April 21, 2012

‘அவர்’ போகும் போது பிரச்னை கிளப்பினார்; ‘இவர்’ வரும் போது பிரச்னையோடு வருகிறார்


புதுடில்லி: இந்திய ராணுவ தளபதி என்பது கம்பீரமான பெரும்அதிகாரத்தோரணையுடன் வலம் வரும் பதவி என்பதை விட தேசத்தின் மதிப்புள்ள ஒரு பொறுப்பு ஆகும். ஆனால் இந்த உயர்ந்த அந்தஸ்தில் பணியாற்றும் சிலர் சர்ச்சைகளில் சிக்குவதும், சர்சசைகளை கிளப்புவதுமாக இருந்து வருவதுமூலம் பிறநாட்டவர்கள் இந்திய ஜனநாயகத்தின் மதிப்பையும், மாண்பையும் சற்று குறைந்து மதிப்பிடுவார்களோ என்ற கவலை சாதாரண குடிமகனுக்கு கூட இல்லாமல் இருக்க முடியாது.

தற்போது ராணுவ தலைமை தளபதியாக இருந்து விரும் வி.கே.,சிங் தனது வயது பிரச்னையை காட்டிஓய்வு பெற மாட்டேன் என்றார். இது கோர்ட் வரை சென்று மத்திய அரசு பக்கம் வெற்றி கிடைத்தது என்றா<லும், ராணுவ தளபதிக்கு அழகா என்றால் என்ன பதில் சொல்வது ! இதனால் விரக்தியுற்ற தளபதி சிங், பிரதமர் அலுவலகத்திற்கு ராணுவத்தில் ஆயுத குறைபாடு என்று கடிதம் எழுதினார். தொடர்ந்து எனக்கு 14 கோடி பேரம் பேசபட்டது. நான் வாங்க மறுத்து விட்டேன் என்கிறார். இது தொடர்பாக யாரும் நெருங்க முடியாத தளபதி சிங் வீட்டின் கதவை சி.பி.ஐ,.அதிகாரிகள் தட்ட வேண்டியதாயிற்று.

இது ஒரு பக்கம் இருக்கட்டும்,புதிய தளபதியாக நியமிக்கப்டவிருக்கும்தளபதி விக்ரம்சிங்கிற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி விட்டது. ஆனால் இவர் இந்த பதவிக்கு தகுதியற்றவர் என்றும் இந்த உத்தரவை திரும்ப பெறவேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற முன்னாள் தேர்தல் கமிஷனர் கோபால்சாமி மற்றும் மாஜி அட்மிரல் ராம்தாஸ் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் ஏப்., முதல் வாரத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை வரும் வாரத்தில் நடக்கவிருக்கிறது. 

இந்த மனுவில் ; கடந்த 2001 ல் கிழக்கு பிராந்திய கமாண்டராக இருந்த விக்ரம்சிங் போலி என்கவுன்டர் செய்தார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. எனவே இவரை இந்த பொறுப்பில் அமர்த்தினால் இது நியாயமாக இருக்க முடியாது. மேலும் 2008 ல் இவர் தலைமையில் காங்கோ சென்ற ஐ.நா.,வுக்கான அமைதிப்படை பணியில் இருந்து தவறு செய்தவர்கள் மீது இவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ளனர். இதனையடுத்து மத்திய அரசு காவியட் மனு தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக அரசிடம் விளக்கம் கேட்காமல் எவ்வித முடிவும் எடுக்க கூடாது என கோரியுள்ளனர். அடுத்த வாரம் விசாரணைக்கு வரும்போது சூட்டுக்கு பஞ்சம் இருக்காது.

அவர் (வி.கே.,சிங்) பிரச்னையோடு கிளம்புகிறார், இவர் (விக்ரம்சிங்) பிரச்னைகளோடு வருகிறார்.

No comments:

Post a Comment