January 22, 2013

உவைசி குடும்பத்தை குறிவைக்கும் கா(வி)ல்துறை : தம்பியை தொடர்ந்து அண்ணனுக்கும் சிறை !


ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளரான, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி "சார்மினார் ஆக்கிரமிப்பு கோவில்" விஷயத்தில் போராடிய "உவைசி" குடும்பத்தை குறிவைத்து, அக்பருத்தீன் எம்.எல்.ஏ.வை தொடர்ந்து, அசதுத்தீன் எம்.பி.யையும் சிறையிலடைத்துள்ளார் கடந்த 2005ம் ஆண்டில் ஹைதராபாத்-மும்பை "NH-9" சாலை விரிவாக்கத்தின்போது, சங்காரெட்டி பள்ளிவாசலை இடிக்க முற்பட்டபோது, முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட
நேர்ந்தது அப்போது, அரசு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட "மஜ்லிஸ்" கட்சித்தலைவர்கள் உள்ளிட்ட 30 முஸ்லிம்கள் மீது வழக்கு (Crime No 130/2005) பதிவு செய்யப்பட்டது 8ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட இந்த வழக்கை, இப்போது தூசி தட்டிடுப்பது "பழிவாங்கும் செயல்" என்கின்றனர், CLMC (Civil Liberties Monitoring Committee) அமைப்பினர்.முன்னதாக, அந்த வழக்கில் "உவைசி சகோதரர்கள்" உள்ளிட்ட முஸ்லிம்கள், நீதிமன்றத்தில் ஆஜராகி "ஜாமீன்" பெற்றனர் தற்போது "காங்கிரசுக்கு அளித்துவந்த ஆதரவை மஜ்லிஸ் கட்சி விலக்கிக்கொண்டதையடுத்து" ஹிந்துத்துவா சிந்தனாவாதி "கிரண்குமார்" மஜ்லிஸ் கட்சியையும் முஸ்லிம் சமூகத்தையும் அச்சுறுத்தும் வகையில், கைது நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார் இதனால், ஹைதராபாத் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கடும் "பதற்றம்" நிலவுகிறது 40ஆண்டுகாலமாக மக்களின் நன்மதிப்பை பெற்ற குடும்பத்தை அழிக்க நினைத்து செயல்படும் கிரண் குமாரால், காங்கிரஸ் கட்சி கடும் விளைவுகளை சந்திக்கும், என்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment