April 5, 2012

மின் கட்டண உயர்வை முற்றிலுமாக திரும்பப் பெற வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் SDPI ஆர்ப்பாட்டம் ...............


மின் கட்டண உயர்வை நிறைவேற்ற தமிழக அரசு பரிந்துரைத்ததன் அடிப்படையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி அறிவித்தது. இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் கடும் கண்டனத்தை தெரிவித்ததையடுத்து தமிழக அரசு மின் கட்டணத்தை குறைத்து அறிவித்துள்ளது.

இது மக்களின் எதிர்ப்பை சமாளிக்க எடுக்கப்பட்ட கண்துடைப்பு நடவடிக்கையாகும். காரணம் ரூ. 7,874 கோடிக்கு மின் கட்டணத்தை உயர்த்திவிட்டு, ரூ. 740 கோடி அளவிற்கு மட்டுமே திரும்பப் பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே மக்களை பாதிக்கும் மின் கட்டண உயர்வை முற்றிலும் திரும்பப் பெற தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 12ம் தேதிக்குள் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்

No comments:

Post a Comment