May 1, 2012

உஸ்வத்துர் ரசூல் பெண்கள் மதரஸா பட்டமளிப்பு விழா


அதிரைக்கு பெருமை சேர்க்கும் மதரஸாக்களில் ஒன்றான பாரம்பரியமிக்க உஸ்வத்துர் ரசூல் பெண்கள் மதரஸாவின் பட்டமளிப்பு விழா. இன்று (1/05/2012) செவ்வ்வாய்க் கிழமை காலை நடை பெற்றது.

உள்ளூர் வெளியூர் உட்பட சுமார் 14 ஆலிமாக்கள், ஆலிமா பட்டம் பெற்றனர். செக்கடிப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உலமா பெருமக்களின் பயானை தொடர்ந்து, யூசுஃப் ஆலிம் ஹஜரத் அவர்கள் பட்டம் பெறும் ஆலிமாக்களின் பெயர்களை வாசிக்க, அல்ஹாஜ் முஹம்மது குட்டி ஆலிம் அவர்கள் பட்டத்தை(சனது) ஆலிமாக்களின் தந்தைமார்கள் மற்றும் சகோதரர்களின் கைகளில் வழங்கினார்கள். இக்பால் ஹாஜியார் அவர்கள் பரிசுகள் வழங்க துஆவுடன் லுஹர் தொழுகையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

முன்னதாக காலை 7 மணி முதலே ஆலிமாக்களின் பயான் மற்றும் பைத் கராஅத் போன்றவை மதரஸா வளாகத்தில் நடை பெற்றது.

மதரஸாவில் பயிலும் மாணவிகளின் பெற்றோர்கள் உள்ளூரிலிருந்தும் வெளியூர்களிலிருந்தும் திரளாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர். மதரஸாவின் வெளியிலும் பெண்கள் கூட்டமாக அமர்ந்திருந்து பயானை கேட்டனர்.

பட்டம் பெற்ற ஆலிமாக்களை MMWA BROTHERS மனதார பாராட்டுகிறது.
thanks   அதிரை எக்ஸ்பிரஸ் 

No comments:

Post a Comment