February 13, 2013

அப்சல் குரு தூக்குதண்டனையை கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்



வழக்கறிஞர் சங்கரசுப்பு  அவர்கள் உரையாற்றிய பொழுது 


2001 டிசம்பர் 13 ஆம் நாள் நடைபெற்ற நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்சல் குரு கடந்த 9.2 .2013 அன்று காலை 8 மணி அளவில் தூக்கிலிடப்பட்டார்.இதைக் கண்டித்து சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில்கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் NCHROவின் மாநில குழு உறுப்பினர் A ராஜா முஹம்மது துவக்க உரை நிகழ்த்தினார். வழக்கறிஞர் ஜைனுல் ஆபிதீன்,மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு மற்றும் மனித உரிமை பாதுகாப்பு வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.இதில் மனித உரிமை ஆர்வலர்கள்,வழக்கறிஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


வழக்கறிஞர் புகழேந்தி அவர்கள் உரையாற்றிய பொழுது 

No comments:

Post a Comment