ஸ்ரீநகர்:ஜம்மு கஷ்மீர் மாநிலத்தில் போலீஸ் அதிகாரிகள் மீதான புகார்களை விசாரிக்க மாநில அரசு ஆணையம் ஒன்றை நிறுவியுள்ளது.இது ஆறு மாதத்திற்குள் அமலுக்கு வரும்.ஸ்டேட்ஸ் போலீஸ் கம்ப்ளய்ண்ட் அதாரிட்டி(எஸ்.பி.சி.எ)
என்பது அதன் பெயராகும்.
என்பது அதன் பெயராகும்.
எஸ்.பி.சி.ஐயின் மாவட்ட கிளைகளும் நிறுவப்படும்.போலீசின் மனித உரிமை மீறல்கள் மற்றும் கஸ்டடி மரணங்கள் குறித்து ஆணையம் விசாரிக்கும். பிப்ரவரி 28-ஆம் தேதி துவங்கும் பட்ஜெட் கூட்டத்தில் இதுத் தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்படும்.உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் இதன் தலைவராக இருப்பார்.
ஜம்மு கஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்து அரசு ஆணையத்தின் தலைவரை நியமிக்கும்.சிவில் நீதிமன்றத்தின் அதிகாரம் ஆணையத்திற்கு இருக்கும்.ஆணையம் அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டும். அரசு இதனை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யும்.முதன்மை செயலாளர் தரத்தில் உள்ள அதிகாரி, கூடுதல் டி.ஜி.பியின் ரேங்கிற்கும் மேலான போலீஸ் அதிகாரி, 20 ஆண்டுகளுக்கு குறையாத சேவை புரிந்த 2 நீதிபதிகள், அரசு தரப்பு வழக்குரைஞர், ப்ராக்டீஸ் புரியும் வழக்கறிஞர், மகளிர் பிரதிநிதி ஆகியோர் அடங்கியதே இந்த ஆணையம்.
ஆணையத்தை உருவாக்குவது தொடர்பான வரைவு மசோதா மீது சமூக அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள் உள்ளிட்டவைகளிடமிருந்து அரசு கருத்துக்களை பெறும்.
No comments:
Post a Comment