6.4 கோடி ரூபாய் தொகை அளிக்க வேண்டுமா என்பது குறித்து, நோபல் பரிசு கமிட்டி கூடி ஆலோசனை நடத்தியது. எனவே, தற்போதைய பரிசு தொகையில், 20 சதவீதத்தை குறைக்க இந்த கமிட்டி திட்டமிட்டுள்ளது. இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.

No comments:

Post a Comment