January 22, 2013

ஹிந்துத்துவா தீவிரவாதத்தை வெளிப்படுத்திய மத்திய உள்துறை அமைச்சர்: பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்பு!




K. M. Shareef
புதுடெல்லி:ஜெய்ப்பூர் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் ஹிந்துத்துவா தீவிரவாதத்தை வெளிப்படுத்திய மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டேவின் கருத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்றுள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் கே.எம்.ஷெரீஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல ஆண்டுகளாக இதனை உணர்ந்த அரசியல் தலைவர்கள், அறிவுஜீவிகள், மனித உரிமை ஆர்வலர்கள் குண்டுவெடிப்புகள், அரசியல் கொலைகள், வகுப்புவாத கலவரங்களின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் இயக்கும் ஹிந்துத்துவா தீவிரவா அமைப்புகளின் கரம் இருப்பதாக கூறி வந்தன.

ஆனால், அரசோ அரசியல் பின்னடைவுக் குறித்த பயம் அல்லது மிதவாத ஹிந்துத்துவா துருப்புச்சீட்டை வைத்து ஆடும் நோக்கில் செவிடன் காதில் ஊதிய சங்குபோல மெளனம் சாதித்தது.விளைவு,அதன் வளர்ச்சி நாட்டின் சமூக கட்டமைப்பை துண்டாடியுள்ளது.ஆர்.எஸ்.எஸுக்கு ஆதரவான ஊடகங்களும்,போலீஸ் மற்றும் உளவுத்துறையைச் சார்ந்த உயர் அதிகாரிகளும் குண்டுவெடிப்புகளின் பழியை முஸ்லிம்கள் சுமத்தி, அப்பாவி முஸ்லிம்களை கைதுச்செய்து சித்திரவதைச்செய்து குற்றத்தை ஒப்புக்கொள்ளவைத்து சிறையில் அடைத்துள்ளனர்.பல்வேறு கறுப்புச் சட்டங்கள் இவர்கள் மீது பாய்ந்துள்ளன.
தேசிய புலனாய்வு ஏஜன்சி சம்ஜோதா எக்ஸ்பிரஸ், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்பு வழக்கிளில் ஹிந்துத்துவா அமைப்புகள் மீது குற்றம் சாட்டியுள்ளது.
உறுதியான நடவடிக்கைகள் மூலம் நடுநிலையான, திறமையான போலீஸ் அதிகாரிகள் மற்றும் தண்டனை சட்டங்களை பயன்படுத்தி ஹிந்துத்துவா வலையை அழித்தொழிக்க மத்திய அமைச்சர் முன்வரவேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் விரும்புகிறது.மேலும் அரசு பொய்யான உளவுத்துறை தகவல்கள் மூலம் அப்பாவி முஸ்லிம்கள் மீது பழிபோடப்பட்டுள்ளதை ஒப்புக்கொள்வதுடன் அவர்களை ஜாமீனில் விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கிறது.

No comments:

Post a Comment