April 4, 2012

இருட்டில் ஒரு திருட்டு - உஷார்...


நேற்று இரவு (ஞாயிற்றுகிழமை) சுமார் 12 மணியளவில் அதிரை  தட்டாரத்தெருவின் ஒரு வீட்டில் திருட்டு நடந்திருக்கின்றது.


ஒரு காலத்தில் திருடன் திருடுவதற்கு முன் 'வீட்டில் யாரும் வசிக்கிறார்களா என்று பார்ப்பான், இல்லாவிடில் வீட்டில் ஆண்கள் இருக்கின்றார்களா என்று பார்ப்பான், அதுவும் இல்லாவிடில் வசதியான வீடா என்று பார்ப்பான்'.. ஆனால் இப்பொழுது இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. மாறாக 'வீட்டில் மின்சாரம் இருக்கின்றதா என்று பார்க்கின்றான்'.. அந்த வகையில்தான் நேற்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு மின்வெட்டு ஏற்பட்டிருக்கின்றது. மின்வெட்டு ஏற்படுவது உறுதி என்ற வாக்குறுதி மட்டும் தமிழ்நாட்டில் அமலில் இருப்பதால் அரிக்கன் விளக்கு ஏற்றி வைத்திருந்திருக்கிறார்கள்..


மின்வெட்டு ஏற்பட்ட அச்சமயம் பார்த்து திருடன் வீட்டினுள் புகுந்து நான்கு அலைப்பேசிகள், மற்றும் ஒருவர் கழுத்தில் அணிந்திருந்த நகையை லாவகமாக எடுத்துள்ளான். ஒரு அறையில் யாரோ வந்திருப்பதை சரிவர உணராது எழுந்திருத்து பார்த்துவிட்டு தூங்கியதால் அந்த அறையையும், மேலும் இன்னொரு அறையையும் வெளியில் சில பொருட்களை வைத்து தாழிட்டு தப்ப நினைத்த சமயம் மின்சாரம் வந்திருக்கின்றது. ஆனால் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டிருந்ததால் அனைவருக்கும் தெரியவில்லை.. கூடத்தில் படுத்திருந்த ஒரு நபர் மட்டும் எழுந்ததுகண்டு சந்தம்போடவேண்டாம் என்று கூறிவாறு தப்பிக்க நினைக்கையில் அந்த நபர் கத்தியிருக்கின்றார்.. இதைக்கேட்டு ஒரு அறையில் இருந்தவர்கள் தாழிட்ட கதவை வேகாமாக தள்ளியதன்மூலம் திறந்துகொண்டு வெளியே வருவதற்குள் திருடன் வெளியேறிவிட்டான்.. இது பற்றி காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றது..


பயனுள்ள குறிப்புகள்:

  1. தற்பொழுது அதிகம் மின்வெட்டு ஏற்படுவதால் தூங்குவதற்கு முன் வீட்டினுள் உள்ள அனைத்து மூலை முடுக்குகளிலும் அரிக்கன் விளக்கைகொண்டோ, டார்ச் விளக்கை கொண்டோ நோட்டமிட்டபின் தூங்கச்செல்லுங்கள்
  2. தனித்தனியாக படுப்பதைவிட குறைந்தது இரண்டுநபர்களாகவாவது சேர்ந்து படுப்பது சிறந்தது
  3. படுக்கைக்கு அருகில் டார்ச் விளக்கை வைத்திருந்தாள் அவன் முகத்தில் எவ்வளவு தூரத்திலிருந்து அடித்தாலும் தன்னை அடையாளம் கண்டுகொன்றுவிடகூடாதென்று  தலைதெரித்து ஓட்டம் பிடிப்பான்
  4. நீங்கள் உறங்குமிடத்திற்கு சிறு தொலைவில் கட்டை,  கல்,  விளையாட்டு மட்டை, போன்றவற்றை வைத்துகொண்டால் உதவியாக இருக்கக்கூடும்
  5. திருடனை நீங்கள் கண்டுபிடித்து அவன் உங்களை கண்டுபிடிக்காவிடில் சமையல் கூடத்தில் போய் மிளகாயபோடியை அவன்முன்/பின் சென்று சரிவர கையாண்டால் சுடு தேங்காய்க்கு மாட்டிய எளியைப்போல் மாட்டிக்கொள்வான்
  6. எந்த வகை திருட்டாக இருந்தாலும் காவல்துறையிடம் தெரிவிக்கவேண்டும். நம் புகாரை வைத்து நமக்கோ அல்லது பிறர் பாதிக்காமல் இருப்பதற்கோ இத்தகைய புகார்கள் உதவியாகவும், திருடனுக்கும் ஒரு பயம் இருக்கும்
  7. தூங்கும்பொழுது நகை அணிவதை தவிர்க்கவும்
  8. கூச்சலிடும் சூழ்நிலை இருந்தால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கூச்சளிட்டவாரே அவன் செல்லும் வழியில் ஓடுங்கள். எதிர் வீட்டார்/சாலையில் உள்ளவர்கள் பிடிக்க உதவும்
  9. வீட்டில் குறைந்தது ஒரு ஆணாவது இருந்தாகவேண்டும்

No comments:

Post a Comment