ராமல்லா:2013-ஆம் ஆண்டு ஃபலஸ்தீன் சுதந்திரத்திற்கான வருடம் என்று ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸ் கூறினார். ஃபத்ஹ் இயக்கத்தின் 48-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார் அவர்.
மேலும் அவர் கூறியது: சுதந்திரம் ஃபலஸ்தீன் மக்களுக்கு அருகில் வரும் ஆண்டு இது. சிறைக்கைதிகள் விடுதலை அடைவார்கள். புலன்பெயர்ந்தோர் தாயகம் திரும்புவார்கள். ஃபலஸ்தீன் நாட்டிற்கான பிறப்புச் சான்றிதழ்தாம் கடந்த மாதம் ஐ.நாவில் கிடைத்த பார்வையாளர் நாட்டு அந்தஸ்து. இனி பூரண விடுதலைக்கான போராட்டமாகும். ஃபலஸ்தீன் மக்களிடையே ஒற்றுமை ஏற்படவேண்டும். தேச அந்தஸ்தை பெற தேசிய ஐக்கியம் முக்கியம். இவ்வாறு மஹ்மூத் அப்பாஸ் கூறினார்.
ஃபத்ஹின் ராணுவ பிரிவாக இருந்த அல் ஆஸிஃபா இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்திய 1965-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியை நினைவுக்கூறுவதை அவர்கள் ஃபத்ஹின் ஆண்டு விழாவாக கடைப்பிடிக்கின்றனர்.
இதனிடையே, காஸ்ஸாவிற்கு கட்டிடம் கட்ட தேவையான பொருட்களை கொண்டுவருவதற்கான தடையை பாதி அளவில் இஸ்ரேல் நீக்கியுள்ளது.
No comments:
Post a Comment