March 26, 2012

காதிர் முகைதீன் கல்லூரி திடலில் தீ விபத்து. .................


கல்லூரியின் விளையாட்டு திடலில் அமைந்திருக்கும் சலாஹிய்யா அரபி கல்லூரியின் அருகே புள் மிக நீளமாக வளர்ந்து காய்ந்து போய் அடர்ந்த காடுபோல் காட்சியளிக்கின்றது. 25 - 03 - 2012 அன்று மாலை சுமார் 4 மணிக்கு  திடீரென அடர்ந்த புள் புதரின் மேல் தீப்பற்றிக் கொண்டது. தீ மள மள வென பரவவே உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு தீயணைப்பு வண்டி விரைந்து வந்து தீயை அணைத்து, தீ பரவுவது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்து நடந்த கல்லூரியின் மைதானத்தின் சுற்று சுவருக்கு பின்புறம் மிக அருகில் பிலால் நகரின் பல குடிசைகள் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படாமல் அல்லாஹ்வின் கிருபையால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. தீவிபத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

காதிர் முகைதீன் கல்லூரி பள்ளிவாசல், சலாஹிய்யா அரபிக்கல்லூரி மற்றும் காதிர் முகைதீன் கல்லூரியின் உள் விளையாட்டு அரங்கம் ஆகிய பகுதிகளில் புள் புதர்கள் வளர்ந்து காடு போல் காட்டியளிக்கின்றது. விஷ ஜண்டுகள் இந்த பகுதியில் இருக்க மிக அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன. இரவு நேரங்களில் சலாஹிய்யா அரபிக்கல்லூரி மாணவர்கள் அருகே இருக்கும் கல்லூரி பள்ளிவாசலுக்கு சென்று தொழுவதற்கு ஒரு வித அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை இருக்கின்றது.

கல்லூரி நிர்வாகம் இந்த விசயத்தில் கவனம் செலுத்தி காடு மண்டி கிடக்கும் இந்த பகுதியை சுத்தம் செய்ய முன் வருவார்களா?


எரிந்து சாம்பலான புள் - புதர்களை படத்தில் காணலாம்.
thanks adiraibbc

No comments:

Post a Comment