April 12, 2012

சுனாமி தாக்கலாம்.. கடலோரப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்


சென்னை: இந்தோனேஷியாவில் பசிபிக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள 8.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தையடுத்து தமிழகத்தின் கிழக்குக் கடலோரப் பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கும் அபாயம் உள்ளது. இதனால் கடலோரப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறுவது நல்லது. கடலுக்கடியில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தையடுத்து பசிபிக் கடல், வங்கக் கடலோரப் பகுதிகளில் உள்ள 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சுனாமி அலைகள் எந்த நேரத்திலும் தமிழக பகுதிகளைத் தாக்கலாம். இதனால் கடலோரப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறுவதே நல்லது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment