காரைக்குடியிலிருந்து திருவாரூர் வரை சென்று கொண்டிருந்த ரயில் 15-03-2012 முதல் நிறுத்தப்படுகிறது. இனிமேல் பட்டுக்கோட்டையிலிருந்து திருவாரூர் வரை செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் காரைக்குடி - பட்டுக்கோட்டை அகல ரயில் பாதை பணி துவங்க இருக்கிறது என்று தெளிவாக தெரிகிறது. இந்த பணி ஒரு புறம் நடக்க மறுபுறம் பட்டுக்கோட்டையையும் மன்னார்குடியையும் இணைக்கும் புதிய ரயில் பாதை அமைக்கும் பணி ஒரு முன்னாள் மத்திய அமைச்சரின் தீவிர முயற்சியால் வெகு விரைவில் துவங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
March 28, 2012
ஆபாசப் படங்கள்... அல்லாடும் பெண்கள்.. பெண்களை நோக்கி திரும்பியுள்ள டிஜிட்டல் உலகத்தின் கழுகு. கட்டாயம் பார்க்க வேண்டிய கட்டுரை.
சராசரி வாரத்திற்கு நான்கு செய்திகளாவது இப்படி வந்து விடுகின்றன. "பெண்ணை ஆபாசமாக படமெடுத்து மிரட்டிய வாலிபர் கைது" என்று. இந்த அயோக்கியத்தனத்தை படித்த, படிக்காத என்று அனைவரும் பாகுபாடின்றி செய்கின்றனர்.
"கையில் கைபேசி இருந்தால் போதும்". ஊடகங்களே இந்த காரியங்களை செய்யும்போது - சாமானியன் செய்ய மாட்டானா? இதில் சிக்கும் பெண்களுக்கும் - படித்த, படிக்காத என்கிற வேறுபாடில்லை. "படிக்காததால் ஏமாற்றப்படுகின்றனர்" என்பதெல்லாம் இனி வருங்காலங்களுக்கு பொறுந்தாதோ.
ஐ.நா மனித உரிமை பேரவையுடனான உறவைத் துண்டித்தது இஸ்ரேல் !
ஜெனிவா: இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் ஐ.நா. மனித உரிமைப்புடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக அந்நாடு அறிவித்துள்ளது. பாலஸ்தீனத்தின் உரிமையை அபகரிக்கும் வகையில் இஸ்ரேலிய குடியேற்றங்கள் அமைக்கப்படுகின்றனவா? என்பது குறித்து சர்வதேச அளவிலான விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமை பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
போர் பீதியாலும், தடையாலும் தளராத ஈரான் மக்கள் !
டெஹ்ரான்:அணுசக்தி திட்டத்தின் பெயரால் ஏற்பட்ட கடுமையான தடைகளோ, இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என்ற பீதியோ ஈரான் மக்களை தளரச் செய்யவில்லை. டெஹ்ரான் உள்பட ஈரான் நகரங்களில் மக்களின் மாமூல் வாழ்க்கையை இவை எதுவும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. பாராசீக புதுவருடத்தை வரவேற்கும் மகிழ்ச்சியில் அவர்கள் இருந்தார்கள். புதிய நெருக்கடியும் தாமதிக்காமல் நீங்கிவிடும் என்ற நம்பிக்கையும்
March 26, 2012
ரூ.1500 கோடிக்கு புது வரிகள்! தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
சென்னை:சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2012-13 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
* தானே புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் நிரந்தர சேதம் அடைந்த குடிசைகளுக்கு மாற்றாக ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட ரூ.1000 கோடி ஒதுக்கீடு.
மஹல்லா ஜமாஅத் கட்டுப்பாட்டை காப்பாற்றுவது சமுதாயத்தின் கடமை இஸ்லாமிய மார்க்க விஷயங்களை தெளிவுபடுத்தும் அதிகாரம் உலமாக்களுக்கு மட்டுமே உண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிலைப்பாட்டை விளக்கி தலைவர் பேராசிரியர் பேச்சு
மஹல்லா ஜமாஅத் கட்டுப் பாட்டை காப்பாற்றுவது சமுதா யத்தின் கடமை. இஸ்லாமிய மார்க்க விஷயங்களை தெளிவு படுத்தும் அதிகாரம் சங்கைக் குரிய உலமாக்களுக்கு மட்டுமே உண்டு. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்றைக்கும் தெளிவாக இருக்கிறது என தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.
சென்னை எழும்பூரில் உள்ள ஹோட்டல் இம்பீரியல் சிராஜ் மண்டபத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு சார்பில் நடைபெற்ற 65-வது நிறுவன தினம், தேர்தல் ஆணைய அங்கீகார வெற்றிவிழா, அணி களின் சிறப்புக் கருத்தரங்க மாநாட்டில் தலைவர் பேராசிரியர் பேசிய நிறைவுப் பேருரையின் முற்பகுதி நேற்றைய மணிச்சுடரில் வெளிவந்தது.
காதிர் முகைதீன் கல்லூரி திடலில் தீ விபத்து. .................
கல்லூரியின் விளையாட்டு திடலில் அமைந்திருக்கும் சலாஹிய்யா அரபி கல்லூரியின் அருகே புள் மிக நீளமாக வளர்ந்து காய்ந்து போய் அடர்ந்த காடுபோல் காட்சியளிக்கின்றது. 25 - 03 - 2012 அன்று மாலை சுமார் 4 மணிக்கு திடீரென அடர்ந்த புள் புதரின் மேல் தீப்பற்றிக் கொண்டது. தீ மள மள வென பரவவே உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு தீயணைப்பு வண்டி விரைந்து வந்து தீயை அணைத்து, தீ பரவுவது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்து நடந்த கல்லூரியின் மைதானத்தின் சுற்று சுவருக்கு பின்புறம் மிக அருகில் பிலால் நகரின் பல குடிசைகள் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படாமல் அல்லாஹ்வின் கிருபையால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. தீவிபத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
இந்தியாவுக்கு எதிராக கஷ்மீர் பிரச்சனையை எழுப்பும் இலங்கை!
கொழும்பு:தமிழ் இன மக்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்களை அரங்கேற்றிய ராஜபக்ஷேவின் இலங்கை அரசை கண்டிக்கும் ஐ.நா மனித உரிமை ஏஜன்சியின் தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததை தொடர்ந்து இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கஷ்மீரின் எதிர்காலம் குறித்து இந்தியாவுக்கு பின்னடைவை சந்திக்க நேரிடும் என்று இலங்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.
March 24, 2012
கூடங்குளம் பிரச்சனைக்காக ஆர்ப்பாட்டம் நடத்திய வைகோ, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உறுபினர்கள் உள்பட 2000 பேர் கைது !
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இடிந்தகரையில அணு உலை எதிர்ப்பாளர்கள் நடத்தும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அதே வேளையில் அவர்களுக்கு ஆதரவாக பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இடிந்தகரை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள்தனித்துவிடப்படவில்லை என்பதை உணர்த்தும் விதமாகவும், கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்கக்கூடாது என்று வலியுறுத்தியும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் பாளை மார்க்கெட் திடலில் இன்று ஆர்ப்பாட்டம் மற்றும் இடிந்தகரை நோக்கி பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
March 23, 2012
பட்டுக்கோட்டையில் இருந்து திருத்துறைப்பூண்டி வரையில், மீட்டர் கேஜ் பாதையை அகற்ற, சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
பட்டுக்கோட்டையில் இருந்து திருத்துறைப்பூண்டி வரையில், மீட்டர் கேஜ் பாதையை அகற்ற, சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள வர்த்தக கழகத் தலைவர் செந்தில்நாதன் தாக்கல் செய்த மனு: மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் வரையில் அகல ரயில் பாதை அமைக்கப்பட்ட பின், அடுத்த கட்டமாக, திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு
அதிரையில் பேருந்தில் தீ விபத்து...
இன்று அதிகாலை (22/03/2012) சென்னையில் இருந்து தொண்டி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து (3 ஸ்டார்) அதிரை வண்டிப்பேட்டை அருகே வந்து கொண்டிருந்தபோது பேருந்தின் பின் புறத்திலிருந்து தீ பற்ற ஆரம்பித்தது. பின் புறம் வாகனத்தில் வந்து கொண்டிருந்தவர்கள் பஸ்ஸை மறித்து விசயத்தை சொன்னவுடன் பேருந்து உடனே நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு தீ அணைக்கப்பட்டது. பெரும் உயிர் சேதம் இறைவன் அருளால் தவிர்க்கப்பட்டது. பின்புறம் ஏற்றப்பட்ட எமஹா பைக்கிலிருந்து ஏற்பட்ட பெட்ரோல் கசிவே தீ விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. விபத்தை அறிந்த அதிரையை சேர்ந்த சகோதரர்கள் எறிந்த பொருட்களை சரி செய்தனர் மேலும் பயணிகளை ராஹத் பஸ் மூலம் தொண்டிக்கு அனுப்பி வைத்தனர்.
இஸ்ரேல் பயங்கரவாதத்திற்கு எதிராக தேசிய அளவிலான பிரச்சாரம் – பாப்புலர் ஃப்ரண்ட்
புதுடெல்லி:இஸ்ரேல் பயங்கரவாதத்திற்கு எதிராகவும், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் இஸ்ரேலின் தலையீட்டிற்கு எதிராகவும் தேசிய அளவில் பிரச்சாரம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைமை தீர்மானித்துள்ளது. இஸ்ரேலுடன் அனைத்துவிதமான தொடர்புகளையும் துண்டிக்க கோரி பாராளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தவும் பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர்கள் கூட்டம் முடிவு எடுத்துள்ளது.
March 22, 2012
ரயில் கட்டணம் வாபஸ் !
கடந்த வாரம் தினேஷ் திரிவேதி தாக்கல் செய்த ரயில்வே நிதிநிலை அறிக்கையில் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன.
இதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது அவரது திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.
மேலும் தினேஷ் திரிவேதியை நீக்கிவிட்டு முகுல்ராயை புதிய ரயில்வே அமைச்சராக்க மத்திய அரசை திரிணாமூல் காங்கிரஸ் நிர்பந்தித்தது. அதன்படி புதிய அமைச்சராக முகுல்ராய் பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் திரிவேதி பதவி இழக்க காரணமான ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற்றுக்கொள்வதாக முகுல்ராய் அறிவித்துள்ளார்.
மேலும், கட்டண உயர்வு ஏழை, எளியவர்களை பாதிக்கும் என்பதால் அதைத் திரும்பப் பெறுவதாகவும், முகுல்ராய் கூறினார்.
March 21, 2012
இடிந்தகரைக்கு பால், குடிநீர், மின்சாரம் ரத்து.. மக்கள் தலையில் இடியை இறக்கும் அரசு !
இடிந்தகரை: உதயக்குமாரைக் கைது செய்தவற்காக ஒட்டுமொத்தமாக இடிந்தகரை மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது தமிழக அரசு. அந்தக் கிராமம் முழுமைக்கும் பால் விநியோகம், மின்சாரம், குடிநீர் விநியோகம் ஆகியவற்றை துண்டித்துள்ளனர். மேலும் செல்போன் டவர்களையும் செயலிழக்க வைத்துள்ளனர். இதனால் தமிழகத்தின் இதர பகுதிகளிலிருந்து இடிந்தகரை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மக்களையும் பெரும் அவதிக்குள்ளாக்கியுள்ள அரசின் செயல் மனிதநேயமற்றது என்ற கடும் கண்டனம் கிளம்பியுள்ளது.
புதிய சமூக வலைத்தளமான ‘ஸலாம் வேர்ல்ட்’ ரமலானில் அறிமுகம் !
இஸ்தான்புல்:ஃபேஸ்புக், ட்வீட்டர் ஆகிய சமூக இணையதளங்களை போன்ற ஒரு புதிய சமூக இணைத்தளம் வருகின்ற ரமலான் மாதம் அறிமுகமாகவுள்ளது. ஹலால் சம்மந்தமான இந்த இணைய தளத்திற்கு ‘சலாம் வேர்ல்ட் – Salam World’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது முஸ்லிம்களுக்கான ஒரு பாதுகாப்பு வலைத் தளமாகவும், பிரபல சமூக வலைத் தளமான ஃபேஸ்புக்கிற்கு மாற்றாக
March 20, 2012
பிளவை நோக்கி கர்நாடகா பா.ஜ.க!
பெங்களூர்:கர்நாடகா மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சி பிளக்கும் சூழல் உருவாகியுள்ளது. முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா மாநிலங்களவை தேர்தலில் தனது வேட்பாளரை அறிவித்துள்ளார். முதல்வராக தன்னை மீண்டும் நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கையை மேலிடம் ஏற்றுக்கொள்ளாததை தொடர்ந்து எடியூரப்பா இம்மாதம் 30-ஆம் தேதி நடக்கவிருக்கும் தேர்தலில் தனது ஆதரவாளரை வேட்பாளராக நிறுத்த தீர்மானித்தார்.
March 19, 2012
சங்கரன்கோவில் தேர்தல் முடிந்தது... கூடங்குளத்தில் கைது தொடங்கியது: 9 பேர் இன்று கைது !
கூடங்குளம்: சங்கரன்கோவிலில் இடைத் தேர்தல் முடிந்த கையோடு கூடங்குளத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவோரைக் கைது செய்யும் பணியை முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு தொடங்கியுள்ளது. கூடுதல் டிஜிபி ஜார்ஜ் தலைமையில் 10 மாவட்ட எஸ்.பிக்கள் மற்றும் பெருமளவில் ஆயுதப் போலீஸார் கூடங்குளத்தில் குவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை அதிரடியாக அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுவைச் சேர்ந்த 9 பேரை போலீஸார் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.
March 16, 2012
இஸ்ரேல் தூதரக அதிகாரியின் கார் குண்டு வெடிப்பு: ஈரானியர்களை பிடிக்க சர்வதேச போலீஸ் உதவி நாடல்...
புதுடில்லி: டில்லியில் இஸ்ரேலிய தூதரக அதிகாரியின் காரில் குண்டு வெடித்ததில், ஈரான் நாட்டைச் சேர்ந்த மூன்று பேருக்கு தொடர்புள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்களை கைது செய்து, இந்தியாவிடம் ஒப்படைக்க கோரப்பட்டுள்ளது.
டில்லியில் கடந்த மாதம் 13ம் தேதி, பிரதமர் வீட்டருகே இஸ்ரேலிய தூதரக அதிகாரி காரில் சென்று கொண்டிருந்த போது, டூ வீலரில் பின்னால் வந்த நபர், காந்தத்தின் மூலம் காரில் வெடிகுண்டை ஒட்ட வைத்துவிட்டுச் சென்றார்.
சிறிது நேரத்தில் காரில் குண்டு வெடித்ததில், தூதரக பெண் அதிகாரியும், கார் டிரைவரும் பலத்த காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி, ஈரானிய பத்திரிகை நிருபர் சயத் முகமது அகமது காஸ்மி, 50, என்பவரை கடந்த 6ம் தேதி கைது செய்துள்ளனர். ஈரானைச் சேர்ந்த அப்ஷார், சயத் அலி, முகமது ரெசா ஆகியோர் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காஸ்மி, வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பில்லாதவராக இருந்தாலும், வெடிகுண்டு வைத்தவர்களுக்கு இவர் மறைமுக உதவி செய்துள்ளார். காஸ்மி கடந்த ஆண்டு இரண்டு முறை ஈரானுக்கு சென்று வந்துள்ளார். அப்போது, இந்த மூன்று பேரை சந்தித்துள்ளார். இஸ்ரேலிய தூதரக அதிகாரியின் கார் எங்கெல்லாம் செல்கிறது என்பது குறித்து, மூன்று ஈரானியர்கள் டில்லி வந்து நோட்டமிட்டுள்ளனர். இவர்கள் இந்த உளவு வேலை பார்க்க காஸ்மி, டூவீலர் வாங்கிக் கொடுத்துள்ளார். ஈரானியர்களிடமிருந்து காஸ்மி 3.80 லட்ச ரூபாயும், அவரது மனைவி 18 லட்சத்து 78 ஆயிரம் ரூபாயும் பெற்றுள்ளனர். குண்டு வெடிப்பு நடப்பதற்கு முன்னதாக மூன்று பேரும் ஈரானுக்கு சென்று விட்டனர். ஈரானைச் சேர்ந்த மேற்கண்ட மூவரைத் தேடி, இந்தியாவிடம் ஒப்படைக்கும் சர்வதேச போலீசாரிடம், டில்லி போலீசார் கோரியுள்ளனர். இந்த விஷயத்தில் இந்தியாவுடன் ஒத்துழைக்கும்படி ஈரான் அரசிடமும் கோரப்பட்டுள்ளதாக டில்லி போலீஸ் கமிஷனர் பி.கே.குப்தா தெரிவித்துள்ளார்.
போலீஸ் மீது காஸ்மி புகார்: கடந்த 7ம் தேதி காவலில் வைத்தது முதல், போலீசார் தன்னை மன ரீதியாக கொடுமைப்படுத்துவதாகவும், இந்த சம்பவத்தில் தனக்கு சம்பந்தம் இல்லாத நிலையிலும் குற்றத்தை செய்ததாக ஒப்புக்கொள்ளும்படி வற்புறுத்துவதாகவும், ஒப்புக்கொள்ளாவிட்டால், என் குடும்பத்தினரையும் இந்த வழக்கில் சேர்க்கப்போவதாக போலீசார் மிரட்டுவதாகவும் காஸ்மி, டில்லி மாஜிஸ்திரேட் கோர்ட்டில், வழக்கறிஞர் விஜய் மல்கோத்ரா மூலம் தெரியப்படுத்தியுள்ளார். இந்த மனு தொடர்பான விசாரணை இன்று நடக்கிறது.
பட்ஜெட் 2012: பர்ஸை பதம் பார்க்கும் பொருள்கள் என்னென்ன?
டெல்லி: பிரணாப் முகர்ஜி சமர்ப்பித்த இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் பெரும்பாலான பொருள்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. ஒரு சில பொருள்களின் விலை உயர்வு தவிர்க்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் ஆர்வம் காட்டும் பொருள்களின் விலையில்தான் பிரணாப் கை வைத்துள்ளார்.
ஏஸி, பிரிட்ஜ் போன்றவை மிக அத்தியாவசியமானவையாகவே மாறிவிட்டன, நடுத்தர வர்க்கத்தினருக்கு. இவற்றின் விலை கணிசமாக உயரப் போகிறது.
SDPI மற்றும் மமக தலைவர்கள் சிறையிலிருந்து விடுதலை..
சென்னை: SDPI-யின் துறைமுக தொகுதி தலைவர் அமீர் சுல்தான் போலீசாரின் பொய் வழக்கிலிருந்து நீதிமன்ற தீர்ப்பின் மூலம் 4 மாத சிறைவாசத்திற்கு பிறகு இன்று புழல் சிறைச்சாலையிலிருந்து விடுதலை பெற்றார்.
Subscribe to:
Posts (Atom)