March 22, 2012

ரயில் கட்டணம் வாபஸ் !

Mukul Roy

முதல் வகுப்பு ஏசி மற்றும் இரண்டாம் வகுப்பு ஏசியைத் தவிர்த்து சாதாரண வகுப்பு, ஸ்லீப்பர் கட்டண உயர்வை திரும்பப் பெறுவதாக புதிய ரயில்வே அமைச்சர் முகுல்ராய் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த வாரம் தினேஷ் திரிவேதி தாக்கல் செய்த ரயில்வே நிதிநிலை அறிக்கையில் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன.

இதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது அவரது திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.

மேலும் தினேஷ் திரிவேதியை நீக்கிவிட்டு முகுல்ராயை புதிய ரயில்வே அமைச்சராக்க மத்திய அரசை திரிணாமூல் காங்கிரஸ் நிர்பந்தித்தது. அதன்படி புதிய அமைச்சராக முகுல்ராய் பதவியேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் திரிவேதி பதவி இழக்க காரணமான ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற்றுக்கொள்வதாக முகுல்ராய் அறிவித்துள்ளார்.

மேலும், கட்டண உயர்வு ஏழை, எளியவர்களை பாதிக்கும் என்பதால் அதைத் திரும்பப் பெறுவதாகவும், முகுல்ராய் கூறினார்.

No comments:

Post a Comment