![]() |
ரிசானாவின் குடும்பத்தார் |
இலங்கையிலிருந்து
சவூதி அரேபியாவுக்கு வீட்டுப்பணிப்பெண்ணாகச் சென்ற றிசானா நபீக்
என்பவருக்கு இன்று இலங்கை நேரம் காலை 11.40 மணியளவில் மரண தண்டனை
நிறைவேற்றப்பட்டுள்ளது. சவூதி
அரேபியாவில் வீடொன்றில் பணிப்பெண்ணாகக் கடமையாற்றிய சமயம் அவ்வீட்டின்
சிசு ஒன்றைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் றிசானாவுக்கு மரண
தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஷரீஆ
சட்டப்படி பாதிக்கப்பட்டவர்கள் மன்னிப்பு வழங்காத நிலையில் இத்தண்டணையை
இரத்துச் செய்ய முடியாது என அந்நாட்டு நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் குறித்த
பணிப்பெண்ணை மரண தண்டனையிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. குறித்த குழந்தையின் பெற்றோரை அணுகி
மன்னிப்பை பெற்றுக்கொள்ள எடுக்கப்பட்ட சகலவிதமான முயற்சிகளும் பயனளிக்காத
நிலையில் இன்று காலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment