June 12, 2012

பாபா ராம்தேவை போன்ற மோசடிக்காரரை எங்கும் பார்த்ததில்லை. திக்விஜய் சிங் !


பாபா ராம்தேவை போல மோசடி பேர்வழியை பார்த்ததில்லை என காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறினார். மத்திய பிரதேச தலைநகர் போபாலில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:என் வாழ்க்கையில் நிறைய மோசடி
பேர்வழிகளை பார்த்திருக்கிறேன். ஆனால், பாபா ராம்தேவை போன்ற மோசடிக்காரரை எங்கும் பார்த்ததில்லை. இப்போது அவர் மீடியாக்களில் நிறைய இடத்தை ஆக்கிரமித்துள்ளார். அவரை போன்றவர்களால் பொதுவாழ்க்கையில் நிலைத்திருக்க முடியாது. ரூ.80 கோடி வரி ஏய்ப்புக்காக அவருக்கு ஏற்கனவே அமலாக்க துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ராம்தேவ், அவரது உதவியாளர் மூலம் என்னை சந்திக்க அணுகினார். காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ராகுலை விமர்சிப்பதை நிறுத்தும்வரை அவரை சந்திக்க விருப்பம் இல்லை என்று கூறி மறுத்து விட்டேன். மத்திய பிரதேசத்தில் ஆளும் பா.ஜ.வுக்கு மணல் கடத்தல் கும்பலுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. பா.ஜ.வை சேர்ந்த கிரிமினல் கான்ட்ராக்டர்களாலும் ஊழல் அரசு அதிகாரிகளாலும் மாநிலத்தில் சட்ட விரோத மணல் கடத்தல் ஜோராக நடக்கிறது. இதுதொடர்பான பிரச்னைகளால் படுகொலைகளும் நடக்கின்றன.

இவ்வாறு திக்விஜய் சிங் கூறினார். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடனான கருத்து வேறுபாடு காரணமாக பா.ஜ.வில் இருந்து சஞ்சய் ஜோஷி விலகியது குறித்து கேட்டபோது, ‘மோடி ஒரு சர்வாதிகாரி. அவரால் எந்த போட்டியையும் தாங்கிக் கொள்ள முடியாது’ என்று திக்விஜய் சிங் கூறினார்.

No comments:

Post a Comment