January 12, 2013

இந்திய வீரர்களை பாக். ராணுவம் கொல்லவில்லை, 3வது நாடு விசாரிக்கட்டும்: ஹினா. . .

இஸ்லாமாபாத்: இந்திய வீரர்கள் 2 பேரை பாகிஸ்தான் ராணுவம் கொல்லவில்லை என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், பாகிஸ்தான், இந்தியாவுக்கு இடையேயான உறவை மேம்படுத்த கடந்த 4 ஆண்டுகளாக எங்கள் அரசு பாடுபாட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இருந்து வரும் அறிக்கைகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் எங்கள் ராணுவ வீரர் லான்ஸ் நாயக் அஸ்லாம் கொல்லப்பட்டார். அப்போது வழக்கமாக எடுக்கப்படும் நடவடிக்கைகளைத் தான் எங்கள் அரசு எடுத்தது. பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சரோ, அல்லது பொறுப்பில் இருப்பவர்களோ எந்த ஒரு அறிக்கையும் விட்டதை யாரும் பார்த்திருக்க முடியாது. இங்கு நடத்தப்பட்ட விசாரணையில் 2 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தான் ராணுவம் பொறுப்பில்லை என்பது தெரிய வந்துள்ளது. என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நாங்கள் விசாரணையை முடித்துவிட்டோம். இதை இந்தியா நம்பாவிட்டால் மூன்றாவது நாட்டை வைத்து விசாரணை நடத்தலாம் என்றார்.

No comments:

Post a Comment