May 24, 2012

லாரல் பள்ளியை நெருங்கிய கா.மு.பெ.மேல்நிலைப்பள்ளி



"இக்கரைக்கு அக்கரை பச்சை" என்பதுபோல் நமதூர் கல்வி நிலையங்களைவிட பள்ளிகொண்டானில் அமைந்துள்ள லாரல் மேல்நிலைப்பள்ளியின் கல்வித் தரம் சற்றுகூடுதல் என்ற கருத்து பலரிடமும் நிலவுகிறது. லுஹர், அஸர் & மஃரிப் தொழுகைகளும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையும்கூட தவறுகிறது என்பதை அறிந்தும்கூட தரமான படிப்பு என்ற மோகத்தில் தமது பிள்ளைகளை  6-7 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள லாரல் மேல்நிலைப் பள்ளிக்கு அனுப்பும் அதிரை  பெற்றோர்களும் உளர்.

https://results.reportbee.com/ என்ற தளத்தில் கிடைக்கும் +2 தேர்வு முடிவு புள்ளிவிபரங்களைப் பார்க்கும்போது அதிரையிலுள்ள காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியரின் தேர்ச்சி விகிதம் லாரல் பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை கிட்டத்தட்ட நெருங்கியிருப்பது கவனிக்கதக்க மகிழ்வான செய்தி. அதாவது இருபள்ளிகளுக்கும் உள்ள தேர்ச்சி விகிதம்  2.5% மட்டுமே வித்தியாசம்!

100% தேர்ச்சி  விகிதத்தை 10% மேலும் கூடுதலாக முயன்றால் இன்ஷா அல்லாஹ் அதிரை வரலாற்றில் 100% வெற்றிபெற்ற என்ற பெருமையை கா.மு.பெண்கள் மேல்நிலைப்பள்ளி விரைவில் எட்டிவிடும்.

கூடுதல் கட்டணம், பெற்றோரின் கண்காணிப்பிலிருந்து தொலைவு, கடமையான தொழுகைகளைத் தவறவிடும் சூழல் இருந்தும் அதிரையை விட்டு தரமான கல்வி என்ற ஒரே காரணத்துக்காக தங்கள் பிள்ளைகளை பள்ளி இடமாற்றம் செய்யும் பெற்றோர்களுக்கு, அதிரை கா.மு.பெ.மேல் நிலைப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அவசியம் சிந்திக்கக்கூடியது.

இன்னொரு பக்கம், கா.மு.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி லாரல் பள்ளியைவிட அதிகமான பாடப்பிரிவுகளைக் கொண்டுள்ளதும் கவிக்கப்பட வேண்டிய விசயம்.

அதிரை கல்வி நிலையங்கள் மற்றும் லாரல் பள்ளியின் தேர்ச்சி விகித புள்ளிவிபரங்களை வாசகர்களின் பார்வைக்கு வைக்கிறோம்.










No comments:

Post a Comment