குஜராத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற முஸ்லீம்களுக்கு எதிரான இனப்படுகொலையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பெண்கள் கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர். உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த இனப்படுகொலை குறித்து அமெரிக்காவின் நாடாளுமன்றத்தின் உத்தரவுப்படி அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது. 60 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் கலவரத்திற்கு முக்கிய காரணமாக நரேந்திர மோடி தண்டிக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
April 22, 2013
காவல் நிலையத்தில் கணபதி ஹோமம்..!…?
முத்துப்பேட்டை காவல் நிலையம் உட்பட்ட பகுதியில் சமீப காலமாக கொலை, கொள்ளை சம்பவ வழக்குகள் அதிகமாகி காவல் நிலையம் எந்த நேரமும் ரேஷன் கடை போல் மக்கள் குவிந்து காணப்படுகிறது. இதனால் காவலாளர்கள் எந்த நேரமும் டென்ஷனாக காணப்படுகிறார்கள்.
36 காவலாளர்கள் பணியாற்றக்கூடிய இந்த காவல் நிலையத்தில் ஏழு காவலாளர்கள் மட்டுமே
April 19, 2013
அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் மீலாது விழா! அனைத்து பரிசுகளையும் தட்டிச்சென்ற மாணவிகள்.
நமதூர் அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் இன்றுகாலை 10.30 மணியளவில் நவினப்படுத்தப்பட்ட கலையரங்கில் முதல் நிகழ்ச்சியாக மீலாத் விழா நடைபெற்றது.
இந்த மீலாது விழாவிற்கு MKN ட்ரஸ்டின் தற்காலிக நிர்வாகி நீதியரசர் K. சம்பத் அவர்கள் தலைமை தாங்கினார்.விழாவின் முன்னதாக பேரா.M.A.முகம்மது இத்ரீஸ் (அரபித் துறை தலைவர்) அவர்களால் கிராத் ஓதப்பட்டு நிகழ்ச்சி ஆரம்பம் செய்யப்பட்டது.இதன் பின்பு கல்லூரி முதல்வர் முனைவர் A. ஜலால் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.
April 16, 2013
மருதநாயகம் சரித்திர வரலாறு
வரலாற்றின் பக்கங்களில் புழுதி படிவதும், காலம் அதனை துடைத்து மானுடத்தின் பார்வைக்கு கொண்டு வருவதும் எப்போதும் நிகழக் கூடியதாகவே இருக்கிறது.வரலாற்றுப் பக்கங்களிலிருந்து கிட்டத்தட்ட மறைந்து விட்ட ஒரு வீர காவியம் கான் சாஹிபுடையது.
ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து தனது தனித்திறமையினால் மதுரையின் மன்னராக ஆனவர் வீரர் கான் சாஹிப். ஆங்கில அரசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய இவர் சில துரோகிகளின் சூழ்ச்சியினால் சிறைப்பிடிக்கப் பட்டு ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டார்.
ஒரு தீமை சட்டபூர்வமாக அரங்கேறுகிறது!
மது: தீமைகளின் உறைவிடம். இது நோய், வறுமை, ஒழுக்கக் கேடு, குற்றச் செயல், வன்முறை, கொலை, கொள்ளை, குடும்ப சீரழிவு என்று பல கேடுகளை உண்டாக்குகிறது.
இது உண்டாக்கும் நோய்கள்: உணவு குழாயை அரிக்கிறது, ஜீரண உறுப்புகளின் ஆற்றலை குறைக்கின்றது, வயிற்றில் புண்ணை ஏற்படுத்தி, இதுவே பிற்காலத்தில் புற்று நோய் உண்டாக காரணமாக மாறுகிறது.
மேலும், கலீரல் பாதிப்பை உண்டாக்கி, மூளையை செயலிழக்க செய்கிறது, இதயத்தை வலுவிழக்க செய்கிறது, ரத்த குழாய்களை சேதமடைய வைக்கிறது, மறதியை உண்டாகிறது. இப்படி படிப்படியாக மனிதனை கொல்லும் பல்வேறு நோய்களை உண்டாக்குகிறது.
April 10, 2013
ஸுபுஹ் தொழுகையும் நாமும் ???
ஸுபுஹ் தொழுகையும் நாமும் ???
அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில் பல மாற்றங்களை அல்லாஹ் அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது.
வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள்; மாறாகஅதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப் பெயர் சூட்டுகின்றது.
அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில் பல மாற்றங்களை அல்லாஹ் அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது.
வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள்; மாறாகஅதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப் பெயர் சூட்டுகின்றது.
ரமளான் அல்லாத நாட்களில் ஸுபுஹ் தொழுகையின் போது பள்ளிவாசலின் நிலையைப் பாருங்கள். பரிதாபமாக இருக்கும். சில பள்ளிவாசல்களில் ஒரு வரிசைகூட முழுமையாக இருக்காது. இதற்காகவா இவ்வளவு பொருள் செலவில் பரந்து விரிந்த பள்ளிவாசல்களைக் கட்டினோம்..?
ஒரு நடிகை உண்மையான நாயகியாக: Firaaq (2009) – திரைப்பார்வை
முதலில் ஒரு வண்டி நிற்கிறது வண்டியில் இருந்து உடல்கள் கொட்டப்படுகிறது. இருவர் அந்த உடல்களுக்கு இறுதி மரியாதை செலுத்தும் விதமாக அடக்கம் செய்து கொண்டிருக்கும் போதே இன்னொரு வண்டியிலும் பிணக்குவியல் வந்து கொட்டிவிட்டு போகிறது.
எல்லாமே இஸ்லாமியர்களின் உடல். அந்த குவியலில் ஓர் இந்து பெண்ணின் உடலை பார்த்தவுடன் அடக்கம் செய்து கொண்டிருந்த ஒருவனுக்கு கோபம் வந்து இறந்த உடலென்றும் பார்க்காமல் கடப்பாரையால் வெட்ட போகின்றான். இப்படி தொடங்குகிறது முதல் காட்சி. நடித்தவர்கள் நம்ம ஊர் நாசரும் இன்னொரு இந்தி நடிகரும்.
உண்மைக்கு கிடைத்த இன்னொரு வெற்றி...!
ஜெய்ப்பூரிலுள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் பொறியாளர் ரஷீத் ஹுசைன் என்பவர் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
2008 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் நாள் ஜெய்ப்பூரில் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. வழக்கம் போல் காவல்துறையினர் அப்பாவிகளைத் துன்புறுத்தத் தொடங்கினர்.
குண்டுவெடிப்புச் சம்பவத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாத பொறியாளர் ரஷீத் ஹுசைனையும் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று பத்து நாள்கள் காவலில் வைத்திருந்தனர்.
பிறகு அவர் மீது எந்த தவறும் இல்லை என்றுகூறி அவரை விடுதலை செய்து அனுப்பி விட்டனர்.
இந்திய இராணுவத்தின் இரட்டை நிலை!
இந்திய இராணுவத்தின் இரட்டை நிலை!
இஜாஸ் அஹ்மத் மிர்ஸா |
2012 ஆகஸ்ட் 29 அன்று பெங்களூரிலிருந்து காவல்துறையினர் பிடித்துச் சென்ற முஸ்லிம் இளைஞர்கள் 12 பேரில் ஒருவர்தாம் இஜாஸ் அஹ்மத் மிர்ஸா. பத்திரிகையாளர்கள், விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர்கள் உள்பட முக்கியப் பிரமுகர்கள் சிலரைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிக் கொண்ருந்தனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பயங்கரவாதத் தடைச் சட்டப் பிரிவுகளின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
March 15, 2013
விடுமுறை காலங்கள் வாலிபர்க்களின் முறைகளும்!
இன்று பள்ளியில் படிக்கும் சமயத்தில் பள்ளி படிப்பை முடிப்பதற்க்கு முன்பு பின்பும் சில வாலிப ஆண்களும் சில வாலிப பெண்களும் சேர்ந்து கொண்டு டூர் என்ற பெயரில் வெளியூர் செல்கிறார்கள் இதனால் ஒழுக்க சீர் கெடுகள் நடைபெறுகிறது மேலும் ஆண் பெண் கலப்படம் ஏற்படுகிறது மேலும் எவ்வளவு பணம் செலவு செய்யப்படுகிறார்கள்.அப்படி செல்வதால் எத்தனையோ பெண்கள் தவறான செயலுக்கு நிற்பந்தத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள் நாம் நினைக்கிறோம் டூர் சென்று பல இடங்களைப் பார்த்து தனது அறிவை வளர்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து பெற்றோர்களும் கல்வி நிறுவனஙக்ளும் இதற்க்காக முயற்ச்சி செய்கிறார்கள் ஆனால் இந்த டூர் சென்று தனது அறிவை வளர்த்தவர்கள் எத்தனை நபர்கள்? தனது வாழ்க்கை பறிகொடுத்தவர்கள் எத்தனை நபர்கள். டூர் என்ற பெயரில் வெளியூர் சென்று சாப்பிடும் முறை முஸ்லீம் முறைப்படியா? மேலும் டூர் என்ற பெயரில்.
வெளியூர் சென்று ஆண்,பெண் செல்லும் சமயத்தில் சில இடங்களில் ஒன்றாக சேர்ந்துக் கொண்டு குளிக்கிறார்கள் இதனால் ஒரு பெண்ணுடைய மானம் பறி போகிறது நம்முடைய வயது வந்த மகள் மகன் குளிப்பதை நாம் பார்க்க நம்முடைய மனம் ஏற்றுக்கொள்ளுமா? சிந்தியுங்கள்! பெற்றோர்களே நம்முடைய மகள் மகள் குளிப்பதையும் மற்ற ஆண் பெண்கள் ரசிக்கிறார்கள் நம்முடைய மகளை நாம் பல வருடங்களாக பாதுகாத்து வருகிறோம் ஆனால் டூர் என்ற பெயரில் சில நாட்களில் தனது மாணத்தை பறிகொடுத்து
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கான விவரங்கள் வெளியீடு
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான பணியாளர் தேர்வு குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன..
கணினி மூலம் நடைபெறும் ஆன்லைன் தேர்வு மார்ச் 31ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்வுக்கான நுழைவுச் சீட்டை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் www.chennaimetrorail.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
5 உறுப்புகள் மாற்றப்பட்ட அரேபிய பெண்ணுக்கு குழந்தை !!
கத்தார் நாட்டைச் சேர்ந்த பாத்திமா அல் அன்சாரி(வயது 26) என்ற பெண்ணுக்கு 2007ம் ஆண்டு மருத்துவ பரிசோதனை செய்தனர். அப்போது, அவரது குடல் பகுதிக்கு செல்லும் முக்கிய நரம்பில் ரத்தம் உறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்காக அமெரிக்காவின் மியாமி நகரத்தில் உள்ள ஜாக்சன் மெமோரியல் மருத்துவமனையில் 2007ம் ஆண்டு கல்லீரல், கணையம், வயிறு, சிறு மற்றும் பெருங்குடல் ஆகிய ஐந்து உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் அதே மருத்துவமனையில், அவருக்கு பெப்ரவரி 26ம் திகதி சிசேரியன் மூலம் பெண்குழந்தை பிறந்தது.
ரயில்வேதுறை வளர்ச்சியில் கேரளத்தை விட இருவது வருடம் பின்தங்கிய தமிழகம்
கடந்த இருபது வருடங்களாக ரயில் பட்ஜெட்டில் கேரளம் ஜொலித்து வருகிறது. ஆனால் தமிழ்நாடு ரயில்வே துறை வளர்ச்சியில் கேரளத்தை விட இருபது வருடம் பின்தங்கி காணப்படுகிறதுது. சென்னையை தலைமையிடமாக கொண்ட தெற்கு ரயில்வே மண்டலத்தில் சென்னை, திருச்சி, சேலம், பாலக்காடு, மதுரை, திருவனந்தபுரம் என ஆறு கோட்டங்கள் உள்ளன. தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள ரயில்வழி தடங்களை உள்ளடக்கிய பகுதிகளை கொண்டது தெற்கு ரயில்வே மண்டலம் ஆகும்.
அமெரிக்க இராணுவ அத்துமீறல்களை விக்கிலீசுக்கு அளித்த வீரரின் வாக்குமூலம் வெளியீடு !!
விக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு அமெரிக்க ரகசியங்களை அளித்த இராணுவ வீரரின் வாக்குமூலம் அடங்கிய ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடந்த போர்களில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் பற்றி அந்நாட்டு இராணுவ வீரர் பிராட்லி மேன்னிங், விக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு ரகசிய தகவல் அளித்தார்.
அமெரிக்க இராணுவம், ஈராக் தலைநகர் பாக்தாத் நகரில் நடத்திய வான்வழித் தாக்குதலில் பத்திரிக்கையாளர் உள்ளிட்டவர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தின் வீடியோ மற்றும் பல்வேறு ஆதாரங்களை விக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு மேன்னிங் அளித்துள்ளார். இணையதளத்தில் வெளியிடப்பட்ட இந்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
March 14, 2013
மேலப்பாளையத்தில் மாபெரும் தாவா விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் வைத்து 16.03.2013 அன்று இஸ்லாத்தை பரப்புவோம் ! மனித நேயம் காப்போம் என்ற தலைப்பில் மாபெரும் தாவா விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது இந்த பொதுக்கூட்டத்திற்கு பாபர் மஸ்ஜித் இடிப்பில் முக்கிய பங்கு ஆற்றிய பின்பு தவறை உணர்ந்து இஸ்லாத்தை ஏற்ற பல்பீர் சிங் என்ற முஹம்மத் அமீர் மற்றும் உத்தரபிரதேஷ்சை சேர்ந்த 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை இஸ்லாத்திக்கு அழைத்து வந்த முஹமது கலிம் சித்தீக் அவர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்
சங்பரிவாரின் மோடி எனும் மூகமூடி - குமுதம்
அத்வானியின் ரத யாத்திரை நிறைவடைந்த நிலையில், மோடியின் ரத யாத்திரை நாடாளுமன்றம் நோக்கி பயணத்தைத் துவக்கிவிட்டது. அண்மையில் பா.ஜ.க.வின் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. புதிய தலைவரான ராஜ்நாத்சிங் பலத்த கரவொலிக்கிடையில் குஜராத் முதல்வர் மோடியை மேடைக்கு வரவழைத்தார். ஆளுயர மாலை அணிவித்து, அவரின் ‘ஹாட்ரிக்’ சாதனையை வானளாவப் புகழ்ந்திருக்கிறார். அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமருக்கான வேட்பாளர் மோடிதான் என்பதை ‘சூசகமாக’ தெரிவித்துள்ளார்கள். அல்லது நாம் சூசகமாகப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது!
"இது போன்ற முதலமைச்சரை நான் பார்த்ததில்லை" என ராஜ்நாத்சிங் வியந்து புகழ்ந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இந்தியாவில் குடிநீருக்கும் உணவுக்கும் பஞ்சம் வருகிறதோ, இல்லையோ பாரதப் பிரதமருக்கான பஞ்சம் நிறையவே வருகிறது. |
இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா ( Cheraman Perumal )என்பவர் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்ற முதல் இந்தியரும்,தமிழரும் ஆவார். இவரது ஆணைப்படியே முதல் இந்திய மசூதி கேரள மாநிலம் கொடுங்கலூரில் கட்டப்பட்டது. சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி என்று அழைக்கப்படும் இந்த மசூதியே உலகின் இரண்டாவது ஜுமா மசூதி ஆகும்.
சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி பழைய தோற்றம்
இரோம் ஷர்மிளா விடுதலை: உண்ணாவிரதம் தொடருகிறது!
இம்பால்:மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெறக்கோரி 12 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் இரோம் ஷர்மிளா, முதல் வகுப்பு ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தின் உத்தரவின் படி விடுதலைச் செய்யப்பட்டுள்ளார். ஆனால், விடுதலையான பிறகு ஷர்மிளா ‘ஷேவ் ஷர்மிளா’ அலுவலகத்திற்கு சென்று உண்ணாவிரதத்தை தொடருவதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
அஸ்ஸாமில் சிறுவன் அடித்துக் கொலை! குற்றவாளிகளை தப்பவிட்ட போலீஸ்!
கோல்பாரா:அஸ்ஸாமில் அடையாளம் தெரியாத நபர்கள் ஒரு சிறுவனை அடித்துக் கொன்றனர். இச்சம்பத்தைக் கண்டித்து போலீஸ் அதிகாரியை மக்கள் சிறைப் பிடித்தனர்.
அஸ்ஸாமின் மொய்லாபத்தர் பகுதியில் இருந்து இரண்டு சிறுவர்கள் செவ்வாய்க்கிழமை காலையில் துப்டோலா மார்க்கெட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்களை அடையாளம் தெரியாத சிலர் வழிமறித்தனர். அஜிபோர் அலி(15) என்ற சிறுவனை அந்த நபர்கள் அடித்துக் கொன்றனர். மற்றொரு சிறுவனைத் தாக்கி,
மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு:ராஜேந்தர் சவுதரியிடம் என்.ஐ.ஏ மூன்றாவது நாளாக விசாரணை!
ஹைதராபாத்:2007-ஆம் ஆண்டு மக்கா மஸ்ஜிதில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஹிந்துத்துவா தீவிரவாதி ராஜேந்தர் சவுத்ரியிடம் 3-வது நாளாக தேசிய புலனாய்வு ஏஜன்சி விசாரணை நடத்தியது.
புதிய போப்: தீர்மானம் ஏற்படவில்லை - கான்க்ளேவ் இன்றும் தொடரும்!
வாடிகன்: சர்வதேச கத்தோலிக்க சபையின் ஆன்மீக தலைவரான போப் ஆண்டவரை தேர்வுச் செய்யும் நடைமுறையான கான்க்ளேவின்(இரகசியக் கூட்டம்) முதல் நாள் வாக்கெடுப்பில் போப் ஆண்டவரை தேர்வுச் செய்யமுடியவில்லை. சிஸ்டெய்ன் சாப்பலின் புகைபோக்கியில் இருந்து வெளியாகும் கறுப்பு புகைதான் முதல் முடிவாக வெளிவந்தது. இதன் பொருள் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதாகும். வாக்கெடுப்பு இன்றும் தொடருகிறது. மதியத்திற்கு முன்பு இரண்டு முறையும், மதியத்திற்கு பிறகு இரண்டு முறையும் வாக்கெடுப்பு நடக்கும். கர்தினால்களைப் பொறுத்தவரை 60 கர்தினால்கள் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள். அதிலும் 21 பேர்கள் இத்தாலியைச் சேர்ந்தவர்கள். தென் அமெரிக்காவில் 19 கர்தினால்களும், வட அமெரிக்காவில் 14 கர்தினல்களும், ஆப்பிரிக்காவில் 11 கர்தினால்களும், ஆசியாவில் 10 கர்தினால்களும், ஆஸ்திரேலியாவில் 1 கர்தினாலும் இந்த தேர்வில் பங்கேற்றுள்ளார்கள்.
அமெரிக்க ஆக்கிரமிப்பு படையினர் வெளியேற ஆப்கான் கிராம மக்கள் கோரிக்கை!
காபூல்: உள்ளூர் மக்களை அச்சுறுத்தும் அமெரிக்க ஆக்கிரமிப்பு படையினர் வெளியேறவேண்டும் என்று ஆப்கானின் வர்தக் மாகாணத்தில் உள்ள மைதான் ஷாஹர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்பாவி மக்களை கூட்டாக கைதுச் செய்து பல மாதங்கள் சித்திரவதைச் செய்யும் அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவத்திற்கு ஆப்கான் ராணுவமும் உதவிச் செய்வதாக இங்குள்ள மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அமெரிக்க எதிர்ப்புணர்வு தீவிரமடைந்துள்ள மாகாணங்களில் இருந்து அமெரிக்க
படையினர் வெளியேறவேண்டும் என்று 2 தினங்களுக்கு முன்பாக ஆப்கான் அதிபர் ஹமீத் கர்ஸாய் கோரிக்கை விடுத்திருந்தார். அவர் விடுத்த கால அவகாசம் இன்றோடு முடிவடைகிறது.March 12, 2013
மாவீரன் மருத நாயகம் கான் சாஹிப்
இந்தியாவில் சுதந்திற்கு போராடிய முஸ்லிம் போராளிகள் பலர் இருகின்றனர்.அதிகமான போராளிகள் துரோகிகளின் மூலமே ஆங்கிலேயர்களால் கொல்லபட்டனர் .அப்படிபட்ட போராளிகள் இருக்கும் பொழுது ஆங்கிலேயர்களால் இந்தியாவை கைப்பற்றுவது கேள்வி குறியானது?அப்படி பட்டவர்களின் ஒருவர் தான் இந்த மாவீரன் கான் சாஹிப்.
ஏன் இப்பொழுது உள்ள மக்கள் இவரது தியாகத்தை நினைப்பதில்லை,மேலும் ஏன் வரலாற்றில் இருந்து இவரை மறைக்க முயல்கின்றனர்.கோழையாக இருந்தவர்கள் ,நாட்டை காட்டி கொடுத்தவர்கள் எல்லாம் இன்று போற்ற படுகின்றனர் ஆனால் உண்மையான போராளிகள் மறைக்க படுகின்றனர். ஏன் இந்த பாகுபாடு.அவர் முஸ்லிம் என்ற ஒரே காரணமோ?இனியாவது விழிக்குமா வரலாறு ?
இந்தியாவை எதிர்த்து தனி நாடு கேட்டு போராடலாமா?
மார்ச் 24: தமிழர்கள் தனி நாடு கேட்டு போராட்டம் நடத்த தேவையான அனைத்து காரணிகளும் இப்பொழுது நடந்தேறி கொண்டிருகின்றன. இந்தியா என்கிற ஒரு நாட்டோடு நாம் சேர்ந்திருக்க வேண்டுமா என்கிற கேள்வி ஒவ்வொரு தமிழன் மனதிலும் ஏற்பட தொடங்கி உள்ளது.
தமிழர்களுக்கு எதிரான நிலை:தமிழக மீனவர்கள் பல்லாயிர கணக்கில் சிங்கள பயங்கரவாத ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இதை (மத்திய) இந்திய அரசு கண்டு கொள்ளவே இல்லை. கூடங்குளம் அணு உலை முதல் காவேரி பிரச்சனை வரை இந்தியா தொடர்ந்துதமிழர்களுக்கு எதிரான நிலையையே கடைப்பிடித்து வருகிறது.
தமிழர்களுக்கு எதிரான நிலை:தமிழக மீனவர்கள் பல்லாயிர கணக்கில் சிங்கள பயங்கரவாத ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இதை (மத்திய) இந்திய அரசு கண்டு கொள்ளவே இல்லை. கூடங்குளம் அணு உலை முதல் காவேரி பிரச்சனை வரை இந்தியா தொடர்ந்துதமிழர்களுக்கு எதிரான நிலையையே கடைப்பிடித்து வருகிறது.
டி.ஆர்.டி.ஓவில் மீண்டும் இஜாஸ் அஹ்மத் மிர்ஸாவை சேர்க்கக் கோரி கேம்பஸ் ஃப்ரண்ட் இன்று பேரணி!
புதுடெல்லி:பத்திரிகையாளர் உள்ளிட்ட சமுதாயத்தின் பிரமுகர்களை கொலைச் செய்ய சதித்திட்டம் தீட்டினார்கள் என்று பொய்யாக வழக்கை ஜோடித்து அநியாயமாக கைது செய்யப்பட்ட டி.ஆர்.டி.ஓ மத்திய அரசு ஆய்வு நிறுவனத்தின் இளம் விஞ்ஞானி இஜாஸ் அஹ்மத் மிர்ஸாவை மீண்டும் பணியில் சேர்க்கவேண்டும் என்று கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசியப் பொதுச் செயலாளர் சி.ஏ.ரவூஃப் கோரிக்கை விடுத்துள்ளார்.
February 22, 2013
தஞ்சை மாவட்டத்தில் 2–ம் கட்டமாக போலியோ சொட்டு மருந்து முகாம்!
தஞ்சை மாவட்டத்தில் 2–ம் கட்டமாக 2½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஞாயிற்றுக் கிழமை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இந்தியாவில் கடந்த 1995–ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு 18–வது சுற்றின் 2–வது தவணை முகாம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) இந்தியா முழுவதும் நடைபெற உள்ளது. இந்த முகாமின் நோக்கமானது போலியோ நோயை முற்றிலும் ஒழிப்பதாகும்.
இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர்: குஜராத் IPS அதிகாரி சிங்கால் கைது!
அகமதாபாத்:மும்பையை சேர்ந்த 19 வயது மாணவி இஷ்ரத் ஜஹான், ஜாவீத் ஷேக், ஜவஹர், அம்ஜத் அலி உள்ளிட்ட 4 அப்பாவிகளை குஜராத்தின் அஹமதாபாதில், கடந்த 2004ல் “போலி” என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்த வழக்கில், குஜராத்தின் “கிரைம் ரெக்கார்ட் பீரோ”வின் எஸ்.பி.யான, ஜி.எல்.சிங்காலை, சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர்.
முஹம்மது நபி, அம்பேத்கார், காந்தி ஆகியோரின் மதுவுக்கு எதிரான கருத்துக்களை பொதுமக்களிடம் சேர்க்கிற டெலிவரிபாய் நான் - வைகோ !!
மதுவிலக்குக் கருத்துக்களைப் பரப்புவதில் முஹம்மது நபி, அம்பேத்கர், காந்தி ஆகியோரின் செய்திகளை விநியோகிக்கும் சிறுவனாகவே தான் இருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். கடந்த 18ம் தேதி முதல் மதுவிலக்கை வலியுறுத்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ள வைகோ நேற்று காலை
February 21, 2013
கஷ்மீர்:போலீசுக்கு எதிரான புகார்களை விசாரிக்க ஆணையம்!
ஸ்ரீநகர்:ஜம்மு கஷ்மீர் மாநிலத்தில் போலீஸ் அதிகாரிகள் மீதான புகார்களை விசாரிக்க மாநில அரசு ஆணையம் ஒன்றை நிறுவியுள்ளது.இது ஆறு மாதத்திற்குள் அமலுக்கு வரும்.ஸ்டேட்ஸ் போலீஸ் கம்ப்ளய்ண்ட் அதாரிட்டி(எஸ்.பி.சி.எ)
என்பது அதன் பெயராகும்.
என்பது அதன் பெயராகும்.
எஸ்.பி.சி.ஐயின் மாவட்ட கிளைகளும் நிறுவப்படும்.போலீசின் மனித உரிமை மீறல்கள் மற்றும் கஸ்டடி மரணங்கள் குறித்து ஆணையம் விசாரிக்கும். பிப்ரவரி 28-ஆம் தேதி துவங்கும் பட்ஜெட் கூட்டத்தில் இதுத் தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்படும்.உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் இதன் தலைவராக இருப்பார்.
தஞ்சை மாவட்ட ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு தொடக்கம்
தஞ்சை மாவட்ட ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் இளஞ்சிறார் சிறப்பு காவல் குழுமத்தை தஞ்சை துணை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.
ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு
தஞ்சையில், ஆள்கடத்தல் மற்றும் சிறுவர்கள் மீதான பிரச்சினைகளை விசாரிக்க ‘‘ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் இளஞ்சிறார் சிறப்பு காவல் குழுமம்’’ என்ற தனிப்பிரிவை தொடங்க வேண்டும் என்று தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி. ஜெயராம் உத்தரவிட்டார்.
ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு
தஞ்சையில், ஆள்கடத்தல் மற்றும் சிறுவர்கள் மீதான பிரச்சினைகளை விசாரிக்க ‘‘ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் இளஞ்சிறார் சிறப்பு காவல் குழுமம்’’ என்ற தனிப்பிரிவை தொடங்க வேண்டும் என்று தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி. ஜெயராம் உத்தரவிட்டார்.
அதிரை காதிர் முகைதீன் கல்லூரி கலையரங்கம் திறப்பு விழா
காதிர் முகைதீன் கல்லூரியில் புதுபிக்கப்பட்ட கல்லூரி கலையரங்கத்தின் திறப்பு விழா இன்று காலையில் மிக சிறப்பான முறையில் காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் செயலாளர் ஹாஜி.கே.எஸ்.சர்புதீன் அவர்களின் தலைமையில் நடை பெற்றது . இவ் விழாவில் கல்லூரி ஆட்சி மன்றக்குழு தலைவர் ஏ.அப்துல் சுக்கூர் மற்றும் ஆட்சி மன்றக் குழு உறுபினர்கள், கல்லூரி முதல்வர் முனைவர்.ஏ .ஜலால் ,முனைவர்.ஏ .எம் .உதுமான் முகைதீன் , பேராசிரிய, பேராசிரியைகள் ,அலுவலக மற்றும் ஆய்வகப் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்
பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய "திரைத்துறை - ஒரு சமூகப் பார்வை" மாபெரும் கருத்தரங்கம் !!
சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் "திரைத்துறை - ஒரு சமூகப் பார்வை" கருத்தரங்கம் சென்னை எழும்பூரில் உள்ள ஹோட்டல் பாண்டியனில் வைத்து பிப்ரவரி 20 அன்று மாலை 6:45 மணியளவில் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் தலைமையில் நடைப்பெற்றது. மாநிலத் துணைத்தலைவர் எம். சேக் முஹம்மது அன்சாரி வரவேற்புரை நிகழ்த்தினார்.
மோடிக்கு விசா அனுமதி இல்லை ! – அமெரிக்கா !
புதுடெல்லி:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடிக்கு ஏற்படுத்திய விசா தடையில் மாற்றமில்லை என்று அமெரிக்க ஸ்டேட் அஸிஸ்டெண்ட் செகரட்டரி ராபர்ட் ப்ளேக் தெரிவித்துள்ளார் மோடிக்கு எதிரான வழக்குகளில் தீர்ப்பு வெளியாகாமல் விசா மறுப்பை தளர்த்தவோ, மாற்றம் ஏற்படுத்தவோ செய்யப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்
! சுஷில் குமார் ஷிண்டே பேச்சு காற்றில் போச்சு !
காவித் தீவிரவாதம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே தனது கருத்தினை திரும்பப் பெற்று வருத்தம் தெரிவித்தால் தான் பாராளுமன்றக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைப்போம் என்று பாரதீய ஜனதா நிபந்தனை விதித்தது. இதையடுத்து ஷிண்டே தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார்.
February 13, 2013
Subscribe to:
Posts (Atom)