மேற்கு
டெல்லியில் உள்ள கபாஷேரா என்ற இடத்தில் கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம்
தேதி, வீட்டுக்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை காணாமல்
போனது. இதுபற்றி அவள் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார்
வழக்குப்பதிந்து, குழந்தையைத் தேடி வந்தனர். இந்நிலையில்
2 நாட்களுக்குப் பிறகு, அந்த குழந்தை அருகில் உள்ள பண்ணை இல்ல வளாகத்தில்
பிணமாக கிடந்தாள். போலீசார் நடத்திய விசாரணையில், வழி தெரியாமல் நின்ற
அந்தக் குழந்தையை பண்ணை இல்லத்தின் காவலாளி பாரத் சிங் (வயது 60) உள்ளே
அழைத்துச் சென்று கற்பழித்து கொலை செய்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக பாரத் சிங்கை போலீசார் கைது
செய்து வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்ற நீதிபதி
வீரேந்தர் பட், குற்றவாளி பாரத் சிங்கிற்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை
அளித்து தீர்ப்பளித்தார்.
No comments:
Post a Comment