June 1, 2012

சர்வதேச சட்டத்தை இந்தியா மீறி விட்டது. இத்தாலி பாராளுமன்றத்தில் வெளியுறவு அமைச்சர் காட்டம் !



India infringing Italian law: Foreign Minister Giulio Terzi மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் சர்வதேச சட்டத்தை இந்தியா மீறி விட்டது’’ என்று இத்தாலி நாடாளுமன்றத்தில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் குலியோடெர்சி பேசினார். நடுக்கடலில் குமரி ம¦னவர் உட்பட 2 மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இத்தாலி கடற்படை வீரர்கள் 2 பேருக்கும் 3 மாதங்களுக்கு பிறகு கேரள உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் கடும் நிபந்தனைகளுடன் ஜாமீன்
வழங்கியது.
ஆனால், நேற்று வரை சிறையில் இருந்து அவர்கள் விடுவிக்கப்படவில்லை. இந்நிலையில், இத்தாலி நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் நேற்று எதிரொலித்தது. இந்த பிரச்னை  தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விகளுக்கு இத்தாலி வெளியுறவு அமைச்சர் குலியோடெர்சி அளித்த பதிலில் கூறியதாவது: மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் நம் நாட்டு வீரர்களுக்கு ஜாமீன் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைவதற்கு ஒன்றும் இல்லை.

இந்த விவகாரத்தில் இத்தாலி நீதி துறைக்கு இந்தியா தொடர்ந்து சவால் விட்டு வருகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜாமீன் கிடைத்ததை வெற்றியாக கருத முடியாது. இந்த பிரச்னையில் இந்தியா இதுவரை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானதாகும்.
சர்வதேச அளவில் கடல் கொள்ளையர்களுக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தை இந்தியா கலங்கப்படுத்தி விட்டது. நம் நாட்டு வீரர்களுக்கு ஜாமீன் வழங்குவதற்கு இந்திய நீதிமன்றம் கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. இது தொடர்பாக நம் நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்த உள்ளேன். இவ்வாறு குலியோடெர்சி கூறினார்

No comments:

Post a Comment