ஜூனியர் விகடன் பத்திரிக்கை தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் நடத்திய சர்வேயில் நமது தொகுதி எம்.எல்.ஏ. திரு.ரங்கராஜன் அவர்களைப் பற்றிய மக்கள் கருத்தை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் 100 பேர் வீதம் சந்தித்து கருத்துக்கணிப்பு நடத்தியதாகச் சொல்லப்பட்டது. அந்த 100 பேரில் அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்கள் எவரும் இருந்திருப்பின் பகிர்ந்து கொள்ளலாம்.
May 24, 2012
லாரல் பள்ளியை நெருங்கிய கா.மு.பெ.மேல்நிலைப்பள்ளி
"இக்கரைக்கு அக்கரை பச்சை" என்பதுபோல் நமதூர் கல்வி நிலையங்களைவிட பள்ளிகொண்டானில் அமைந்துள்ள லாரல் மேல்நிலைப்பள்ளியின் கல்வித் தரம் சற்றுகூடுதல் என்ற கருத்து பலரிடமும் நிலவுகிறது. லுஹர், அஸர் & மஃரிப் தொழுகைகளும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையும்கூட தவறுகிறது என்பதை அறிந்தும்கூட தரமான படிப்பு என்ற மோகத்தில் தமது பிள்ளைகளை 6-7 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள லாரல் மேல்நிலைப் பள்ளிக்கு அனுப்பும் அதிரை பெற்றோர்களும் உளர்.
இந்திய பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் சிங்கப்பூர் !
சிங்கப்பூர்: சிங்கப்பூர் சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை அடிப்படையாக வைத்தே இந்திய பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. உலகளவிலான பெட்ரோலிய விலை லண்டன் சந்தையை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்பட்டாலும், அதற்கு அடுத்த முக்கிய பங்கை சிங்கப்பூர் பங்குச் சந்தை தான் நிர்ணயிக்கிறது. கச்சா எண்ணெய் மற்றும் மோட்டார் ஸ்பிரிட் எனப்படும் பென்சீன் ஆகியவற்றின் விலை சிங்கப்பூர் சந்தையில் எந்த நிலையில் உள்ளதோ, அதை வைத்தே இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
உ.பி குண்டுவெடிப்பில் 6 பேர் பலி !
அலகாபாத்:உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சிறார்கள் உள்பட ஆறுபேர் கொல்லப்பட்டனர். 15 பேருக்கு காயம் ஏற்பட்டது.நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் குண்டுவெடித்துள்ளது.சம்பவம் நடத்த இடம் குடிசைப் பகுதியாகும். இங்கு குப்பை பொறுக்குபவர்கள் அதிக அளவில் வசித்து வந்துள்ளனர். குண்டு வெடிப்பு
இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு !
டெல்லி: இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ7.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இப்புதிய பெட்ரோல் விலை இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ரூபாய் மதிப்பில் ஏற்பட்டு வரும் பெரும் சரிவைத் தொடர்ந்து பெட்ரோலிய பொருட்களின் பொருட்கள் விலை உயர்த்தப்படக் கூடும் என்று கூறப்பட்டது. மேலும் நாட்டின் பொருளாதார சிக்கலை சமாளிக்க கடினமான முடிவுகளை எடுக்கப் போவதாக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்திருந்தார்.
ஹஜ்:சவூதி ஏர்லைன்ஸ் மற்றும் ஜெட் ஏர்வேஸிற்கு அனுமதி !
கேரளா:இவ்வாண்டு புனித ஹஜ் பயணத்திற்கான சர்வீஸ்களை நடத்த சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஜெட் ஏர்வேஸ் ஆகிய விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு ஹஜ் பயண சர்வீஸ் நடத்துவதில் இருந்து ஏர் இந்தியா முற்றிலும் வாபஸ் பெற்றுள்ளது. மேலும் கடந்த ஹஜ் சர்வீஸ் நடத்திய நாஸ் ஏர் நிறுவனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த ஹஜ் கமிட்டி கூட்டத்தில்
குருகுலத்தில் பெண்ணுடன் குதூகலம்: சாமியாரை அடித்து உதைத்த சீடர்கள் !
ராஜ்கோட்:குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள மாவடி கிராமத்தில் உள்ள பிரபல சுவாமி நாராயண் குருகுலத்தில், ஒரு பெண்ணுடன் பூட்டிய அறைக்குள் இருந்த 32 வயது துறவியை போலீஸார் கையும் களவுமாக பிடித்தனர். சுவாமி நாராயண் என்ற மதப் பிரிவைச் சேர்ந்த ஆனந்த் சொரூப்தாஸ் குரு குலம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த மதப் பிரிவின் விதிப்படி பெண்களின் முகத்தை சாமியார்கள் நேருக்கு நேர்
ஒபாமாவிற்கு மன்னிப்பு கேட்கும் தைரியம் இருக்கிறதா? - பிலாவல் பூட்டோ கேள்வி
நியுயார்க் - அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு பாகிஸ்தானிடம் மன்னிப்பு கோரும் தைரியம் வேண்டும் என பிலாவல் சர்தாரி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானை ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக இருப்பவர் பிலாவல் பூட்டோ சர்தாரி. இவர் அதிபர் சர்தாரி மற்றும் பெனாசிர் பூட்டோவின் மகனும் ஆவார். கடந்த ஆண்டு அமெரிக்கா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானைச் சார்ந்த ராணுவ வீரர்கள் 24 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்காக அமெரிக்க அதிபர் ஒபாமா, பாகிஸ்தானிடம் மன்னிப்பு கோர வேண்டும் எனத்
தெரிவித்துள்ளார்.முஷாரப் கைதாகும் வரை வாரன்ட் அமலில் இருக்கும். இண்டர்போலிடம் பாகிஸ்தான் உறுதி !
பெனாசிர் புட்டோ கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு கோர்ட் விதித்துள்ள வாரன்ட் உத்தரவு, அவர் கைதாகும் வரை அமலில் இருக்கும் என்று சர்வதேச போலீசிடம்(இன்டர்போல்) பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப், நாட்டில் இருந்து வெளியேறி லண்டனிலும், துபாயிலுமாக வசித்து வருகிறார். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முஷாரப்புக்கு அந்நாட்டு நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்துள்ளது. இந்த வாரன்ட் உத்தரவை பாகிஸ்தானின் விசாரணை அமைப்பான எப்.ஐ.ஏ, சர்வதேச போலீசாரிடம் அளித்துள்ளது.
+2 தேர்வில் நாமக்கல் சுஷ்மிதா முதலிடம்-3 இடங்களும் நாமக்கல்லுக்கே
!
சென்னை: பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு வெளியாகியது. இதில் நாமக்கல்லைச் சேர்ந்த எஸ்.கே.வி மேல்நிலைப்பள்ளி மாணவி சுஷ்மிதா 1189 மதிப்பெண்களுடன் மாநிலத்திலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளார்.2வது இடமும் நாமக்கல்லுக்கே அதே நாமக்கல்லைச் சேர்ந்த எஸ்.கே.வி மேல்நிலைப்பள்ளி கார்த்திகா, நாமக்கல் கிரீன்பார்க் பள்ளி மாணவர் அசோக்குமார், நாமக்கல் விவேகானந்தா பள்ளி மாணவர் மணிகண்டன் ஆகியோர் 1188 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.
அமைச்சர்கள்; ஆனா அமைச்சர்கள் அல்ல
புதுக்கோட்டை இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு செல்லும் அமைச்சர்கள், அமைச்சர்களாக செல்லாமல், கட்சி நிர்வாகிகளாகவே வலம் வரவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவுக்கிணங்க, எந்தவித போலீஸ் பந்தாவும் இல்லாமல், சாலையோர உணவு விடுதியில் சமூகநலத்துறை அமைச்சர் வளர்மதி மதிய உணவு சாப்பிட்டார்.
புதுக்கோட்டை தொகுதிக்கு ஜூன் 12ஆம்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அ.தி.மு.க. சார்பில் கார்த்திக் தொண்டைமானும்,தே.மு.தி.க. சார்பில் ஜாகீர் உசைன்போட்டியிடுகின்றனர். வேட்பு மனு தாக்கல் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. தே.மு.தி.க. வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டார். அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
இந்திய தயாரிப்புகளுக்கு ஹலால் முத்திரை - முஸ்லிம்களைக் கவரும் முயற்சி
உலகமே கிராமம் போன்று சுருங்கி விட்ட நவீன யுகத்தில் வணிகத் துறையில் கடும் போட்டி நிலவுகிறது. தங்கள் பொருட்களை விற்க பல்வேறு உத்திகளை தயாரிப்பாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
அவ்வகையில் இந்திய வணிகப் பொருள் தயாரிப்பாளர்கள் பலரும் தங்கள் தயாரிப்புகள் உலகளவில் வெற்றிகரமாகச் செல்லும் வகையில் தங்கள் பொருட்களுக்கு ஹலால் முத்திரை பெற்றுக்கொள்ள முனைப்பு காட்டுகிறார்கள்
உணவு தயாரிப்புகள் மட்டுமின்றி மற்ற அழகுச்சாதனத் தயாரிப்பாளர்களும் தங்கள் தயாரிப்புகள் ஹலாலான மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதை உலகிற்குத் தெரிவிக்க விரும்புகிறார்கள். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்களாக கெவின்கேர், தாவத், பிகானோ, கோல்ட் வின்னர் ஆயில், வாடிலால் ஐஸ்க்ரீம், அம்ருதாஞ்சன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.ஃபேஸ்புக்கில் ஆசிரியைகளை விலைமாதுகளாக சித்தரித்த +2 மாணவன்
மதுரை: மாணவி ஒருவர் சரியாக படிக்காததால் அவரைக் கண்டித்த ஆசிரியைகளின் புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் போட்டு தேவைக்கு அழைக்கலாம் என்று விளம்பரம் செய்த பிளஸ் டூ மாணவனை போலீசார் கைது செய்தனர்.
மதுரையில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் டூ படித்தவர் சந்தியா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் ஆண் நண்பருடன் சேர்ந்து ஊர் சுற்றுவதாகவும், ஒழுங்காக படிப்பதில்லை என்றும் கூறி ஆசிரியை ஒருவர் அவரை கண்டித்துள்ளார்.
ஆந்திராவில் இரு ரயில்கள் மோதி, தீப் பிடித்து 25 பேர் பலி
அணுமின் நிலையங்களின் சுற்றுவட்டாரங்களில் புற்றுநோயின் சாத்தியம் குறித்து முழுமையான ஆய்வு துவக்கம்!
புதுடெல்லி:இந்தியாவில் அணுமின் நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளின் சுற்று வட்டாரங்களில் வசிப்பவர்களிடம் உருவாக வாய்ப்புள்ள புற்றுநோய் உள்ளிட்ட நோய்களைக் குறித்து மிக கவனமான ஆய்வு நடைபெறவுள்ளது.
மும்பையில் டாட்டா மெமோரியல் செண்டர் இதற்கான பணிகளை துவக்கியுள்ளது. ஆய்வின் ஒரு பகுதியாக அணுசக்தி நிலையங்களின் சுற்று வட்டாரங்களில் வசிப்பவர்களின் முழு விபரங்கள் அடங்கிய பதிவேடு தயாராகும்.
எய்ம்ஸில் சாதி பாகுபாடு: பாராளுமன்றத்தில் எம்.பிக்கள் எதிர்ப்பு!
புதுடெல்லி:மருத்துவத்துறையில் இந்தியாவின் மிகச்சிறந்த நிறுவனமாக கருதப்படும் ஆல் இந்தியா மெடிக்கல் சயின்ஸில்(எய்ம்ஸ்) எஸ்.சி-எஸ்.டி பிரிவினர் மற்றும் ஒ.பி.சி பிரிவினரிடமும் உயர்ஜாதி டாக்டர்கள் சாதிபாகுபாடு காட்டுவதாக பாராளுமன்றத்தில் எம்.பிக்கள் குற்றம்சாட்டினர்.
ஐக்கிய ஜனதா தள உறுப்பினர் மங்கணிலால் மண்டல் பாராளுமன்றத்தின் கேள்வி நேரத்தில் இப்பிரச்சனையை எழுப்பினார்.
சர்வதேச அணுசக்தி ஏஜன்சி தலைவர் ஈரானில்: பேச்சுவார்த்தை துவக்கம்!
டெஹ்ரான்:அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைக்காக சர்வதேச அணுசக்தி ஏஜன்சி தலைவர் யூகியோ அமானோ ஈரானுக்கு வருகை தந்துள்ளார். அதிகாலையில் டெஹ்ரானுக்கு வருகை தந்த அமானோ, ஈரான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஈரான் அணுசக்தி ஏஜன்சி தலைவர் ஃபிர்தவ்ன் அப்பாஸி தவானியுடன் பேச்சு வார்த்தை நடத்திய அமானோ, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி அக்பர் ஸலேஹி மற்றும் ஈரான் முக்கிய அணுசக்தி மத்தியஸ்தர் ஸஈத் ஜலீலி ஆகியோருடன் சந்திப்பை நடத்தினார்.
Subscribe to:
Posts (Atom)