May 17, 2012

தம்புள்ளவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு மிரட்டல்



 தம்புள்ளை பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்களின் வணக்கஸ்தலத்தை அண்மையில் சிலர் இடிக்க முயன்றனர். இதனையடுத்து அங்கு சில நாட்களாக பதற்ற நிலை நிலவுகிறது.

இந்நிலையில், அங்குள்ள முஸ்லிம்களுக்கு அனாமதேய கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதில் தம்புள்ள புனித இடத்தில் வசித்து வரும் முஸ்லிம்கள் உடனடியாக வெளியேறுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்
. இந்த கடிதத்தினை அனுப்பியவர் யார் எனத் தெரியவில்லை. கடிதத்தில் அனுப்பியவர் பெயர் எதுவும் குறிப்பிடப்படவில்லை. சிங்கள,பௌத்த நாட்டுப்பற்றாளர்கள் என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முஸ்லிம்களை தரக்குறைவாக விமர்சனம் செய்து அந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அமைச்சர் ஜனக பண்டாராவை புகழ்ந்தும் அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment