‘லப் டப்’... ‘லப் டப்’... என்ற ஓசையுடன் கருவில் முதன் முதலாக உருவாகும் இருதயம் துடிப்புடன் இயங்கி மற்ற உறுப்புகளை இயக்கி வரும். இவற்றில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறிய நேரிட்டால் மருத்துவத்தை உடன் நாடிச்செல்கின்றோம்.
அதிரை M.S.M. நகர் பகுதியில் வசிப்பவர் சகோ. S.A. அப்துல் அஜீஸ். அந்தப் பகுதியில் கட்டட பராமரிப்பாளராக பணிபுரியும் இவர் ஏழை ! இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள இவரின் 4 வயது பேத்தி ஆஃப்ரின், இந்த சிறுமியின் சிகிச்சைக்காக சென்னை சென்று தனியார் மருத்துவரை அணுகியுள்ளனர். மருத்துவரும் அச்சிறுமிக்கு ECG, ECHO போன்ற முதற்கட்ட பரிசோதனைகள் மேற்கொண்டதன் அடிப்படையில் மூன்று பாதிப்புகள் உள்ளன என்பதை கண்டறிந்து, அதற்கு தீர்வாக உடன் மூன்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், ஒவ்வொரு அறுவை சிகிச்சையும் மூன்று மாத இடைவெளியில் மேற்கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளார்.
மேற்படி சிகிச்சை செலவீனங்களுக்காக நம்மிடம் உதவியை நாடி வந்துள்ள இவருக்கு தமிழக அரசு செயல்படுத்திவரும் காப்பிட்டு திட்டத்தைப் பற்றியும், அவற்றை பெறுகின்ற வழிமுறைகளைப்பற்றியும் தெரியப்படுத்தியுள்ளோம். இருந்தும் மூன்று அறுவை சிகிச்சைகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் அவரிடம் போதுமான பொருளாதாரம் இல்லை என்பதை நாம் அறிய முடிந்தது.
ஏழ்மை நிலையில் இருக்கும் இவரால் இறுதய சிகிசைக்குரிய அனைத்து செலவினங்களை ஏற்று நடத்த முடியாத சூழலில் இருகின்ற காரணத்தால் நமது உதவியை அன்புடன் நாடியுள்ளார்.
இந்த ஏழை சிறுமிக்கு நாம் தாராளமாக உதவிகள் செய்வதன் மூலம், நம் அனைவரும் இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைந்துகொள்வோம் [ இன்ஷா அல்லாஹ் ]
நேரடியாக தொடர்பு கொள்ள :
S.A. அப்துல் மஜீத்
M.S.M. நகர் – அதிரை
அலைப்பேசி : 0091 9629599026
வங்கி கணக்கு விவரம் :
S.A. அப்துல் மஜீத்
இந்தியன் வங்கி
அதிராம்பட்டினம் கிளை
சேமிப்பு கணக்கு எண் : 5605891
மருத்துவ விபரங்கள்
தகவல் அதிரை நியூஸ்
No comments:
Post a Comment