March 23, 2012

பட்டுக்கோட்டையில் இருந்து திருத்துறைப்பூண்டி வரையில், மீட்டர் கேஜ் பாதையை அகற்ற, சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.



ரயில் பாதையை அகற்ற ஐகோர்ட் தடை
பட்டுக்கோட்டையில் இருந்து திருத்துறைப்பூண்டி வரையில், மீட்டர் கேஜ் பாதையை அகற்ற, சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள வர்த்தக கழகத் தலைவர் செந்தில்நாதன் தாக்கல் செய்த மனு: மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் வரையில் அகல ரயில் பாதை அமைக்கப்பட்ட பின், அடுத்த கட்டமாக, திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு
அகல ரயில் பாதை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது, மயிலாடுதுறை-திருவாரூர் அகல ரயில் பாதை பணிகள் முடிந்துவிட்டன. அடுத்ததாக திருத்துறைப்பூண்டி வரையிலான அகல ரயில் பாதை பணிகள், எடுக்கப்பட வேண்டும். தற்போது, பட்டுக்கோட்டையில் இருந்து திருத்துறைப்பூண்டி வரையிலான மீட்டர் கேஜ் பாதையை அகற்றுவதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. திருவாரூர்-திருத்துறைப்பூண்டி வரையில் அகல ரயில் பாதை பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, பட்டுக்கோட்டை-காரைக்குடி வரையில் அகல ரயில் பாதை பணிகளுக்காக ஏன் மாற்றினர் என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை. எனவே, பட்டுக்கோட்டையில் இருந்து திருத்துறைப்பூண்டி வரையிலான மீட்டர் கேஜ் பாதையை அகற்றுவதற்கான டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். திருவாரூர்-திருத்துறைப்பூண்டி வரையிலான மீட்டர் கேஜ் பாதையை அகற்றுவதற்கு புதிய டெண்டர் விட ரயில்வே துறைக்கு உத்தரவிட வேண்டும். முதல் கட்டமாக, திருவாரூர்-திருத்துறைப்பூண்டிக்கு அகல ரயில் பாதை அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய “முதல் பெஞ்ச்’ விசாரித்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் கே.ராஜேந்திரன், ரூபர்ட் பர்னபாஸ் ஆஜராகினர். ரயில்வே துறைக்கு நோட்டீஸ் அனுப்ப “முதல் பெஞ்ச்’ உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தது. இதற்கிடையில், பட்டுக்கோட்டை-திருத்துறைப்பூண்டி வரையிலான மீட்டர் கேஜ் பாதையை அகற்றக் கூடாது எனவும் ரயில்வேக்கு “முதல் பெஞ்ச்’ உத்தரவிட்டது

No comments:

Post a Comment