April 26, 2012

தொடரும் அமெரிக்க அதிகாரிகளின் பாலியல் லீலைகள்: பிரேசிலில் 4 பேர் மீது குற்றச்சாட்டு!



ப்ரேசிலியா:கொலம்பியாவில் 21 அமெரிக்க அதிகாரிகள் விபச்சாரிகளுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட சம்பவம் வெளியானதால் உருவான சர்ச்சை அடங்கும் முன்னரே பிரேசில் நாட்டிலும் இதே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இங்குள்ள அமெரிக்க தூதரகத்தின் மூன்று ராணுவத்தினரும் ஒரு அதிகாரியும் பாலியல் புகாரில் சிக்கியுள்ளனர்.
தேவை முடிந்த பிறகு பணம் அளிப்பது தொடர்பான தகராறில் அமெரிக்க அதிகாரிகள் காரில் இருந்து பெண்ணொருத்தியை கீழே தள்ளிவிட்டுள்ளனர். இச்சம்பவத்தில் அப்பெண்ணின் தோள் எலும்பு உடைந்தது.
தலைநகரில் இரவு கிளப் ஒன்றின் வெளியே அமெரிக்க அதிகாரிகள் 2 பெண்களுடன் தகராறில் ஈடுபட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரியை மேற்கோள்காட்டி அசோசியேட் ப்ரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதேவேளையில் நான்குபேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்புத் துறை செயலாளர் லியோன் பனேட்டா தெரிவித்துள்ளார். ராணுவத்தினர் பிரேசில் இருந்து திரும்ப அழைக்கப்பட்டு அவர்களது ரேங்க் குறைக்கப்பட்டுள்ளது. தூதரக அதிகாரியும் மாற்றப்பட்டுள்ளார்.
thanks asiananban

No comments:

Post a Comment