January 9, 2013

பாகிஸ்தான் முன்னாள் ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர் மரணம்: ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அனுதாபம்!



டெல்லி:பாகிஸ்தான் ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் காழி ஹுஸைன் அஹ்மத் அவர்களின் மறைவுக்கு இந்திய ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அனுதாபச் செய்தியை வெளியிட்டுள்ளது.
கடந்த ஜனவரி 6-ஆம் தேதி காழி ஹுஸைன் அஹ்மத் மரணமடைந்தார். பாகிஸ்தானில் இயங்கும் ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவராக கடந்த 1987-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகித்தார் காழி ஹுஸைன்.

இதுத் தொடர்பாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமீர்(தலைவர்) ஜலாலுத்தீன் உமரி வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில், “காழி ஹுஸைன் அஹ்மத் தனது வாழ்க்கை முழுவதுமே இஸ்லாத்திற்காக அர்ப்பணித்தவர். அவர் தனது நாட்டிற்காக மட்டுமல்லாமல் அனைத்து முஸ்லிம் சமூகத்தையும் குறித்த கவலையை கொண்டவர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment