புது டெல்லி, ஜன. 24 - ஜம்முதாவி எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு தீவிரவாத தாக்குதல்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு தொடர்பு உள்ளதாக அறிவித்துள்ள மத்திய அரசு, அவற்றில் தொடர்புடைய 10 பேர்களின் பெயர்களை பகிரங்கமாக வெளியிட்டு உள்ளது.
தீவிரவாதம் தொடர்பாக குற்றங்களில் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தொடர்புகள் உள்ளன என மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, கூறியிருந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஷிண்டே கூறியது சரியானதே. தீவிரவாதத்தில் ஆர்.எஸ்.எஸ்.க்கு தொடர்பு உள்ளது நிஜம்தான் என மத்திய அரசு கூறியுள்ளது.