ஜூனியர் விகடன் பத்திரிக்கை தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் நடத்திய சர்வேயில் நமது தொகுதி எம்.எல்.ஏ. திரு.ரங்கராஜன் அவர்களைப் பற்றிய மக்கள் கருத்தை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் 100 பேர் வீதம் சந்தித்து கருத்துக்கணிப்பு நடத்தியதாகச் சொல்லப்பட்டது. அந்த 100 பேரில் அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்கள் எவரும் இருந்திருப்பின் பகிர்ந்து கொள்ளலாம்.
ஜூ.வி. கருத்துக்கணிப்பில் நமது தொகுதி எம்.எல்.ஏ திரு.ரங்கராஜ் அவர்களுக்கு சாதகமான கணிப்பாக இல்லை. கிட்டத்தட்ட இதே கருத்தே அதிரைவாசிகளிடமும் இருந்தாலும், மென்மையானவர், பழகுவதற்கு இனிமையானவர் என்ற அவரது குணங்களால் மாற்று எம்.எல்.ஏவைத் தேடுமளவுக்கு நிலைமை இன்னும் மோசமடையவில்லை. எனினும், அரசியல் எதிர்காலத்த்தையும், தொகுதியின் நலனை கருத்தில்கொண்டு பார்க்கும்போது இவைமட்டும் போதாது என்றே சொல்லவேண்டும்.
திரு.ரங்கராஜன் எம்.எல்.ஏ அவர்கள் அதிரைமீது தனியான கரிசணம் கொண்டவர் என்ற எண்ணம் பலரிடமும் உள்ளது. எனினும், சொல்லிக்கொள்ளும்படியாக அதிரையில் அரசு திட்டங்கள் எதையும் கொண்டுவந்ததாகத் தெரியவில்லை. ஆளுங்கட்சியுடன் காங்கிரஸுக்கு சுமூக உறவில்லை என்றாலும், 2014 மக்களவை தேர்தலில் கூட்டணி மாற்றம் ஏற்பட்டால் தமிழக அரசின் ஒத்துழைப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.
எனினும், இன்னும் இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டும். அதற்குள் மக்கள் விரக்தியடைவதற்குள்ளாக திரு.ரங்கராஜன் அவர்கள் தொகுதி மக்களை மாதம் ஒருமுறையேனும் சந்தித்து அவர்களின் குறைகளைக் களைய முன்வந்தால் நான்காவது முறையாகவும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு இல்லாமலில்லை!
ஊதுற சங்கை ஊதிக்கொண்டே இருப்போம்!
No comments:
Post a Comment