இவ்வாறான ஒரு சம்பவம் மெக்ஸிகோ எல்லை அருகில் நடைபெற்று அதில் அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டிருந்தால் அமெரிக்க மக்களின் எதிர்பார்ப்பு எப்படி இருந்திருக்கும் என கேட்டுள்ள அவர், ஆனால் 24 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு அவர்களின் குடும்பத்தினரிடமோ,பாகிஸ்தானிடமோ யாரும் மன்னிப்பு கூட கேட்கவில்லை என சுட்டிக்காட்டினார்.
மன்னிப்பு கேட்பதற்கு தைரியம் வேண்டும் எனத் தெரிவித்துள்ள பிலாவல், நேடோவின் எதிர்கால இலட்சியம், வாக்குகளை விட முக்கியமானது எனக்குறிப்பிட்டுள்ளார். நியுயார்க் நகரில் கட்சி பிரதிநிதிகளிடையே பேசிய அவர், ”அமெரிக்கா பாகிஸ்தானில் நடத்தும் ட்ரோன் தாக்குதலையும் நிறுத்த வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார். பாகிஸ்தான் பகுதியில் அனுமதியின்றி ட்ரோன் தாக்குதல் நடத்துவது அதன் இறையாண்மையை மீறும் செயலாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
நேட்டோ படைகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி வழங்க மறுத்ததால், அதிபர் சர்தாரியை சிகாகோ மாநாட்டில், ஒபாமா சந்திக்கவில்லை.
No comments:
Post a Comment