June 12, 2012

பாகிஸ்தானில் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நிறுத்த முடியாது – அமெரிக்க செனட்டரின் திமிர் பேச்சு !



Lindsey Grahamவாஷிங்டன்:பாகிஸ்தானில் போராளிகள் மீதான ஆளில்லா விமானத்தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்க செனட்டர் லிண்ட்ஸீ க்ரஹாம் தெரிவித்துள்ளார். ஆனால், பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவிற்கும் இடையேயான உறவு மோசமடையாமல் தொடரும் என்று அவர் கூறியுள்ளார்.லிண்ட்ஸீ க்ரஹாம் கூறியது: ஆளில்லா விமானத் தாக்குதல்கள் தொடரும்(ட்ரோன்). பாக்.அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத பழங்குடியினர்
பகுதியில் நீடிக்கும் அச்சுறுத்தலை கையாள இது தேவையாகும்.
அல்காயிதாவும், தாலிபானும் இப்பகுதியை பாதுகாப்பானதாக கருதுகின்றன. இங்கு நடக்கும் தாக்குதல்கள் பாக். மக்களுக்கு எதிரானது அல்ல. பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவிற்கும் அச்சுறுத்தலாக விளங்கும் போராளிகளுக்கு எதிரானதுதான் இந்த ஆளில்லா விமானத்தாக்குதல் என்று க்ரஹாம் கூறியுள்ளார்.
அதேவேளையில், தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தான், அமெரிக்காவின் பொறுமையை சோதிப்பதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லியோன் பனேட்டா நேற்று கூறியிருந்தார். தாலிபான் போராளிகளுக்கு, பாகிஸ்தான் பாதுகாப்பான புகலிடத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
அமெரிக்க தலைமையிலான நேட்டோ ராணுவம், ட்ரோன்கள் என்று அழைக்கப்படும் ஆளில்லா விமானங்கள் மூலம் பாகிஸ்தானில் பழங்குடியினர் பகுதியில் போராளிகளின் மீதான தாக்குதல் என கூறிக்கொண்டு அப்பாவி மக்களை அநியாயமாக கொன்று குவித்து வருகிறது. இதற்கு பாகிஸ்தானில் பலத்த எதிர்ப்பு நிலவுகிறது.
அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தாக்குதலை நிறுத்த பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், பாகிஸ்தானின் கோரிக்கை செவிடன் காதில் ஊதிய சங்காக மாறியுள்ளது.

No comments:

Post a Comment