66:6.முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர், அல்லாஹ் அவர்களை ஏவி எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள், தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்.
இன்று பள்ளியில் படிக்கும் சமயத்தில் பள்ளி படிப்பை முடிப்பதற்க்கு முன்பு பின்பும் சில வாலிப ஆண்களும், சில வாலிப பெண்களும் சேர்ந்து கொண்டு டூர் என்ற பெயரில் வெளியூர் செல்கிறார்கள் இதனால் ஒழுக்க சீர் கெடுகள் நடைபெறுகிறது மேலும் ஆண் பெண் கலப்படம் ஏற்படுகிறது மேலும் எவ்வளவு பணம் செலவு செய்யப்படுகிறார்கள்.அப்படி செல்வதால் எத்தனையோ பெண்கள் தவறான செயலுக்கு நிற்பந்தத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள் நாம் நினைக்கிறோம் டூர் சென்று பல இடங்களைப் பார்த்து தனது அறிவை வளர்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து பெற்றோர்களும் கல்வி நிறுவனங்களும் இதற்க்காக முயற்ச்சி செய்கிறார்கள் ஆனால் இந்த டூர் சென்று தனது அறிவை வளர்த்தவர்கள் எத்தனை நபர்கள்?
தனது வாழ்க்கை பறிகொடுத்தவர்கள் எத்தனை நபர்கள். டூர் என்ற பெயரில் வெளியூர் சென்று சாப்பிடும் முறை முஸ்லீம் முறைப்படியா? அங்கு கறி சாப்பிடுகிறார்கள் அந்த கறியை அறுத்தது யார்? மேலும் டூர் என்ற பெயரில் வெளியூர் சென்று ஆண்,பெண் செல்லும் சமயத்தில் சில இடங்களில் ஒன்றாக சேர்ந்துக் கொண்டு குளிக்கிறார்கள் இதனால் ஒரு பெண்ணுடைய மானம் பறி போகிறது நம்முடைய வயது வந்த மகள் மகன் குளிப்பதை நாம் பார்க்க நம்முடைய மனம் ஏற்றுக்கொள்ளுமா? சிந்தியுங்கள்! பெற்றோர்களே நம்முடைய மகள் மகள் குளிப்பதையும் மற்ற ஆண் பெண்கள் ரசிக்கிறார்கள் நம்முடைய மகளை நாம் பல வருடங்களாக பாதுகாத்து வருகிறோம் ஆனால் டூர் என்ற பெயரில் சில நாட்களில் தனது மாணத்தை பறிகொடுத்து விடுகிறார்கள் ஆண்கள் மட்டும் தான் டூர் சுற்றுலா செல்கிறோம் என்று ஒரு சில பள்ளிக்கூடம் கூறுகிறார்கள் ஆனால் அங்கு நடைபெறும் ஆபாச அசிங்கமான முறையை பார்க்க நம்மால் தடை செய்ய முடியுமா? சுமார் 100 மாணவர்கள்; செல்கிறார்கள் சுமார் ஒரு சில ஆசிரியர்கள் செல்கிறார்கள் இந்த செயலை பார்வையை தடை செய்ய முடியுமா? பெற்றோர்களே சிந்தியுங்கள்! மேலும் நம்முடைய மகளை சிறு வயதிலேயே நாம் படுக்கையை விட்டு விலகியிருந்தோம் ஆனால் டூர் என்ற பெயரில் வெளியூர் சென்று லாட்ஜில் தங்குகிறார்கள் இதனால் நம்முடைய மகள் யாருக்கு அருகில் தூங்குவாள் சிந்தியுங்கள்?
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் உங்கள் குழந்தை 7வயது அடைந்தால் தொழுகை கற்றுக் கொடுங்கள் 10 வயது அடைந்தும் தொழாவிட்டால் அடித்து தொழ வைய்யுங்கள் மேலும் தங்களது குழந்தையின் படுக்கையை விட்டு பிரித்துத் விடுங்கள்.பெற்றோர்களே நம்முடைய குழந்தை விட்டு பிரித்து விட வேண்டும் என்று சொல்லப்பட்டது ஆனால் இன்று அதற்க்கு மாற்றமான நடைபெறுகிறது. இதற்க்கு அனுமதி அளிக்க வேண்டாம். எப்பொழு ஒரே வயது உள்ளவர்கள் ஒன்று இனைந்தால் என்ன தவறும் நடக்கலாம். ;ஒரு சில பெற்றோர்கள் தன்னுடைய மகனை விடுமுறை நாட்களில் தீனுடைய கல்வி கற்க்க ஆனுப்பப்படுகிறார்கள் கோடை கால பயிற்சி என்ற பெயரில் அனுப்பப்படுகிறார்கள்.மேலும் ஒரு சில பெற்றோர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஜமாத்தில் அனுப்புகிறார்கள் இதனால் இவர்களுடைய நேரம் பணம் பாதுகாக்கப்படுகறிது.3.வாலிபர்களின் வழிகாட்டிற்க்கு நட்பு! நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் இறை நம்பிக்கையாளனிடம் மட்டும் நட்பு கொள்ளவேண்டும் மேலும் இறையச்சமுடையவர் மட்டும் உன்னுடன் அமர்ந்து உனது உணவை உண்ணட்டும் என்றார்கள்
நல்ல நண்பன் கஸ்தூரி வியாபாரி போன்று இன்னும் தீய நண்பன் கொல்லனின் உலையை ஊதுபவரும் ஆவார் கஸ்தூரி வியாபாரி அதனை உனக்கு கொஞ்சம் கொடுக்கலாம் அல்லது குறைந்த பட்சம் நறுமனத்தையாவது நுகரலாம் ஆனால் உலை ஊதுபவரோ உனது ஆடையை எரித்து விடலாம் அவரிடமிருந்து கெட்ட வாடையைத்தான் நீ பெறுவாய் (நூல் புகாரி முஸ்லீம் மிஷ்காத்).
இளைஞர்களின் வாழ்வு ஆரோக்கியமும் சீர்ழிவதற்;குமான மிக முக்கிய வழி காட்டியாக இருப்பது நட்பு ஒருவனின் வாழ்வில் அதிக நாட்கள் அதிக பழக்கவழக்கம் நன்மையோ தீமையோ வருவது யாரின் மூலம் நண்பனின் மூலம் தான் தீய நண்பனோடு சகவாசம் வைக்கும் போது தீய பண்புகள் இவன் மரணம் வரைக்கும் அந்த பழக்க வழக்கம் வருகிறது. புகை பிடித்தல். மது அருந்துதல். தவறான தொடர்புகள் மேலும்; நபி(ஸல்)அவர்கள் காலத்தில் நட்பு என்பது அனைவரையும் சுவர்க்கத்தின் பால் இழுத்துச் சென்றது நபி(ஸல்)அவர்கள் 23 வருடத்தில் நல்ல நண்பனாக உருவாக்கினார்கள சுமார் 1 லட்சம் மக்கள் சுவனபதிக்கு தயார் செய்தார்கள் எதன் மூலம் நல்ல நண்பனின் மூலம் நல்ல நண்பனின் பழக்கம் மரணித்த பிறகும் நிரந்தர சுவனபதிக்கு தயாராகிவிடுகிறான்.;
இன்று சிலர் குடும்பத்தில் பணத்தை பறிக்கும் மகன்கள் அந்த நண்பனுக்காக எதையும் செய்ய தயாராகிவிடுகிறான் தனது நண்பன் பணம் கேட்டுவிட்டார் தனது தந்தை மிகவும் கஷ்டப்பட்டு உழைத்த பணம் நண்பனுக்காக செலவாகிறது நண்பனின் சொல் தொற்று நோய் போன்று அதற்க்கு முடிவு கிடையாது தீய பழக்கவழக்கம் புத்தகத்தின் மூலம் வருவதுகிடையாது நண்பனின் செயலைக் கொண்டுதான் அதிகமாக வருகிறது யாராவது நான் புகையின் நன்மையும் தீமையும் புத்தகத்தின் மூலம் தெரிந்து கொண்டேன் என்று கூறமுடியுமா? எப்படி வந்தது? நண்பனின் மூலம் தான் வந்தது உன் நண்பனை நேசிப்பதில் நடுநிலையாக மேற்கொள்ளவேண்டும் என்றாவது ஒரு நாள் அவன் உனக்கு பகைவனாகவும் ஆகலாம் உனக்கு பிடிக்காத செயல் இருக்கலாம் ஆங்கிலத்தில் ஒரு பழமொழிகள் கூறுவார்கள்A YOUNG LEADING THE YOUNG IS LIKE A BLIND LEADING THE BLIND THEY WILL BOTH FALL IN TO DITCHஒரு வாலிபர் இன்னொரு வாலிபருக்கு வழிகாட்டுவது என்பது ஒரு குருடன் மற்றொரு குருடனுக்கு வழிகாட்டுவதைப் போன்றதாகும்
இன்றை வாலிபர்கள் பெரியவர்களை மதித்து வாழ்ந்தால் மிகப்பெரிய சாதனையை பெறலாம் வாலிபம் என்பது நெருப்பு மாதிரி அது எப்பொழுதும் சூடாக வெப்பமாகவே இருக்கும் நெருப்பை அணைக்க தண்ணீர் தேவை. அதுதான் மூத்தவர்கள் இரண்டு பேர்களும் ஒன்றாக சேர்வது மிகவும் அரிது வாலிபர்கள் மூத்தவர்களின் பேச்சுக்கு எப்போழுதும் எதிர்த்து பேசுவார்கள் இப்படி பேசினால் வாழ்வில் முன்னேற்றம் அடைய முடியாது பின்னேற்றம் தான்? தண்ணீர் என்பது வேறு தீ என்பது வேறு ஆனால் இரண்டும் ஒன்றாக சேர்ந்தால் நீராவியாக மாறிவிடும்;(STEAM) நீராவி பெரும்; ரயில் வண்டிகளின் சுமையை இழுத்துச்செல்கிறது வாலிபர்களின் உற்சாகம் பெரியவர்களின் விவேகம் இந்த இரண்டும் இணைந்துவிட்டால் வாலிப வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனையாளர்களாக மாறலாம் இன்ஷா அல்லாஹ்.டூர் சென்று நண்பர்களிடம் கெட்ட பழக்க வழக்கம் இல்லாமல் உங்களுடைய குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
இஸ்லாம் நேரத்தின் மகிமையை நன்கு உணர்த்துகிறது நேரத்தை பற்றி அல்லாஹ் பல இடங்களில் கூறுகிறான் காலத்தின் மீதும் அதிகாலையின் மீதும் முற்பகலின் மீதும் பகலின் மீதும் இரவின் மீதும் சத்தியமாக என்று அல்குர்ஆனில் பல இடங்களில் கூறுகிறான் வாழ்க்கை என்பது அல்லாஹ் நமக்கு அளித்த அன்பளிப்பாகும் எந்த அன்பளிப்பை பற்றி நாளை மறுமையில் கேட்;கப்படும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் மறுமையில் கேட்கப்படும் கேள்விக்க பதில் கூறாமல் தன்னுடைய இடத்தை விட்டு நகர்ர முடியாது.
1.தன்னுடைய வாழ்வை எவ்வாறு கழித்தாய் 2.தன்னுடைய வாலிபத்தை எவ்வாறு பயன்படுத்தினாய் 3.தன்னுடை செல்வத்தை எவ்வாறு எப்படி சம்பாதித்தாய்? எப்படி செலவு செய்தாய்? 4.தான் கற்ற அறிவின் படி என்ன அமல் செய்தாய்.
அன்புள்ள வாலிபர்களே! நம்முடைய நேரம் எப்படி செலவாகிறு இந்த கேள்விக்கு என்ன பதில் நாளை மறுமை நாளில் பதில் கூற வேணடியநாள் அதனால் ஒவ்வொரு வாலிபர்களும் தனது காலத்தையும் நேரத்தையும் மிக்க கவனமாக கவணிக்கவேண்டும் வாலிபர்களுக்கு நேரத்தை சரியாக முறைப்படித்தினால் அவர்கள் நல்வழிக்கு செல்ல வாய்புண்டு நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் அறிவுடைய ஒருவன் நேரத்தை நான்கு பகுதிகளாக பிரித்துக்கொள்ள வேண்டும் 1.அல்லாஹ்வுக்காக இபாதாத் (வணங்குதல்) 2.அவனை பற்றி சுயபரிசோதனை 3.அல்லாஹ்வின் படைப்புகளை பற்றி சிந்திப்பான் 4.தனது வாழ்க்கை தேவையைகளை நிறைவேற்றிக் கொள்வான்.
அன்புள்ள வாலிபர்களே மேற்கூறப்பட்ட நபிமொழியை நாம் தினந்தோறும் சுய பரிசோதனை செய்துக் கொள்வோம் இன்று நேரத்தை அதிகமான வாலிபர்கள் அங்கும் இங்கும் நிற்பதை நாம் பலஇடங்களில் பார்த்து வருகிறோம் இவர்கள் அந்த நேரத்தை முறையாக பயண்படுதினால் இவர்கள் செல்லும் இடம் நன்மை தரக்கூடிய செயலாக மாறிவிடும்.
காலம் பொன் போன்றது என்பார்கள் ஆனால் உண்மையில் அதைவிடவும் மதிப்புள்ளது பொன் பொருள் இழந்துவிட்டால் மீண்டும் முயற்;சி செய்து அதை பெறலாம் ஆனால் இழந்த காலத்தை மீட்க இவ்வுலகில் எந்த வழியுமே இல்லை தனது வாழ்வில் நேரத்தை பார்க்காத மனிதனையும் கடிகாரம் இல்லாத வீட்டையும் நிகழ்ச்சியில் நிரலில் நேரத்தை குறிக்காத நிகழ்ச்சியையும் கால அட்டவணை இல்லாத பள்ளிக்கூடத்தையும் மஸ்ஜித்களில் தொழுகை நேரம் இல்லாத மஸ்ஜித்களையும் இவைகளுக்கு மிகமுக்கியம் நேரம் தான் ஆனால் நம் வாழ்க்கை மிகமுக்கியமான பருவம் வாலிபம் அதனை முறையாக பயன்படுத்துவதற்;கு நேரமும் அட்டவனை இல்லையா? அன்புள்ளம் கொண்ட வாலிபர்களே? உங்கள் அட்டவனை எப்படி?
காலமும் நேரமும் விலைமதிக்க முடியாதவைகள்? நேரத்தை பாதுகாத்தால் நரகத்தை பாதுகாக்கலாம்இழந்த சொத்து சுகங்களை மீட்;க முடியும் இழந்த உடல் நலத்தையும் மீண்டும் பெற முடியும். இழந்த பட்டம் பதவி அடைய முடியும.; இழந்த காலத்;தையும் நேரத்தையும் ஒரு போதும் மீட்கவே முடியாது.
- நஜ்முத்தீன்
(தீனியாத் ஆசிரியர், கா.மு.மேல்நிலைப் பள்ளி அதிரை)
No comments:
Post a Comment