கொழும்பு:தம்புள்ளை மஸ்ஜிதை அகற்ற முடியாது என்று இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக அதன் தலைவரும், இலங்கை அரசு அமைச்சருமான ரவூஃப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.இலங்கை தம்புள்ளை பகுதியில் 60 ஆண்டுகளாக நிலைப்பெற்றிருக்கும் முஸ்லிம்களின் வழிப்பாட்டுத் தலமான மஸ்ஜித் மீது தாக்குதல் நடத்திய வெறிப்பிடித்த புத்த பிக்குகள் அதனை இடிக்க கோரி
April 30, 2012
டெரரிஸ்டுகள் அல்ல மாவோயிஸ்டுகள் !
சென்னை: பயங்கரவாதம் என்பது தேசம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் முக்கியமானதொன்றாகும். காரணம் பயங்கரவாத தாக்குதல்களினால் எண்ணெற்ற உயிர் சேதங்கள், பொருட்சேதங்களும் ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் இந்த பயங்கரவாத தாக்குதல்கள் ஒரு வித பீதியை ஏற்படுத்தியுள்ளது என கூறலாம். இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்துவதற்கு சங்கப்பரிவார ஃபாசிஸ்டு தீவிரவாதிகளை விட கொரூரமானவர்கள் உண்டு என்றால் அது கம்யூனிஸ தீவிரவாதமான மாவோயிஸ்டுகள் தான். முக்கிய பிரமுகர்களை கடத்தி கொல்வது, காவல்துறை அதிகாரிகளை கொலை செய்வது, காவல் நிலையங்களுக்கு தீ வைப்பது, பொதுமக்கள் பயணம் செய்யும் இரயில் வண்டிகளுக்கு குண்டு வைத்து கவிழ்த்து ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வருகிறார்கள் மாவோயிஸ்டுகள்.
அப்துல் நாஸர் மஃதனி:இரு கண்களிலும் பார்வை பறிபோனது- அவசர அறுவை சிகிட்சை!
திருவனந்தபுரம்:பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு கர்நாடகா மாநிலம் பரப்பனா அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள மாநில பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனி தனது கண்களின் பார்வை சக்தியை இழந்துள்ளார். வலதுகண்ணில் முற்றிலும் பார்வை பறிபோய் உள்ளது. இடது கண் பாதி அளவில் பார்க்கும் சக்தியை இழந்துள்ளது.
April 29, 2012
எங்களைப்பற்றி
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே அல்லாஹ்வின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவரின் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக...
"MMWA BROTHERS" என்ற இந்த இணையத்தளத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல், சமூகம், சமுதாயம், உலகம், வளைகுடாச் செய்திகள் மேலும் இது போன்ற அனைத்து விதமான செய்திகளையும் உடனுக்குடன் தங்களுக்கு தெரியப்படுத்துவோம், இன்ஷா அல்லாஹ்... மேலும் இந்த இணையத்தளம் எந்த ஒரு இயக்கத்திற்கோ அல்லது எந்த ஒரு அரசியல் கட்சிகளுக்கோ துணை நிற்காது என்பதை இதன் மூலம் தெரியப்படுத்துகிறேன்.
இப்படிக்கு.
MMWA BROTHERS(mallipattinam muslim welfare association)
கேரளா:காவியாகும் கம்யூனிசத்தின் செங்கொடி!
கேரள மாநிலம் தலச்சேரியில் என்.டி.எஃப் அமைப்பின் உறுப்பினர் முஹம்மது ஃபஸல் கடந்த 2006-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கம்யூனிச வெறியர்களால் படுகொலைச் செய்யப்பட்டார். தற்பொழுது இவ்வழக்கை மத்திய புலனாய்வு ஏஜன்சியான சி.பி.ஐ விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்கள் தொடர்பிருப்பது சி.பி.ஐ விசாரணையில் தெரியவந்துள்ளது.
ராம்தேவ்-ஹஸாரே உண்ணாவிரதம்: ஹிந்துத்துவா தலைவர்களும் பங்கேற்பர்!
புதுடெல்லி:அன்னா ஹஸாரேவுடன் இணைந்து வருகிற ஜூன் மாதம் ராம்தேவ் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பாப்ரி மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளில் ஒருவரான ஹிந்து தீவிரவாத பெண் சன்னியாசி சாத்வி ரிதம்பரா உள்ளிட்ட ஹிந்துத்துவா தலைவர்கள் பங்கேற்பார்கள் என செய்தி வெளியாகி உள்ளது. இதனை ராம்தேவ் மறுக்கவில்லை.
ஒரு வருட இடைவெளிக்கு பிறகு நாங்கள் மீண்டும் ஊழலுக்கு எதிராக இணைந்துவிட்டோம் என்று கடந்த மாதம் ஹஸாரே அறிவித்தார். ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் தாங்கள் பரஸ்பரம் ஒத்துழைப்போம் என்று இருவரும் அறிவித்திருந்தனர்.
வெளிநாட்டு மாவோயிஸ்டு தீவிரவாத அமைப்புகளுடன் கரம் கோர்க்கும் இந்திய மாவோயிஸ்டு தீவிரவாதிகள்
சென்னை: ஒன்றரை மாதங்களாக மாநில அரசுகளை பதற வைத்துக் கொண்டிருக்கும் மாவோயிஸ்டுகள் அமைப்பானது துருக்கி மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டு மாவோயிஸ அமைப்புகளுடன் நெருக்கமான உறவை வைத்திருப்பதாகவும் தெற்காசிய மாவோயிஸ்டு கட்சிகளின் கூட்டமைப்பில் இணைந்திருப்பதாகவும் மத்திய அரசின் உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதுரை ஆதீனத்தின் அதிரடி முடிவு... இந்து அமைப்புகள் அவசரமாக கூடுகின்றன!
மதுரை: நித்தியானந்தாவை, 1500 ஆண்டு பழமை வாய்ந்த இந்தியாவின் மூத்த ஆதீனமான மதுரை ஆதீனத்தின் 293வது குரு மகா சன்னிதானமாக தற்போதைய ஆதீனம் நியமித்துள்ளது குறித்து பல்வேறு இந்துக் கட்சிகளும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த விவகாரம் குறித்துப் பேச அவசரக் கூட்டம் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பங்காருவை கைவிட்டு தலைதப்ப முயலும் பா.ஜ.க!
புதுடெல்லி:லஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்கி 4 ஆண்டுகள் தண்டனை பெற்று திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பா.ஜ.கவின் முன்னாள் தேசிய தலைவர் பங்காரு லட்சுமணனை பா.ஜ.க கைவிட்டது. சட்ட நடவடிக்கைகளின் தொடர்ச்சிதான் இத்தண்டனை என்று பா.ஜ.க சமாளிக்கிறது. கட்சிக்கு இதில் எவ்வித தொடர்பும் இல்லை என்று கட்சியின் முக்கிய செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)