கலிபோர்னியாவில்
பள்ளியில் சொல்லித் தரும் யோகா வகுப்புகளில் இந்துத்துவத்தை சேர்த்து
கற்பிப்பதாகக் குற்றம்சாட்டி சிலர் பெற்றோர்கள் அந்த வகுப்புகளை நீக்குமாறு
வலியுறுத்தி வருகின்றனர். அமெரிக்காவில்
உள்ள பல்வேறு பள்ளிகளில் குழந்தைகளுக்கு யோகா கற்றுத் தருகின்றனர்.
கலிபோர்னியாவில் உள்ள ஆலிவ்ஹெய்ன் பயனியர் துவக்கப்பள்ளியிலும்
மாணவர்களுக்கு யோகா கற்றுத் தருகின்றனர். இதற்கு இப்பள்ளியில் படிக்கும்
மாணவர்களின் பெற்றோர்களில் சிலர் ஆதரவும், பலர் கடும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். யோகா வகுப்புகளில்
சூர்ய பகவானுக்கு நன்றி சொல்லுமாறு கூறுகின்றனர்.
இதைப் பார்த்தால் யோகா வகுப்பு போன்று இல்லை ஏதோ மத போதனை வகுப்பு போன்று
உள்ளது என்று ஒரு மாணவனின் தாய் மேரி ஈடி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு
தனது மகனின் பள்ளிக்கு சென்று யோகா வகுப்புகளைப் பார்த்த அவர் முதல்
வேலையாக சிறுவனை அந்த வகுப்பில் இருந்து நிறுத்திவிட்டார். இதையடுத்து
யோகா வகுப்புகளில் இந்துத்துவ கொள்கைகளை கற்றுத் தருவதாக சில பெற்றோர்
புகார் தெரிவித்துள்ளனர். யோகா வகுப்புகளுக்கு இஷ்டப்பட்டவர்கள் மட்டும்
செல்லலாம் என்று பள்ளி நிர்வாகம் அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment