March 26, 2012

மஹல்லா ஜமாஅத் கட்டுப்பாட்டை காப்பாற்றுவது சமுதாயத்தின் கடமை இஸ்லாமிய மார்க்க விஷயங்களை தெளிவுபடுத்தும் அதிகாரம் உலமாக்களுக்கு மட்டுமே உண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிலைப்பாட்டை விளக்கி தலைவர் பேராசிரியர் பேச்சு


மஹல்லா ஜமாஅத் கட்டுப் பாட்டை காப்பாற்றுவது சமுதா யத்தின் கடமை. இஸ்லாமிய மார்க்க விஷயங்களை தெளிவு படுத்தும் அதிகாரம் சங்கைக் குரிய உலமாக்களுக்கு மட்டுமே உண்டு. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்றைக்கும் தெளிவாக இருக்கிறது என தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.

சென்னை எழும்பூரில் உள்ள ஹோட்டல் இம்பீரியல் சிராஜ் மண்டபத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு சார்பில் நடைபெற்ற 65-வது நிறுவன தினம், தேர்தல் ஆணைய அங்கீகார வெற்றிவிழா, அணி களின் சிறப்புக் கருத்தரங்க மாநாட்டில் தலைவர் பேராசிரியர் பேசிய நிறைவுப் பேருரையின் முற்பகுதி நேற்றைய மணிச்சுடரில் வெளிவந்தது.



மஹல்லா ஜமாஅத், ஷரீஅத் சட்டங்கள் குறித்து அவர் பேசிய தாவது-

இஸ்லாமிய மார்க்க விஷயங்களை தெளிவுபடுத்துவது யார்?

இஸ்லாமிய சட்டங்கள் அனைத்தும் நாடாளுமன்ற சட்டத்தின் வாயிலாக ஒருங்கி ணைக்கப் பட வேண்டும் என்ற முயற்சி சிலரால் சொல்லப்பட்டு நேற்றைய தினம் (22-3-12) சென்னையில் ஒரு கருத்தரங் கமும் நடைபெற்றதாக இங்கே குறிப்பிட் டார்கள். 

அந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்ட காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., இதுவிஷயத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிலைப்பாட்டை மிகத் தெளி வாக அங்கே பதிவு செய்தி ருக்கிறார். 

அல்லாஹ்வின் சட்டங்கள் அண்ணல் நபிகள் காட்டித்தந்த வழியில் சங்கைக்குரிய இமாம்கள், வடித்துத் தந்த சட்டங்கள், மத்ஹபுகளின் வழி யில் பின்பற்றப்பட்டு வருகின் றன.

இந்த சட்டங்களைத்தான் ஒருங்கிணைக்கப் போகிறோம் என்று இப்போது சொல்கிறார் கள். இஸ்லாமிய சட்டங்களில் விளக்கங்கள் தேவை என்றால், அது தொடர்பான விளக்கங்கள் எங்கிருந்து வர வேண்டும் என்றால் சங்கைக்குரிய உலமாக்கள் நிறைந்த முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்திலி ருந்துதான் வர வேண்டும்.

சங்கைக்குரிய உலமா பெருமக்களின் சபை தான் மார்க்க ரீதியான பிரச்சினைக ளுக்கு விளக்கம் சொல்வதற்கு தகுதி படைத்த ஒரே அமைப்பு. இதில் விளக்கம் சொல்வ தற்கோ, தீர்ப்பு சொல்வதற்கோ, நாடாளு மன்றங்களுக்கோ, சட்டமன்றங்களுக்கோ அல்லது நீதி மன்றங்களுக்கோ அதி காரம் இல்லை. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெளி வாக இருக்கிறது ஆண்டாண் டுக்காலமாக இதைத்தான் சொல்லி வருகிறது.

அரசியலில் வழிகாட்டுவது யார்?

மார்க்கத்திற்கு சங்கைக் குரிய உலமாக்கள் வழி காட்ட வேண்டும் அதேநேரம் அரசி யலில் இன்னார் தான் ஆட் சிக்கு வர வேண்டும் என அவர்கள் சொல்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் சூழ்ச்சி யும், சூதும் நிறைந்த அரசியல் களத்தில் யார் யார் எப்படிப் பட்டவர்கள்? அவர்களு டைய எதிர்கால செயல்பாடுகள் எப்படி இருக்கும்? கட்சிகள் விஷயத்தில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பதை யெல்லாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பெரும் தலைவர்கள் நமக்கு கற்றுத் தந்திருக்கிறார்கள். அந்த வழியில் நாங்கள் செல்கிறோம். அரசியல்ரீதியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எடுக்கின்ற முடிவை வழிகாட் டுதலை சமுதாயம் ஏற்பதே நன்மை பயக்கும். எனவே ஒவ்வொரு அமைப்பும் அவரவர் ஏற்றிருக்கின்ற வரம்பை மீறக் கூடாது. 

சூரியனும் - சந்திரனும் நட்சத்திரங்களும் அவைக ளுக்கு விதிக்கப்பட்ட வழிகளி லிருந்து மீறுவதில்லை. கடலும், நதியும் எல்லை மீறினால் பேரழிவுகள் தான் ஏற்படும். வனங்களில் சுற்றித் திரியும் மிருகங்கள்கூட அதைவிட்டு வரம்பு மீறி வெளிவருவதில்லை. எனவேதான் அவரவருக் குள்ள பொறுப்புக்களை உணர்ந்து ஆன்மீகமாகட்டும், அரசியலாகட்டும் செயல்படு வோமேயானால் எந்த இழப்பும் ஏற்படாது. 

மஹல்லா ஜமாஅத்கட்டுப்பாடு

பள்ளிவாசலை மையமாகக் கொண்ட மஹல்லா ஜமாஅத் இஸ்லாத்தின் தனிச்சிறப்பு. அந்த ஜமாஅத்துக்கு கட்டுப் படுவது என்பது சமுதாயத்தின் கட்டாயக் கடமை.

அமானிதம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்ணியமிக்க தலைவர் களால் நம்மிடத்தில் அமானித மாக தரப்பட்டிருக்கிறது அதன் வரலாறு தியாகம் நிறைந்தது. அது எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சமுதாயத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அமையும். இந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டியது சமுதாயத்தின் கடமை. அப்போது தான் வருங்காலத் தலைமுறை நம்மை பாராட்டும். 

இவ்வாறு தலைவர் பேராசிரியர் உரையாற்றினார். 

No comments:

Post a Comment