கிருஷ்ணகிரி:மதுரை இளைய ஆதீனமாக பாலியல் சேட்டை புகழ் நித்யானாந்தா நியமிக்கப்பட்டதற்கு சங்கரராமன் கொலைவழக்கு புகழ் சங்கராச்சாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மடத்தில் புதன்கிழமை ஸ்ரீ நந்தன ஆண்டு பஞ்சாங்கத்தை வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சங்கராச்சாரி; “மதுரை இளைய ஆதீனமாக நித்யானந்தரை நியமித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. திருஞானசம்பந்தர் பரம்பரையைச் சேர்ந்தவர்களே மதுரை ஆதீனமாக வரமுடியும். எனவே, நித்யானந்தருக்கு பட்டம் சூட்டியது தவறு.
மேலும், ஆதீனமாக வருபவர்கள் மொட்டை போட்டு ருத்ராட்சம் அணிந்திருக்க வேண்டும். ஆனால், நித்யானந்தர் பதவியேற்ற நாளிலிருந்து தலை முடியுடன் உள்ளார். எனவே, அவர் ஆதீனகர்த்தராகத் தகுதியவற்றவர். அவரது நியமனம் குறித்து சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு எங்கள் ஆதரவு உண்டு.” என்று தெரிவித்தார்.
சங்கரராமன் கொலைவழக்கிலும், பின்னர் தொடர்ந்து வெளியான பாலியல் காமக் களியாட்டங்களிலும் சங்கராச்சாரியின் பங்கு குறித்து பல்வேறு பத்திரிகைகளில் செய்திகள் வெளியாயின. மறைந்த பிரபல எழுத்தாளர் ஒருவரே சங்கராச்சாரியின் மீது பாலியல் வெறியை பகிரங்கப்படுத்தினார்.
இந்நிலையில் சங்கராச்சாரி நித்யானந்தாவை இளைய ஆதீனமாக நியமிக்க கூடாது என்று கூறியுள்ளார். ஆனால், தான் எய்த அம்பு தன் பக்கமே திரும்பி விடுமோ என்ற அச்சத்தில் நித்தியின் பாலியல் சேட்டைக் குறித்து சங்கராச்சாரி பேட்டி அளிக்கவில்லை. ஆனால், அவரது பரம்பரை சரியில்லை, தலைமுடி வைத்துள்ளார் போன்ற அரைவேக்காட்டு காரணங்களை கூறியுள்ளார்.
நித்தியும், சங்கரனும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தாம் என்பது தமிழக மக்களுக்கு தெரிந்த விஷயம்.
No comments:
Post a Comment