March 28, 2012

காரைக்குடி - திருவாரூர் வழித்தட பயணிகளுக்கு இரயில்வே இலாகாவின் புதிய அறிவிப்பு.




காரைக்குடியிலிருந்து திருவாரூர் வரை சென்று கொண்டிருந்த ரயில் 15-03-2012 முதல் நிறுத்தப்படுகிறது. இனிமேல் பட்டுக்கோட்டையிலிருந்து திருவாரூர் வரை செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் நோட்டீஸ்  போர்டில் ஒட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் காரைக்குடி - பட்டுக்கோட்டை அகல ரயில் பாதை பணி துவங்க இருக்கிறது என்று தெளிவாக தெரிகிறது. இந்த பணி ஒரு புறம் நடக்க மறுபுறம் பட்டுக்கோட்டையையும் மன்னார்குடியையும் இணைக்கும் புதிய ரயில் பாதை அமைக்கும்  பணி ஒரு முன்னாள் மத்திய அமைச்சரின் தீவிர முயற்சியால் வெகு விரைவில் துவங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.


இவ்வழித்தடங்கள் முழுமை பெறும் பட்சத்தில் அதிராம்பட்டினம் - முத்துப்பேடை - திருத்துறைப்பூண்டி வழித்தடங்களுக்கு ஆப்பு வைக்கப்படுமா என்ற அச்சம் நிழவுகிறது.


நாம் புதிய வழித்தடத்தையோ, புதிய ரயிலையோ கேட்கவில்லை தற்பொழுது உள்ள குறுகிய ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றி இந்த வழித்தடத்தில் ஏற்கனவே  சென்றுக்கொண்டிருந்த கம்பன் ரயிலைதான் இயக்க சொல்லுகிறோம்.

இந்த விசயத்தில் அதிரை, முத்துப்பேடை, திருத்துறைப்பூண்டி மற்றும் திருவாரூர் மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்தி நமது நியாமான கோரிக்கையை ரயில்வே இலாகாவின் காதுகளுக்கு விழ செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

No comments:

Post a Comment