பெங்களூர்:
அவசர லேசர் சிகிட்சை அளிக்காவிட்டால் கேரள மாநில பி.டி.பி கட்சி தலைவர்
அப்துல் நாஸர் மஃதனியின் கண்பார்வை முற்றிலும் இழந்துவிடும் என்று மருத்துவ
அறிக்கை கூறுகிறது. இடது கண்ணின் பார்வை திரும்ப கிடைக்காத அளவுக்கு
இழந்துவிட்டதாகவும், வலது கண்ணின் பார்வை 80 சதவீதம் இழந்துவிட்டது என்றும்
சவுகியா மருத்துவமனையில் மருத்துவ
நிபுணர்கள்
நடத்திய பரிசோதனையில் தெரியவந்துள்ளது. மஃதனி முற்றிலும் கண்பார்வை
இழக்கும் நிலையில் உள்ளார் என்று சவுகியா மருத்துவமனை மெடிக்கல் இயக்குநர்
டாக்டர் ஐஸக் மத்தாய் தெரிவித்துள்ளார். அகர்வால் கண் மருத்துவமனையில் அவசர
சிகிட்சை அளிக்கவேண்டும் என்று சிறை அதிகாரிகளுக்கு அறிக்கை
அளிக்கப்பட்டுள்ளது.
மஃதனியை
பாதித்த இதர நோய்களும் கடுமையாக உள்ளன. நீரழிவு நோய் தொடர்பான பல்வேறு
நோய்கள் ஆபத்தான் நிலையில் உறுப்புகளை பாதித்துள்ளன. ஐந்து வாரங்கள்
தொடர்ச்சியாக சிகிட்சை அளிக்கப்பட்டால்தான் நோய்களை கட்டுப்படுத்த
முடியும். ஆரோக்கிய நிலை மேம்பட நீண்டகால தொடர் சிகிட்சை
அளிக்கப்படவேண்டும். தற்போது தினமும் நான்கு மணிநேரம் வீதம் பிசியோதெரபி
சிகிட்சை அளிக்கப்படுகிறது. நீர்க்கட்டுதல்,கால் உழைச்சல், பழுப்பு, உயர்
இரத்த அழுத்தம், மூச்சுத்திணறல் ஆகியவற்றை நீக்குவதற்கான சிகிட்சைகள்
அளிக்கப்படுகின்றன.
மனைவி சூஃபியா, மகன் உமர் முக்தார் ஆகியோர் அருகில் இருப்பது மஃதனிக்கு மனோரீதியாக ஆறுதலை தந்துள்ளது என்று டாக்டர் ஐஸக் மத்தாய் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment