காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ஃப்ரான்ஸிஸ் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா 25.04.2012 புதன் கிழமை மாலை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி ரோஸம்மா அவர்கள் தலைமை வகித்தார்கள், பள்ளியின் தினியாத் ஆசிரியர் நஜ்முத்தீன் கராஅத் ஓதினார்.
விழாவில் பள்ளியின் ஆசிரியர்கள், மற்றும் ஆசிரியைகள் திரு ஃப்ரான்சிஸ் அவர்களை வாழ்த்திப் பேசினார்கள்.
குறிப்பாக வாழ்த்திப் பேசிய தலைமை ஆசிரியை திருமதி ரோஸம்மா அவர்கள் கண்ணீருடன், திரு ஃப்ரான்சிஸ் அவர்களின் நற்பன்புகளை எடுத்துக் கூறியது நெகிழ்ச்சியாக இருந்தது.
ஆசிரியர் ஹஜி முஹம்மது அவர்கள் பேசும்போது, அவருக்கே உரிய நடையில், 32 ஆண்டுகள் 4 மாதங்கள் 15 நாட்கள் என , திரு ஃப்ரான்சிஸ் அவர்கள் வேலை செய்த நாட்களை கணக்கிட்டு கூறியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
மேலும் ஹாஜி சார் பேசும்போது,ஆங்கிலத்தில் சில சந்தேகங்களை திரு ஃப்ரான்சிஸ் அவர்களிடம்தான் கற்றுக்கொண்டேன் என கூறினார்.
பல வருடங்களுக்கு பிறகு நானும் ஒரு மாணவனாய் ஹாஜி சார் அவர்களின் பேச்சை அவர் முன்பு அமர்ந்து கேட்கும்போது,அன்று அவர் பாடம் நடத்திய அதே முறை, என்னை பழைய நினைவுகளுக்கு இழுத்துச் சென்றது.
திரு ஃப்ரான்சிஸ் அவர்கள் மிக செல்வந்தர் வீட்டில் பிறந்தாலும், ஏழ்மையுடன் காட்சி தருவது, மாணவர்களை அன்பாக அரவனைத்துச் செல்வது, வெளியில் தெரியாத சில உதவிகள் செய்தது என இவரின் பல்வேறு நற்பண்புகள் நினைவு கூறப் பட்டது.
No comments:
Post a Comment